திருநெல்வேலி, பிப். 23: எழுத்தாளர் சு. ஜெயராஜ் (81), பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.பாளையங்கோட்டை, குலவணிகர்புரம் அருகே உள்ள வீரமாணிக்கப்புரத்தில் வசித்து வந்த ஜெயராஜ், ஹீப்ரு மொழியில் இருந்து மோசேயின் "தோரா', சாலமனின் "நாளஜ்' ஆகிய நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.இதில் தோரா, புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. "நாளஜ்' மொழிபெயர்ப்பு பணி முடிந்துவிட்ட நிலையில், அதை நூல் வடிவில் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த மொழிபெயர்ப்பு பணியின்போதே பக்கவாத நோயால் ஜெயராஜ் பாதிக்கப்பட்டார். 4 மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.அவரது உடலுக்கு, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தொ. பரமசிவம், "யாதுமாகி' பதிப்பக உரிமையாளர் லேனா. குமார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 4:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 2/24/2010 4:11:00 AM
தினமணி நேயர்கள் சார்பில் அவரது குடும்பத்தார்க்கு நம் இரங்கல்கள்!
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்