சென்னை, பிப்.22: திமுக பொதுக்குழுவில் பங்கேற்ற தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் அதிமுக திங்கள்கிழமை மனு அளித்தது.அதிமுக எம்.எல்.ஏ.க்களான கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜயங்கொண்டம் ராஜேந்திரன் இருவரும் முதல்வர் கருணாநிதியை அண்மையில் தனித்தனியே சந்தித்தனர்.தொகுதிப் பிரச்னை தொடர்பாக அவரிடம் கோரிக்கை மனு அளித்ததாக இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து, இரு எம்.எல்.ஏ.க்களும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுக எம்.எல்.ஏ.க்களாகவே தொடர்கின்றனர்.பொதுக் குழுவில்... இந்த நிலையில், திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து, "இருவரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்று பேரவைத் தலைவரிடம் அதிமுக சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.கட்சியின் பேரவைக் கொறடா கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மனுவை பேரவைத் தலைவரிடம் அளித்தனர்.மனுவில், ""திமுக கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், இரு எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் இருந்து கட்சி தாவியுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. எனவே, இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், இது குறித்து தாம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.பேரவை விதி என்ன?: இதுகுறித்து, சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகளிடம் கேட்ட போது, ""ஒரு கட்சியின் கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொள்வது வேறு; அதில் பங்கெடுப்பது என்பது வேறு. கூட்டத்தின் முன்வரிசையில் உட்கார்ந்து இருந்தால் அவர் பார்வையாளராகவே கருதப்படுவார். மேடைக்குச் சென்று தலைவர்களுக்குப் பரிசுகளை வழங்கினாலோ? அல்லது பேசினாலோ? கூட்டத்தில் பங்கேற்றதாகக் கருதப்படுவர். அதிமுகவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களைப் பொறுத்தவரை கூட்டத்தில் பார்வையாளர்களாக மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது'' என்றனர்.ராதாகிருஷ்ணன்: இந்தப் பிரச்னை குறித்து கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""பேரவைத் தலைவர் இதுகுறித்து விளக்கம் கேட்டால் அதற்கு உரிய பதிலை அளிப்பேன். இதுவரை அவரிடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் வரவில்லை. இரண்டு ஆண்டுகளாக பேரவையில் எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அதிமுக தலைமை இதுவரை விளக்கம் அளிக்கவில்லை'' என்றார்.ஜயங்கொண்டம் ராஜேந்திரன்: நான் இப்போதும் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறேன். எனவே, என்னை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டால் அதற்குரிய விளக்கத்தைத் தரத் தயாராக இருக்கிறேன்.மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாகத்தான் முதல்வரைச் சந்தித்தேன். அதேபோல, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக மீண்டும் முதல்வரைச் சந்திக்க உள்ளேன்' என்றார் ராஜேந்திரன்.
கருத்துக்கள்
விளக்கம் கேட்டல், வழக்கு மன்றம் செல்லச் சொல்லி இழுத்தடித்தல் என்று காலங் கடத்தாமல் உடனே இருவரையும் பதவி நீக்கம் செய்வதே முறையாகும். கொள்கை எதுவும் இல்லாமல் சந்தர்ப்ப நலன்களுக்காகக் காட்சி மாறுபவர்களுக்கு இதுவே தண்டனை. ஆளுங் கட்சி யினர், தாம் எதிர்க்கட்சியாக இருந்தால் இச்சூழலில்என்ன முடிவு எடுப்போம் என எண்ணிப் பார்த்து எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏறபதே முறையாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/23/2010 3:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்2/23/2010 3:36:00 AM
+++++++++++++++++++++
அமைச்சர்களை சந்திக்க தி.மு.க., பொது குழுவுக்கு சென்றேன்':ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., விளக்கம்
அருண், மணி, Chinnaram,Sarnia,Canada வ nice
by n சுரேஷ்,chennai,India 23-02-2010 17:29:01 IST |
(by K பாலா ,Ayanavaram, Chennai,India) |
by T Senthilkumar,Namakkal,India 23-02-2010 17:02:46 IST |
by Mr. Bala,India,India 23-02-2010 15:57:39 IST |
by K பாலா ,Ayanavaram, Chennai,India 23-02-2010 12:08:51 IST |
by Dr Durai,Singapore,India 23-02-2010 11:05:26 IST |
by A அருண் ,Chennai,India 23-02-2010 09:52:13 IST |
by I. thiruvalluvan,chennai,India 23-02-2010 07:59:51 IST |
by Mr Chinnaram,Sarnia,Canada 23-02-2010 07:16:28 IST |
அப்பாடி அவர்களுக்கு ஒரு விடிவு காலம். இதோ ஒரு ஜோக்கர் வந்துவிட்டார். இது போன்ற ஆட்களுக்கு ஒட்டுப்போட்ட மகாஜனங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! |
by V மணி,Chennai,India 23-02-2010 07:10:49 IST |
by V Bharat,Chennai,India 23-02-2010 03:58:48 IST |
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 23-02-2010 03:19:44 IST |
உண்ட வீட்க்கு இரண்டகம் செய்தவனே..நீ யாருக்கும் உண்மையாக இருக்க லாயாகற்றவன். உன்னை போல பலரை அரசியலில் இருந்து விரட்டனும். அப்போ தான் மக்கள் நிமதியாக இருப்பார்கள். |
by RK மனோஜ் ,CHENNAI,India 23-02-2010 02:54:12 IST |
by ah farook,jeddah,Saudi Arabia 23-02-2010 00:40:38 IST