திங்கள், 22 பிப்ரவரி, 2010

விண்ணப்பித்த 10 நாட்களில் முதியோர் உதவித் தொகை



தாம்பரம், பிப்.21: "ஆலந்தூர், பல்லாவரம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் வசிப்பவர்கள், தகுதிகள் இருந்தும் முதியோர் உதவித்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்ணப்பித்த 10 நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.சென்னை குரோம்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரிமா வட்டார சமூக விழாவில் மேலும் அவர் பேசியது:ஆதரவற்ற வயதான முதியோர்களுக்கு லட்சுமிபுரம் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக மாதம் தோறும் 30 முதியோர்களுக்கு ரூ.300 உதவித் தொகை வழங்கி வருபவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.÷தகுதியான முதியோர்கள் கட்சி வேறுபாடுகள் இல்லாமல், முதியோர் உதவித்தொகை பெற, குரோம்பேட்டை நியூகாலனி 13}வது குறுக்குத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எனது அலுவலகத்தை உடனடியாக அணுகலாம் என்றார் தா.மோ.அன்பரசன்.விழாவில் ஏழை எளிய மக்களுக்கு அரிமா சங்கம் சார்பில் சேலை, வேட்டிகள் வழங்கப்பட்டன.பல்லாவரம் நகர்மன்ற தலைவர் இ.கருணாநிதி, அரிமா ஆளுநர் ஜி.கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

இவ்வாறு நடைபெற்றால் பாராட்டலாம். எனக்குத் தெரிந்த (கணவனால் கைவிடப்பட்ட வாய்பேச இயலாப்) பெண் ஒருவர் ஊனமுற்றோர்க்கான நல உதவிக்குநாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விண்ணப்பித்து இதுவரை உதவி கிடைக்க வில்லை. எனவே, துறையினர் தரும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் எதுவும் கூறாமல் உள்ளபடியே விரைவில் உதவித் தொகைகளை வழங்க அமைச்சர் ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/22/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக