புதன், 24 பிப்ரவரி, 2010

மீரா குமாருடன் அழகிரி சந்திப்பு



புது தில்லி,​​ பிப்.23:​ நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மக்களவைத் தலைவர் மீரா குமாரை,​​ மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி சந்தித்துப் பேசினார்.இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தனக்கு சரளமாக பேச வராததால் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி அளிக்க​ வேண்டும் என்று மக்களவைத் தலைவருக்கு மத்திய அமைச்சர் அழகிரி கோரிக்கை விடுத்திருந்தார்.அரசியலமைப்புச் சட்டம் 120-வது ஷரத்தின்படி நாடாளுமன்றத்தின் அவைகளில் ஆங்கிலம்,​​ இந்தி மொழிகளில்தான் பேசவேண்டும்.​ இதைத் தொடர்ந்து மக்களவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அதிகாரத்தை உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனாவுக்கு கேபினட் அமைச்சரான அழகிரி வழங்கியிருந்தார்.​ இந்நிலையில் இதுதொடர்பாக தன்னைச் சந்தித்துப் பேசுமாறு மீரா குமார் கடந்த வாரம் கூறியிருந்தார்.​ இதைத் தொடர்ந்து மீரா குமாரை,​​ மத்திய அமைச்சர் அழகிரி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.மீரா குமாரை சந்தித்துப் பேசிய பின்னர்,​​ அழகிரி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.​ சந்திப்பு தொடர்பான விவரங்கள் குறித்து இதுவரை மக்களவைத் தலைவர் அலுவலகம் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அழகிரியையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

தந்தையை மகன் சந்திப்பதையே விந்தைச் செய்தியாகக் கருதும் ஊடக வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற அவைத் தலைவரைச் சந்திப்பதும் விந்தைச் செய்திதான் போலும். கடந்த சில திங்களாகவே சந்திக்குமாறு மீராகுமார் பலமுறை கூறியதைத் தினமணியே வெளியிட்டிருக்கும் பொழுது கடந்த வாரம் கூறினார் எனத் தவறான தகவலை வெளியிடலாமா? தான் தமிழில் பேச அனுமதி கேட்கவில்லை; மொழிபெயர்ப்புக் கருவி வசதி இருப்பதால் தமிழில் மொழிபெயர்த்துத் தரும் வசதியைத்தான் கேட்டேன்;ஊடகங்கள் தவறாக வெளியிட் விட்டன எனத் தடுமாறித் தடம் புரண்ட தகைமையின்மையைத் தினமணியே வெளியிட்டபின்பு தமிழில் பேச அனுமதி கேட்டதன் தொடர்பில் சந்தித்ததாகக் குறிப்பிடலாமா? அரண்மனைக் கன்றுக் குட்டியாகவும் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாகவும் வலம் வரும் ஒருவர் தில்லியில் அடிபணியலாமா? தமிழுரிமைக்காகப் போராடி வெற்றி பெறவேண்டாவா?தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து எமனையே சந்திக்கத் துணிந்தவரின் மகனார் தமிழ்நலன் கருதி அவைத்தலைவைரைச் சந்திக்கக் காலங் கடத்தியது முறைதானா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 4:25:00 AM

IRUVARUM SAIGAI MOZHIYIL PESIKKONDANARAA!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

By K.SUGAVANAM
2/24/2010 4:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக