திங்கள், 22 பிப்ரவரி, 2010

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தேவைப்பட்டால் போர்க் குணத்தை காட்டுவோம்: முதல்வர் மு. கருணாநிதி



சென்னை, பிப். 21: தமிழகத்துக்கு மிகுந்த பயன் தரக்கூடிய சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம். தேவைப்பட்டால் நம்முடைய போர்க் குணத்தை காட்டுவோம் என்றும் முதல்வர் மு. கருணாநிதி கூறினார்.சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி பேசியது:கட்சியின் பொதுக்குழுவில், நாட்டிலுள்ள பல்வேறு பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது எப்படி என்ற வகையில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இதில் முக்கியமாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்யும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி பங்கேற்கப் போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நம்மை நாமே வலுப்படுத்திக் கொண்டு, இப்பிரச்னையை அணுக வேண்டும்.சேது சமுத்திர திட்டம்: சேது சமுத்திர திட்டத்தில், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சாதாரணமாக புறம் தள்ளி விடமுடியாது. அது ஆக்கப்பூர்வமான செயலாக இருக்காது.அதனால்தான் இத்திட்டத்தில் இன்னும் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறோம். இத்திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் எவ்வளவு செழிப்புறும் என்பதை அனைவரும் அறிவோம். எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்.இந்த விவகாரத்தைப் பொருத்தவரை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கடத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆளுங்கட்சியாக இருப்பதால் நம்முடைய கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரு காலகட்டம் வரைதான் பொறுமை காக்க முடியும். எல்லை மீறி விடுமேயானால், போர் குணத்தையும் காட்டுவோம்.முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை, பாம்பாறு பிரச்னை என எதுவாக இருந்தாலும் அதை சமாளிக்க வேண்டியது கட்சித் தலைவர்கள்தான் என்று எண்ணாமல், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற போராட வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் நாம், அடுத்த இலக்கான பென்னாகரம் வெற்றியையும் நோக்கி செல்ல வேண்டியுள்ளது என்றார்.
கருத்துக்கள்

சமூக நலத் திட்டங்களில் சொல்லியதைச் செய்யும கலைஞர் அவர்கள் இனநல நோக்கில் சொல்லிச் சொல்லிச செய்ய மாட்டார் என்பது உலகறிந்த உண்மை. இப்பொழுது காட்டுவதாகக் கூறும் போர்க்குணம் என்பது ஈழத்தமிழர்கள் தொடர்பில் காட்டியது போன்றதா? அல்ல வெனில் அப்பொழுது ஏன் போர்க்குணத்தைக் காட்டி பேரினப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவில்லை? இவ்வாறெல்லாம் பேசினால் ஒன்று நகைச் சுவை என்று எண்ணி யாரும் பொருட்படுத்துவதில்லை. அல்லது தம் குடும்பத்தவரின்அமைச்சர் பதவி பறிபோக உள்ளதைத் தடுக்க இவ்வாறு பேசுகிறார் என உள் நோக்கத்தைக் கூறுகின்றனர். ஆகவே இவரது உரையைக் கேட்கும் அல்லது படிக்கும் யாருக்கும் வீர உணர்வு வருவதி்ல்லை என்பதை முற்றும் அறிந்த கலைஞர் அவர்கள் உணர்ந்திருப்பார். பிறகு ஏன் இம்மாதிரி யெல்லாம் பேச வேண்டும்?முன்பு ஆட்சியில் இருப்பதால்தான் நல்லது செய்ய முடிகிறது என்றவர் இப்பொழுது கைகள் கட்டப்பட்டனவெனில் அறுத்தெறிந்து ஆட்சியை உதறித்தள்ள வேண்டியதுதானே!நீர் மேல் எழுத்தாக மாறி விட்ட இவர் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம் என்கிறீர்களா? அதுவும் சரிதான். நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சிரிப்பதை விடப் பொருத்தம் பார்ப்பதில்லையே! அ

By Ilakkuvanar Thiruvalluvan
2/22/2010 3:02:00 AM

comedy panrathila karunanithikku nikar karunanithi thaan

By ragu
2/22/2010 2:39:00 AM

Aiya, you are only interested in how much money you can make as bribes if this project goes through. After collecting millions ruppees as bribes to give Medical seats to Eelam Tamils, you simply let them to be executed in thousands. When money and power is your god, why are putting out statements that has no meaning. You can't play the same theme as drama over and over again and Tamil Nadu Tamils are not that stupid the way you think.

By Ram chetty
2/22/2010 1:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக