Last Updated :
சென்னை, பிப். 23: ''முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஐவர் குழுவில் இடம்பெறாதது நீதிமன்றத்துக்கு எதிரானது அல்ல'' என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:''ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாவிட்டால், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் சட்டத்தை தமிழகம் ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா? என்ற கேள்வியை ஜெயலலிதா எழுப்பி இருக்கிறார்.கேரள அரசு பிறப்பித்த சட்டம் சரியா? இல்லையா? என்பதை ஆராய அல்ல இந்த ஐவர் குழு. மீண்டும் அணையின் பலத்தை சோதித்துப் பார்க்க}நீரின் உபயோகத்தை கண்டறிய என்றுதானே உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.உண்மை இவ்வாறு இருக்க, ஐவர் குழுவில் இடம் பெறாவிட்டால் அது எப்படி கேரள சட்டத்துக்கு ஆதரவாகிவிடும்.உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு பெஞ்ச் அல்ல; உச்ச நீதிமன்றமே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண் தான். அந்த உச்ச நீதிமன்றம் பெரியார் அணைப் பிரச்னையில் ஒரு தீர்ப்பு சொல்லி அதை இரண்டு முறை உறுதி செய்து தீர்ப்புச் சொன்னது. இதற்குப் பிறகும், அந்தத் தீர்ப்பை முடக்குகின்ற வகையில் கேரள அரசு சட்டப் பேரவையில் ஒரு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. அதற்கு கேரள் அரசு பெற்றிருக்கின்ற தண்டனை என்ன? ஒரு குழுவில் நாம் இடம்பெறுவதும், பெறாது இருப்பதும் நமது விருப்பம். நாட்டு நலன் கருதி குழுவில் இடம்பெறுவதால் ஏற்படும் சாதக பாதகங்களை எண்ணிப் பார்த்து இது நாம் எடுத்திருக்கின்ற முடிவு, நீதிமன்றத்துக்கு எதிர்ப்பானது அல்ல'' என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*