வியாழன், 25 பிப்ரவரி, 2010

Front page news and headlines today

சென்னை :"எதிலும் ஏட்டிக்கு போட்டி தான் இன்றைய எதிர்க்கட்சியின் பண் பாடு' என, தமிழக முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார்.



அவரது கேள்வி - பதில் அறிக்கை:தோழர் உ.ரா.வரதராஜன், நம் மத்தியிலே, அவரது தொண் டுள்ளத்தையும், கொள்கை உறுதியையும், மக்கள் பணியையும், அன்பான நட்பு, அரசியல் நாகரிகம் ஆகியவற்றையும் நினைவு அலைகளாக மிதக்க விட்டுவிட்டு, மறைந்து விட்டார்.அவர் மறைவை ஒட்டிய கேள்விக்குறி இன்னும் மறையவில்லை. அவர், மத்தியதர மக்களிடமும், பாட்டாளி வர்க்கத்தினரிடமும் பெற்றிருந்த பேரும், புகழும், கீர்த்தியும் மறையவில்லை; என்றும் மறையாது.



பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கும் முன்பே, அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து பிரதமரும், சபாநாயகரும் பேசியிருப்பதும், அமைதியாக மன்றத்தை நடத்திச் செல்ல ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதும், வரவேற்கத்தக்கவை.பார்லிமென்டை நடக்க விடமாட்டோம் என சில கட்சிகள் சபதம் செய்ததும், அதை நடைமுறையில் நிலைநாட்டுவதும், ஜனநாயகத்தை மலரச் செய்யாது. மக்கள் ஓட்டளித்து அனுப்பியிருப்பது, அவர்கள் வாழும் பகுதிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நல்லது நடக்கும் என்பதற்காகத் தான். இப்போது, பார்லிமென்ட் காட்சிகளைக் காண்போர், ஜனநாயகத்தைப் பற்றிய நம்பிக் கையை இழந்துவிடக் கூடிய சூழ்நிலை உருவாவதை, உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்.



ம.தி.மு.க.,வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, யானைமலையை உடைத்து சிற்பக் கலைநகரம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, மார்ச் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளன.யானைமலையைக் குடையும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், அரசின் சார்பில் அவ்வாறு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்றும் தெளிவாக அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு பிறகும், இந்தக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித் திருக்கின்றன என்றால், அவர் களுடைய நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் அல்லவா?யாரோ அறிக்கை விட்டு அழைக்கின்றனர் என்பதற்காக, இன்னமும் பகுத்தறிவைப் பயன் படுத்தத் தவறாத பாண்டியன் போன்றவர்கள், அவர்களோடு சேர்ந்து, "யானைமலை சலோ சலோ' என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.



முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து, சுப்ரீம் கோர்ட் டால் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவில் இணைந்து கருத்து தெரிவிப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என, தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சிலர் கண்டனம் தெரிவித்து, அறிக்கை விடுத்திருக்கின்றனர்.



நான் கேள்விப்பட்ட வரை, எனக்கு வந்த செய்தி வருமாறு:தி.மு.க., பொதுக்குழுவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து சுப்ரீம் கோர்ட் அமைக்கும் குழுவில், ஐவரில் ஒருவராக தி.மு.க., சார்பிலும் இடம்பெறக் கூடும் என நினைத்து, அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நீண்ட அறிக்கை தயாரித்து வைத்திருந்தனராம். அதற்கு வாய்ப்பில்லாமல் தி.மு.க., பொதுக்குழுவில் அறிவித்துவிட்டதால், ஏமாற்றமடைந்து, அவசர அவசரமாக, முதலில் தயாரித்து வைத்திருந்த நீண்ட அறிக்கையைத் தூக்கிப் போட்டுவிட்டு, பொதுக்குழு தீர் மானத்தைக் கண்டனம் செய்து, புதிய அறிக்கையை வெளியிட்டார்களாம். இப்படி, எதிலும் ஏட்டிக்கு போட்டி தான் இன்றைய எதிர்க்கட்சியின் பண்பாடு என்பதை பொதுமக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
ஏட்டிக்கு போட்டி பத்தி பேச வந்துட்டாரு இந்த உத்தம புத்தரன்.இலங்கையில தமிழ் மக்கள் கொல்ல பட்ட போது அவங்களுக்காக ம தி மு க கம்யூனிஸ்ட்டு போன்றவை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிச்சப்ப நானும் தமிழருக்காக இருக்கேன்னு காண்பிக்க ஆட்சியில எல்லாவித சகல அதிகாரத்தோடும் இருந்த நீங்க அதுக்கு போட்டியா ஒரு பாது காப்பு இயக்கத்த ஆரம்பிச்சி அந்த விவகாரத்தையே நீர்த்து போக செஞ்சி தமிழனுக்கு துரோகம் செஞ்சத வேணும்னா ஏட்டிக்கு போட்டியா சொல்லலாம்.நீங்க என்னதான் இனி எதிர் கட்சிகள் மீது குற்றம் சொன்னாலும் நீங்க இலங்கை தமிழர் விஷயத்துல நடந்தத வெச்சே எல்லாரையும் விட கேவலமா ஆயிட்டீங்க.உங்கள தமிழன் மன்னிக்க மாட்டான்.
by R Rameshbabu,Salem,India 24-02-2010 18:08:12 IST
அய்யா நீங்கள் எப்பொழுது முதல்வராக வருகிறீர்களோ அப்போழ்து மட்டுமே இப்படி வேதம் ஓதுகிறீர்கள்,எதிர்கட்சியானால் முருங்கை மரம் ஏறி விடுகிறீர்கள்,ஒன்களால் மட்டும் எப்படி அய்யா இவ்வாறு முடிகிறது.
by k thiru,chennai,India 24-02-2010 16:15:49 IST
இந்த செய்திகளை நம் நாட்டில் வாழ்ந்துகொண்டு படித்தால் ஒரு வேலை நமக்கு பழகிப்போன அரசியல் செய்தி...ஆனால் என்று நம் தாயகம் திரும்பி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்று காத்திருக்கும் என் அருமை தமிழர்களுக்கு....விரக்தி மட்டுமே....ஆனாலும் கண்டிப்பாக எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு என்பது நிர்ணயக்கியப்பட்டது.....காலத்தின் மாற்றத்தில் இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை...மாற்றத்தை தவிர....
by sun sundar,singapore,India 24-02-2010 16:12:25 IST
ஏட்டிக்கு போட்டி பற்றி திமுக பேசுவது நல்ல ஜோக்!!மற்ற கட்சிகாரனை விட திமுக காரனுக்கு நாக்கு அரை அங்குலம் நீளம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!!
by s இபு:பாரிஸ் ,sarcelles,France 24-02-2010 16:01:39 IST
yes, he is true..
If govt. joins as per the court then jaya is oppsoing that..
if govt not joins as per the court then jaya is opposign that also..
One thing ADMK have to understand is they can never come to power in future.. ADMK will be like MDMK
by k vel,chennia,India 24-02-2010 09:35:04 IST
கரும்புக்கு ஆதாய விலை உயர்வு கேட்டு, சரத் பவார், பிரதமர்கிட்ட அ.தி.மு.க., எம்.பி.,க்கள், போன வாரம் மனு கொடுத்தாங்க... இதுல, கரும்புக்கு விலை உயர்வு வேணும்ங்கறதை விட, தமிழக அரசை கடுமையா விமர்சித்து தான் வாசகங்கள் இருக்கு... மக்கள் விரோத அரசு, செயல்படாத அரசுன்னு தமிழக அரசை மனுவில் கடுமையாக விமர்சனம் செஞ்சிருக்கா ஓய்... ஆட்சியைக் கலைக்கணும்ங்கற அளவுக்கு, வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கு...ithu jayalaliththaavin ezai makklin paasa unarvu
by chandra sekaran,chennai,India 24-02-2010 08:53:43 IST
ஜெயலலித்தாவின் புத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே அவருக்கு அந்த அற்ப பதருக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டாம். நீங்கள் எதை செய்தாலும் அதை எதிப்பது தான் அவர் கொள்கை. எப்படி சேது சமுத்திர திட்டம் வேண்டும் தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு அதை இன்று எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற நயவஞ்சகி தான் ஜெயலலிதா. தமிழ் நாட்டின் மிது அக்கறை கொண்டது போல் நடிக்கும் பாதகி தமிழர்களை தன் காலில் விழ வைத்து அதை பத்திரிக்கையில் கொடுத்து அதை பார்த்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட ஜெயலலித்தாவிற்கு உங்கள் பதில் உரைக்காது. நடமாடும் பல்கலைகழ்கம் என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட நாவலரையே உதிர்ந்த மயிர் என்று அழைத்தவர் இந்த வைரம் நாயகி. மக்கள் என்றும் உங்கள் பக்கம் தான் ஜெயலதாவால் இனி அரியணை என்பது கிடையாது சசிகலாவோடு கொடநாடு செல்லவேண்டியது தான்
by குமார்,coddlour,India 24-02-2010 08:41:56 IST
கலைஞர் அவர்களே

அம்மாவிடம் பண்ணாதிர்கள் வம்பு
மக்கள் அம்மாவிடம் குடுக்க போவது ஆட்சி எனும் கொம்பு
அப்பொழ்து உங்கள் அமைச்சர்கள் அனைவரும் அம்மாவுக்கு தூக்க போவது சொம்பு
நீங்களும் அம்மாவை பார்த்து பண்ண போவது பம்பு
by n ராஜ்,tx,United States 24-02-2010 08:39:02 IST
ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு அங்குசமாக பயன்பட வேண்டும் என்பார்கள். தமிழ்நாட்டில் பச்சைப்புடவைகாரம்மா வந்ததிலிருந்து எதிர்க்கட்சி எதிரிக்கட்சியாக மாற்றப்பட்டுவிட்டது. பச்சை புடவையின் ஜாலங்கள் இனி எடுபடாது. இன்னும் சோரம் போன சில விசிலடிச்சான் குஞ்சுகள் பச்சைப்புடவையைத் துவைத்து சுத்தப்படுத்த படாதபாடு படுகின்றன. அழுக்கடைந்த அந்த நாற்றமடிக்கும் கந்தல் பச்சை கரை சேராது என்பதை விசிலடிச்சான்கள் புரிந்துகொள்ளும் காலம் விரவில் வரும்.
by A சிங்கை சீனு,Singapore,India 24-02-2010 08:37:07 IST
கைப்புள்ள பேச்சக்கு அப்பறம் பேச என்ன இருக்கு ?சபாஷ் கைப்புள்ள ,சரியா சொன்னிங்க. காமெடியும், கருத்தும் அதோடு மரியாதையும் குறையாமல் உள்ளது .நன்றி .
by A kilavansethupathi,Chennai,India 24-02-2010 08:23:07 IST
ஐயா அப்படி என்னதான் சுகமோ அந்த பதவியில். அதை விட்டு வெளியே வந்து நிம்மதியாக வாழுங்கள் .
by m செந்தில் ,tirupur,India 24-02-2010 08:18:35 IST
மக்கள் எம்.எல்.ஏ க்களையும் சேவை செய்வதற்க்காகத்தான் தேர்ந்தெடுதிருக் கிரார்கள். எம்.எல்.ஏ க்களும் முதல்வரை அப்படித்தான் தேர்ந்தெடுத்திருக்கிரார்கள். ஆனால் தமிழ் நாட்டில் நடப்பது கொலை, கொள்ளை மற்றும் அராஜகம்.

வாழ்க தமிழ் வழர்க தமிழ் மக்கள்.
by DR Bashkaran,Bangalore,India 24-02-2010 07:50:19 IST
''திராவிட முன்னேற்ற கழக''மாக அன்று அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டது இன்று ''திணறும் முதியோர் கழக''மாக கருணாநிதியால் முடியப்போகிறதோ என்கிற அளவுக்கு இருக்கிறது இவரது புலம்பல்...!
by M செல்வா புதுப்பள்ளி,NAGAI,India 24-02-2010 07:41:37 IST
முதல்வர் அவர்களே உங்கள் முடிவு நிச்சயம் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்ய போவதில்லை. உங்களுடைய புறக்கணிப்பு கேரளாவிற்குதான் சாதகமாக முடியும். ஒருபோதும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய நிலையில் இருந்து பின் வாங்க போவதில்லை. அப்படி இருக்க ஏன் இந்த போட்டி .
by C Tholkapiyan,Madurai,India 24-02-2010 06:59:33 IST
அய்யா கலைஞர் அவர்களே நீங்கள் மூத்த மற்றும் பழுத்த அரசியல் நிர்வாகி என்று இந்த உலகமே
(கழகம்) பாராட்டுகிறது. ஆனால் நீங்கள் ஜெயங்கொண்டம் எம்.எல்.எ ராஜேந்திரன் ரேஞ்சுக்கு பதில் தருகிறீர்கள். vivek காமெடி மாதிரி இருக்கு தயவு செய்து நாட்டம்மை அறிக்கயை மாற்றி எழுது.
by mokka சாமீ,jawa,Indonesia 24-02-2010 06:31:28 IST
முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கருணாநிதி உளறிக் கொட்டுவதை விட வாசகர் கருத்து மிகவும் தெளிவாக இருக்கிறது.
by K Kuppan,Singapore,Singapore 24-02-2010 05:27:23 IST
வரதரசனாரிடம் போன்றோரிடம் பழகியுமா நீங்கள் உங்களின் அணுகுமுறையை மாற்றிகொள்ளாமல் அதே உங்கள் பாணியை பின்பற்றுவது ஏனோ?

உங்களின் கே.ப அறிகையில் மற்றவர்களை தாக்கவும்..உங்களை நீங்களே ''புகழ்ந்து கொள்ளவுமே'' பயன்படுத்தி உங்களுக்கு ''சாதகமாய்'' ஒண்ணுமே தெரியாத ''அப்பாவியாய்'' உம்மை காட்டிக்கொள்ள நினைப்பது..''பலே'' அரசியல் வாதி என்பதை காட்டுகிறது.

இத்தனை ஆண்டுகளாய் இல்லாமால் ஏனையா இந்த ஆனைமலை பிரச்சினை வந்தது..மலையை குடைந்து ''கிரைனிட்'' எடுத்து காசு பண்ண பார்த்தார்கள் உம்ம கட்சிகாரர்கள்..

தமிழ்நாட்டையே சுரண்ட நினைக்கும் உம்ம கட்சிகாரர்களை தடுக்க நினைத்தால் ''பகுத்தறிவை'' பயன்படுத்த தெரியாதவர்கள் என்று ''பச்சையாய்'' பழி சொல்வதில் உமக்கு நீரே நிகர்..

என்னா ஆருடம்..புள்ளரிக்குதையா மஞ்ச துண்டாரே..அம்மா அவர்கள் அறிக்கையை தயாரித்து வைத்திருந்ததால்தான்..நீர் ''சுப்ரீம்''கோர்ட்டின் ஐவர் குழுவில் சேரவில்லையோ..இங்கே இங்கேதான் ''உம்ம பகுத்தறிவு (??) மிக அற்புதமாய் வேலை செய்கிறது..

குள்ளநரி என்று உம்மை சொன்னால் தப்பே கிடையாது..குறுக்கு புத்தி எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்களேன்..

கேட்போர் எல்லாம் எள்ளிநகை யாடுவர்..அது உம்ம காதில் விழாமல் இருக்க ''யானை''மலையை சுரண்ட நினைக்கும் அஞ்சா நெஞ்சர் கூட்டம் எடுக்கும் ''தினசரி'' பட்டம் வழங்கும் விழாவில் ''அல்ப'' சந்தோஷமாய் என்ஜாய் பண்ணுங்கோ..
by p சேகர்,SINGAPORE,Singapore 24-02-2010 03:43:10 IST
பாம்பின்கால் பாமபறியும். என்றாலும் பொதுமக்கள் எண்ணம் அவ்வாறு மாறுபட்ட கட்சி அரசியல் முடிவலல. தீர்ப்பை மறுக்கவில்லை என்றால் குழுவில் சேர வேண்டியதுதானே! இஃதென்ன வேடிக்கை! மறுக்கவில்லையாம்! ஆனால் குழுவில் சேரவில்லையாம்! யாரை ஏமாற்ற இந்தக் கோமாளித்தனம். குழுவில் சேருவதால பயன்இல்லை என்றால் எதிர்பபைத் தெரிவித்துப் புறக்கணிப்பதாகக் கூறி ஐவர் குழுவையே கலைக்கச் செய்யலாமே! எனவே, ஐவர் குழுவில் சேருவதை எதிர்நோக்கிக் கண்டன அறிக்கை உருவாக்கியிருநதால் அதுவும் சரியே! இப்பொழுது தீர்ப்பை மறுக்க வில்லை என்று சொல்வதால் எதிர்ப்பதும் சரியே! காங்கிரசுதான் மத்திய அமைப்பிற்கு அடிபணிந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறி கொடுத்தது என்றால் தமிழ் தமிழ் என்று பேசும் திராவிடக் கட்டசிகளும் பதவிநலன் பறிபோகும் அச்சத்தால் காங்கிரசிற்கு அடிமையாக இருந்து நம் உரிமைகளை விட்டுக் கொடு்த்தால் யாரைத்தான் நம்புவது? காங்கிரசையும் காங்கிரசைச் சார்ந்த கட்சிகளையும் விரட்டியடிக்கும் நாளே நம் நாட்டிற்குப் ‌பொன்னாள்.
by I. Thiruvalluvan,chennai,India 24-02-2010 03:34:14 IST
ஏட்டிக்கு போட்டிதான், எப்போதும் எதிர்கட்சிகளின் நிலைப்பாடு. இது திமுகவுக்கும் பொருந்தும்.
by ரவி,TORONTO,Canada 24-02-2010 03:23:55 IST
அது ஒரு வாத்து கூட்டம். பச்சை சீலையை நம்பி இன்னும் சில மக்கள் இருப்பது எதற்காக என்று தெரியவில்லை.
by S செந்தில் ,India,India 24-02-2010 03:11:25 IST
நல்ல படித்தவர்கள் மற்றும் நல்ல எண்ணம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரும் வரை இப்படிதான் இருக்கும். எது செய்தாலும் குறை சொல்லுவதே இந்த எதிர்கட்சிகளுக்கு வேலையா போச்சி. Politics should be healthy and not selfish. We really don''t know when this will change in our country. GOD only should save us.
by Mr ஆஷா,Chennai,India 24-02-2010 03:11:02 IST
தலைவா என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? ஏட்டிக்கு போட்டி போடுவதில் நமக்கு சவால் விடும் அளவிற்கு இன்னும் யாரும் வளரவில்லை. ஏட்டிக்கு போட்டி போடுவதில் நாம பட்டம் வாங்கியிருக்கிறோம். இவர்கள் எல்லாம் பள்ளிகூட பாலகர்கள். என்ன தலைவா இந்த கத்துகுட்டிங்களை எல்லாம் பார்த்து நாம பயபடலாம?

தலைவா இன்னிக்கு தேதி வரைக்கும் நாம ஏட்டிக்கு போட்டி இல்லாம என்னிக்காச்சும் பேசி இருக்கோமா? மற்றவர்களாவது பரவாயில்லை. ஏட்டிக்கு தான் போட்டி பேசுவாங்க. நாம போட்டிக்கே போட்டி பேசுபவர்கள் ஆச்சே. உங்க கேள்வி - பதில் அறிக்கையே அதுக்கு தான தலைவா வெச்சு இருக்கோம்? என்னிக்காச்சும் ஒரு நாள் ஸ்ட்ரெய்ட் பார்வேர்டா பதில் சொல்லி இருக்கோமா? ''சூரியன் கிழக்கே உதிக்கும். சரியா? தவறா?''-ன்னு ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு கூட அங்க வளைச்சு இங்க வளைச்சு ஒரு பத்து பக்கத்திற்கு பேசும் ஆளுங்க நாம. இவர்கள் பண்ணும் ஏட்டிக்கு போட்டியெல்லாம் பற்றி கவலைப்பட்டு அறிக்கை தராதே தலைவா. நம்ம தான் எல்லாவற்றிலும் முதல். அது போல இதிலும் நாமே முதல். நம்ம லெவெல்ல ஒரு பயலும் டச் பண்ண முடியாது. நீ போய் நல்லா ரெஸ்ட் எடு தலைவா.
by k கைப்புள்ள,nj,India 24-02-2010 01:14:14 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக