தலைப்பு-15ஆவது இணையமாநாடு : thalaippu_uthamam_maanaadu2016

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்

காந்தி ஊரகப்பல்கலைக்கழகம்

இணைந்து நடத்தும்

15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016

மாநாட்டில் பங்கு பெற 

ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து  .
2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக்  “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
•     இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்.
•     ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
•     கையடக்கக் கணிணிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோசு)
•      தரவுப்பொதுமைக் கணியன்கள்(Open source soft-wares), தன்மொழியாக்கம்.
•     தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணிணிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் ,பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் உருவாக்கப்பட்ட  கணியன்கள்(softwares).
  மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை  ஏ4 தாள் அளவில் ஒரு  பக்கத்திற்குள் மே 25 ஆம் நாளுக்குள் cpc2016@infitt.org என்ற மின்வரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப்பற்றிய முதன்மைத் தகவல்கள் கொண்டிருக்க வேண்டும். தலைப்பை அறிமுகம் செய்யும் பொதுவான கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.
  அளிக்கப்பட்ட கட்டுரைச் சுருக்கம் பற்றிய இது போன்ற கருத்துகளை மாநாட்டுக் குழு, தங்களுக்கு அனுப்பி வைக்கும். புதிய கருத்து, சிந்தனை கொண்ட கட்டுரைகள் படிக்கவும் (oral presentation), பிற கட்டுரைகள் சுவரொட்டி விளக்கங்களாகவும் (poster presentation) ஒப்புக்கொள்ளப்படும்.
 கட்டுரைச் சுருக்கம், கட்டுரை தமிழ் ஒருங்குகுறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு (TACE) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கத்தைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ தமிழும் ஆங்கிலமும் கலந்தோ அனுப்பலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு சூலை 15-ஆம் நாளுக்குள் உறுதிப்படுத்தப்படும்.
  முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய நாளுக்குள் அனுப்பவேண்டும்.
  கட்டுரை எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டுத்தரத் தொடரெண்(ISSN)ணுடன் வெளியிடப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும், உலகக் கணிணிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.
தலைப்பு-இணைய மாநாடு, முதன்மை நாள்கள் : thalaippu_uthamam_muthanamainaal2016
  
   தமிழ் இணைய மாநாடு 2016இல் கட்டுரையைப் படைப்பதுபற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2016@infitt.org என்ற  முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
முனைவர் ஆ.க.இராமகிருட்டிணன்
தலைவர், மாநாட்டு ஆய்வரங்கக்குழு, தமிழ் இணையம் 2016.
 பேசி : 91 80 2293 2556
மாநாட்டு ஆய்வரங்கக் குழு
முனைவர்  டி. நாகராசன், எசு. எசு. என். பொறியியல் கல்லூரி
முனைவர் சுரேசு சுந்தரம், இந்தியத் தொழில் நுட்பக் கழகம், குவஃகாத்தி
முனைவர் எம். நாராயண மூர்த்தி, ஐதராபாத்து பல்கலைக்கழகம்