தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள
நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது.
தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின்
தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது.
தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி
வளர்ந்த பின்னரே இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று.
தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன.
தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமின்றி இலக்கணங்களும் பல தோன்றிய
பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப்
புலப்படுத்துகின்றது. ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள
நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல்நூல் என்று
கருதிவிடுதல் கூடாது.
– செந்தமிழ் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
– தொல்காப்பிய ஆராய்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக