6
சட்டஅறிவு இல்லாத பொதுத்தகவல் அலுவலர்கள்
தகவல் உரிமைச்சட்டத்தில் அதிகாரமிக்கவர்
பொதுத்தகவல் அலுவலர். பொதுத்தகவல் அலுவலருக்குத் தகவல் உரிமை
சட்டத்தைப்பற்றிய சட்ட விழிப்புணர்வும் சட்டஞானமும் தெரியவில்லை.
தஞ்சாவூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கடந்த 6.6.2015 அன்று வணிக
வரித்துறையில் பணிபுரியும் அருள் என்பவருடைய அலுவல் தொடர்பாகத் தகவல்களை
வேண்டினோம். அதற்கு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து
ந.க.எண்3844-2015-ஆ6 என்ற மறுமொழி மடல் வந்தது.
அம்மடலில், “பிரிவு (8) ஒ. [8.j.]
இன்படித் திரு.அருள் என்பவரது பணிப்பதிவேடு, அவரது ஆவணங்கள் ஆகியவற்றை
வெளியிடுவது பொதுமக்கள் நலனுக்குத் தேவையாக உள்ளது என நேர்வுக்கேற்ப
தெளிவுற கூறப்படவில்லை; இந்தத் தகவல் வெளியிடுவது எவ்வாறு பொதுமக்களின்
செயற்பாட்டுடன் அல்லது நலனுடன் தொடர்பு உடையது எனத் தெளிவாக
விவரிக்கப்படவில்லை.பிரிவு 9 -இன்படி இந்தத் தகவல் அரசு தொடர்பான தகவல்
அல்ல. தனி ஒருவருடைய பதிப்புரிமையைப் பாதிப்பதாக அமைகிறது. எனவே தாங்கள்
கேட்டிருக்கும் தகவல்களை வழங்க வாய்ப்பில்லை” என வந்துள்ளது.
பொதுத்தகவல் அலுவலர் குறிப்பிட்ட தகவல்
அளிக்கத் தட்டிக்கழித்ததால் மேல்முறையீசெய்யலாம். மேல்முறையீட்டில்
மறுத்தது சரியில்லை எனில், “மறுத்தது முறையற்றதாகும்; காரணங்கள் சரியாக
விளக்கப்படவேண்டும். தகவல் வெளியிடப்படுவதால் பொது நலனுக்கு ஏற்படும்
தீமையைவிட நன்மையே அதிகம் என்றால் அத்தகவலை வெளியிடலாம்; எனவே கோரிய தகவலை
அளிக்கவும்” எனத் தெரிவிக்கலாம் என்று பிரிவு 8(2) கூறுகிறது. மேலும்
அரசுப்பணியாளர் பணிமூப்புப் பட்டியல், விடுப்பு கால ஊதிய விகிதம்,
பணிவிதிகள் போன்ற விவரங்களைப் பணிபுரியும் அலுவலகத்திலும், அதே துறையிலும்
கேட்டுப் பெறமுடியும்.
மேல் முறையீட்டு அலுவலரிடமிருந்தும்
போதிய தகவல்கள் கிடைக்கவில்லையென்றால் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு
செய்தும் பெறலாம் என விதிமுறை உள்ளது. தகவல் ஆணையத்தின் மேல்முறையீடு
செய்ததற்காக எந்த அரசுப்பணியாளருக்கும் எதிராக எந்த ஒரு துறையும்
அரசுப்பணியாளர் மீது குற்றப்பத்திரிக்கை பிறப்பிக்க கூடாது என்று தில்லி
உயர்நீதிமன்றம் தடையாணை (ரிட் பெட்டிசன்) எண் 3845-2007 வழக்கில்
மத்திய அரசின் பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு அமைச்சகத்திற்கு
அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையம்.
“அரசுப்பணியாளர் மூப்புப் பட்டியல், விடுப்புக் கால ஊதிய விகிதம்,
பணிவிதிகள் ஆகியவற்றைத் தகவல் கேட்டால் தரவேண்டும்” எனத் தீர்ப்பு
வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் அடுத்த இதழில்
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக