தமிழ் இலக்கியம் இவ்வுலகம் சார்ந்தது
பிற உலகத்தொன்மை இலக்கியங்கள் யாவும்
மேலுலகக் கடவுளர் பற்றியனவாகவும், அம்மேலுலகினர் கீழே இறங்கி வந்து தெய்வத்
தன்மை அல்லது அசுரத் தன்மையுடையவர்களுடன் கலந்து இடம் பெற்றனவாகவுமே
முற்றிலும் காணப்படும். தமிழர்தம் தொன்மைக் குறிப்புகள் இவ்வுலகம்
சார்ந்து, தெய்வத்தன்மை உற்றன பற்றியன. இவ்வுலகினராய் ‘வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வமாகியவர்’ பற்றியன. மேலிருந்து கீழே வந்தவர்
பற்றியனவாகாமல், கீழேயிருந்து மேலே சென்றவர் பற்றியன. கண்ணகி, மணிமேகலை
மட்டுமின்றி, ‘தமிழர் தேசியக் காப்பியம்’ எனச் சமயப் பெரியோரால்
போற்றப்பட்ட பெரியபுராணமும் கீழிருந்து அதாவது மனிதராய்ப் பிறந்து,
தெய்வநிலை அடைந்தவர் பற்றியன. இதனை இமயமலை வேறுபாடு எனலாம்.
-முனைவர் தமிழண்ணல்:
(பேராசிரியர் வே.அண்ணாமலையின்) சங்க இலக்கியத் தொன்மைக் களஞ்சியம்: பக்கம்.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக