Sri_Lanka_map

இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலிருந்து சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனீசு என்பவர், தாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வாகக் கேள்விப்பட்டதாகப் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றபோது, “ஈராக்ளிசுக்குப் பாண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத், தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தான். அங்கு அவனது ஆட்சிக்குட்டப்பட்டவர்களை முந்நூற்று அறுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து, ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குக் கப்பம் கட்ட வேண்டுமென்ற கட்டளையிட்டான்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ஈராக்கிளிசு என்பது நிலந்தருதிருவில் பாண்டியனைக் குறிக்கலாம். அவன் தன் மகளுக்கு அளித்த சீதனம் இலங்கையே ஆகும். கி.மு.எட்டாம் நூற்றாண்டிலேயே இலங்கை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததென்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஆகவே, இலங்கையில் சிங்களவர் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுகிறது. பாண்டேயா என்பது பாண்டிமாதேவி எனப்படும் பாண்டியன் மகள் மீனாட்சியாக இருக்கலாம்.
-துடிசைக்கிழார்: தமிழர்நாடு