திங்கள், 13 ஜனவரி, 2014

அகரமுதல் இணைய இதழ் 08 சில தலைப்புகள்




கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு வங்கிக்கணக்கேடும் ஆவணமாகும்.

.
தென்மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான ஆவணங்களுள் ஒன்றாகப் பொதுத்துறை வங்கிகளின் கணக்கேடு-வங்கிக்கணக்கு விவரங்களை ஏற்று அறிவித்துள்ளது.இதனை அறிவித்துள்ள சென்னை மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலர் செந்தில் பாண்டியன் பின்வரும் வங்கிகள் அவ்வாறு ஏற்பதற்குரியன என அறிவித்துள்ளார்:   அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,பரோடா வங்கி,இந்தியா வங்கி, மகாராட்டிரா வங்கி, கனரா வங்கி, இந்தியா மைய வங்கி, கூட்டாண்மை வங்கி(கார்ப்பரேசன் ...

தானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்!

..
     வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால்  கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, ...

பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!

.
     தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும்  மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய இரத்தக்கண்ணீர்’  ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக