வியாழன், 16 ஜனவரி, 2014

திருவள்ளுவர் திருநாளன்று தைவான் கவிஞருக்கு மட்டும் விருது வழங்கப்படும்திருவள்ளுவர் திருநாளன்று தைவான் கவிஞருக்கு மட்டும் விருது வழங்கப்படும்திருவள்ளுவர்  திருநாளான  15- ஆம் நாள் புதன்கிழமை,  சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் விழாவில் ஒன்பான் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் செயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, விருது பெறுபவர்கள் முதல்வரின் கையால் விருதுகளைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராசர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரது பெயர்களிலான விருதுகளை வரும் 26ஆம் நாளன்று  தலைமைச் செயலகத்தில் முதல்வர்  செயலலிதா வழங்குவார்.
திருவள்ளுவர்  நாளன்று திருவள்ளுவர் விருதை வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே, புதன்கிழமை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் தைவான் கவிஞர் யூசிக்கு மட்டும் திருவள்ளுவர் விருது வழங்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக