சேதுக்கால்வாய்த்திட்டம்: தமிழக
அரசின் வழக்காவண உறுதிமொழி ஏற்புடையதல்ல – மத்திய
அமைச்சர் வாசன் தூத்துக்குடி: “சேதுக்கால்வாய்த்திட்டத்தினைச் செயல்படுத்துவதில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்
அளித்த உறுதியுரை ஆவணம்
சரியானதல்ல,” என மத்திய அமைச்சர் வாசன்
தெரிவித்தார். மேலும்,. இது நாட்டின்ம்
தென்தமிழகத்திற்கும் ஊறு நேர்விக்கும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த காலத்தாழ்ச்சியை
ஏற்படுத்தும். என்றும் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
தை முதல் நாளையே தமிழ்ப்
புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர்
கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து 10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல்
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின்
முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும்
என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக
சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப்
பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக
சார்பில் மு….
67 ஆவது திங்கள்
பாவரங்கம் திருக்குறள் பெருமாள் ஐயா நூற்றாண்டு தொடக்க விழா 15-11-1914 –
15-11-2014 ஆகியன 30.12.2013 அன்று நடைபெற்றன. நிகழ்ச்சியில் மரபுப் பா, கழக இலக்கிய
அறிமுகம், புதுப் பா, மொழிபெயர்ப்புப்
பா , துளிப்பா, சிறார்
பாவரங்கம் நடைபெற்றன. - புதுவைத் தமிழ்நெஞ்சன்
மதுரை உலகத்
தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக்
கருத்தரங்கத்தை, சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் 06.01.14 அன்று
நடத்தின. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், விழா மலரை
வெளியிட்டு தலைமை உரையாற்றினார். இவ்விழாவில் நூலைப் பெற்றுக்
கொண்டு பேசிய தகவல் தொழில் நுட்பத்துறை அரசுச்
செயலாளர் தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில், தமிழில் உள்ள
அறநெறிகளை ஆழ்ந்தும் படிக்கவும் தமிழர் பண்பாட்டு
நெறிமுறைகளை உலகிற்கு எடுத்து விளம்பச்செய்யவும் இன்றைய தலைமுறையினர்
முயல…
(முன்னிதழ்த்
தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத்
தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து
வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து
சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான்
நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால
நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம்
தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன.
அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். . . . -மாவீரர் நாள்
உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற
எதிர்காலத்தையும் இனியும் எமது…
(முந்தைய
இதழ்த் தொடர்ச்சி) எ “தோழி! அவர் பெரும் பேரன்பினர்.” – தோழி. “பொருளில்லார்
இவ்வுலகில் எவ்வித பயனும் அடைய முடியாது. ஆதலின் பொருள்
தேடிவருகின்றேன்” என்று கூறிவிட்டுத் தலைவன்
சென்றான். அவன் சென்று சில நாட்களே யாயினும், பல மாதங்கள்
கழிந்து விட்டனபோல் தலைவிக்குத் தோன்றுகின்றது.
தலைவி, தலைவன் பிரிவாற்றாது வருந்துகின்றாள்.
தோழி ஆறுதல் கூறுகின்றாள். தலைவி: தலைவர் சென்றுள்ள இடம் மிகக்கொடியது
அல்லவா? தோழி: ஆம் மிகக் கொடியதுதான்.
பகலை உண்டு பண்ணுகின்ற ஞாயிறு இல்லையேல்,…
‘’அன்னசத்திரம்
ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம்
கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மாக்கவி
பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்
சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர்
என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100 புதுக்காணி
நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார்.
அவர் ஓர் ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட
500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய
நிலையில் இருந்த பத்து ஏழை…
மதுவிலக்கு
மாணவப் போராளிகள் நந்தினி, சோதிமணி….. தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே
தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு
மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ
மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு மது அருந்துவது
உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று
விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது தமிழினத்தைச் சிந்திக்காது
செய்வதற்கே மதுபோதை- அடடா திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும்
தீயபாதை சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு மானமுள்ள
தமிழனென்று உலகிற்குக்…
சிதம்பர
நடராசர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தமிழக அரசின்
கவனமின்மையே காரணம் என திமுக தலைவர்
கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், சிதம்பரம் நடராசர்
கோயிலைப் பொது தீட்சிதர்களே நிருவகிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிருவாகத்தைத்
தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே
இசைவு அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது நீக்கியுள்ளது.
அ.தி.மு.க. அரசு…
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 36. நெட்டெழுத்து
இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல்லாறு
ஊர்ந்தே. நெட்டெழுத்து இம்பரும் = நெட்டெழுத்தினது
பின்னும், தொடர்மொழி ஈற்றும் = இரண்டு
எழுத்துகளுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன சொல்லின் இறுதியிலும், குற்றியலுகரம்
= க குறைந்த ஒலியையுடைய உகரம்(ஒரு மாத்திரையில் குறைந்து அரை
மாத்திரையாக ஒலிக்கும் உகரம்), வல்ஆறு
ஊர்ந்து = வல்வலின மெய்களாம் க், ச், ட், த், ப், ற் என்பனவற்றின்மீது பொருந்தி வரும். குற்றியலுகரம், மொழியிறுதியில்
நிற்கும் வல்லின மெய்களைப் பொருந்தி வரும். இரண்டு…
இன்று மாலை தெரிந்து
விடும், யாருக்கு விருது என்று? தனக்குத்தான்
கிடைக்கும் எனச் சிலரும், தனக்குக் கிடைக்குமா எனச்
சிலரும், அவளுக்குக் கிடைக்கும், இவளுக்குக்
கிடைக்கும் என்பதுபோல் சிலரும், இன்னாருக்குக் கிடைக்கக்கூடாது
எனச் சிலருமாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தனர்.
என்ன விருது என்று எண்ணுகிறீர்களா? ‘அழகு மங்கை’ விருது. உலக
அழகி, நகர அழகி என்றெல்லாம்
வழங்குவதுபோல், மங்கையர்க்கரசி பள்ளியில் அழகியைத்
தேர்ந்தெடுத்து, அழகி விருது வழங்குகிறார்கள். முதலில் ‘செல்வி மங்கை’ எனப் பட்டம்
வழங்குவதாகத்தான் முடிவெடுத்தார்கள்….
இனப்படுகொலை
தொடர்பான உசாவல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் இந்தியா வரும் இலங்கை
வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிசு, தில்லி வர
இடம்தரக்கூடாது என்று பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை
இனப்படுகொலை செய்த இராசபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான
அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு
ஆகசுட்டு மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித
உரிமை ஆணையர் நவநீதம் அவரது…
2009-2009இல், தமிழீழத்தில்
இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திய
அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி, அப்போரை சிங்களத்துடன் இணைந்து வழி நடத்தியப் போர்க்குற்றவாளி
பிரணாப்பு. இன்று இந்தியக்
குடியரசுத் தலைவராக உள்ள அவர், திசம்பர் 20 அன்று, சென்னை இலயோலாக் கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவிற்கு
வந்தார். அப்பொழுது அவருக்குக் கருப்புக் கொடி
காட்ட முயன்றதாகத், தமிழின உணர்வாளர்கள் மீதும், மாணாக்கர்கள்
மீதும் தமிழகக் காவல்துறை கொடுந்தாக்குதலை நடத்தியது. திசம்பர் 19 ஆம் நாள், தமிழ்த்
திரைப்பட இயக்குநரும், இன உணர்வாளருமான திரு….
7/1/14 செவ்வாய் மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் “திருக்குறளும்
புதிய பார்வைகளும்” என்னும் தலைப்பில் பேராசிரியர்
முனைவர் மறைமலை இலக்குவனார் பொழிவு நிகழ்ந்தது.
துறைமுகப்பொறுப்புக் கழக மேனாள் அலுவலர்
புலவர் வீரமணி தலைமை தாங்கினார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முனைவர்.பிரான்சிசு சவரிமுத்து சிறப்பு
விருந்தினராகப் பாராட்டப்பட்டார். வரவேற்புரை பட்டிமன்றச்
செயலர் பொறி. பக்தவத்சலம் தலைமையுரை புலவர் வீரமணி
வான்மிதந்து சென்றடையும் கதிரவனைத்
தான்தழுவி ஒளிஉமிழும்
தண்நிலவில் கண்நிறைந்த காட்சிகாண கடல்வெளியில்
மண்மீது படுத்தேன்என் கண்முன்னே
தொங்கிச் சுழலும்இப்
பூமிப்பந்தில் தங்கிவாழும் மக்கள்குலம்
தழைக்க பொங்கிவழியும் அழகுடன்நம் பூமித்தாய் இங்கிருக்கும் மக்களுக்கே படைத்தாள்
குறிஞ்சிமுல்லை குறையாத மருதத்துடன்நாம்
அறிந்த நெய்தல்பாலை எனப்
படைத்தாளே ! ஐவகைநிலத்தை அழகுடன்
பார்த்தேன் மூவகைத் தமிழுடன்
முத்திரைபதித்து பாவகையுடன் பைந்தமிழ்ப் புலவர்கள்
பாடக்கேட்டேன் இயற்கை எழில்பற்றி !
எங்கு பார்க்கினும்
மக்களெல்லாம் பொங்கும் மகிழ்ச்சியால் பூரித்ததையும் வறுமையைப் புறந்தள்ளி
வாழும் வளமையும் கண்டேன் நாட்டில் !
இயற்கை அன்னை …
பேரறிவாளன் தாயார் அற்புதம்
அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று
வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத்
தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர்
அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார்.
அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி
வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.” “சிறையில்
இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே
வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். வழக்கு
அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக