செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை வேண்டும்: நார்வே

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
கொழும்பு, ஆக. 13-

நார்வே நாட்டின் சர்வதேச மேம்பாட்டு துறையின் முன்னாள் மந்திரி எரிக் சோலைம். 2006ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமாதானம் ஏற்பட முயற்சித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பெரு முயற்சி தோல்வியில் முடிந்ததால் 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு உச்சக்கட்டப் போரில் விடுதலை புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழித்து விட்டதாக இலங்கை அரசு கொக்கரித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கையின் இறுதிக்கட்ட போர் காலத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எரிக் சோலைம் தற்போது வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீன ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது லட்சக் கணக்கானவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்தேறி பல ஆண்டுகள் கடந்தும் சர்வதேச சமுதாயம் கண்களை மூடிக்கொண்டு போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை தப்பித்துக்கொள்ள அனுமதித்து விடக்கூடாது.

இலங்கையில் நம்பகத்துக்குரிய ஜனநாயக முறை நிலவாததால் இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும்.

அடுத்த மாதம் இலங்கை செல்லும் ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் ஆணையர் நவீண் பிள்ளை, இவ்விவகாரத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக