ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆந்திரத்தின் 8 வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்

ஆந்திரத்தின் 8 வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும்

First Published : 11 August 2013 03:56 AM IST

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
1956 - ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது, தமிழர்களுக்குச் செய்யப்பட்ட துரோகம் ஆகும்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைச் சரி செய்ய இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, திருகாளஹஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர் உள்ளிட்ட 8 வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

1 கருத்து:

  1. கருத்தை யார் முன் வைக்கின்றார்கள் என்பதைவிட வைக்கப்படும் கருத்து சரியானதாக இருப்பின் அதை நாம் முன்னெடுக்கவேண்டும். குறிப்பிடப்படும் வட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

    பதிலளிநீக்கு