யாழ் நாவற்குழியில்
கட்டப்பட்டு வந்த புத்த விகாரை மீது
கை க் குண்டு வீச்சு !
யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழியில் , பல சிங்களவர்கள் அத்துமீறிக்
குடியேறியுள்ளார்கள். அங்கே இருக்கும் புறம்போக்கு காணிகள் மற்றும் தமிழர்களுக்குச்
சொந்தமான காணிகளை அவர்கள் வளைத்துப்போட்டுள்ளார்கள். தற்போது இவர்களுக்கு வீடமைத்துக்கொடுக்கவும் அரசு
முன்வந்துள்ளது. அங்கே அவர்கள் ஒரு புத்த விகாரையையும் நிர்மாணித்து
வருகிறார்கள். இந்த் விகாரை முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. இந் நிலையில்
இன்று இரவு(சனிக்கிழமை) மோட்டர்சைக்கிளில் வந்த இருவர், குறிப்பிட்ட இந்த விகாரை மீது
கைக்குண்டு தாக்குதல் ஒன்றை நிகழ்த்திவிட்டு மின்னல் வேகத்தில்
தப்பித்துச் சென்றுவிட்டார்கள். இரவு 8.00 மணியளவில் சில சிங்களவர்கள் கூடி
புத்த விகாரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டவேளையே இக் குண்டு
எறியப்பட்டுள்ளது.
இதனால் "கொட்டியா" "கொட்டியா" அதாவது புலிகள்
புலிகள் என்று கத்திக்கொண்டு பயந்தடித்துச் சிங்களவர்கள் வெளியே
ஓடிவந்துள்ளார்கள். அவர்கள் கூடியிருந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள சுவரில்
கைக்குண்டின் சன்னங்கள் தெறித்த காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக
பெருமளவான இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கே வரவளைக்கப்பட்டு, அவ்விடத்தை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது என்றும்
அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. நவற்குழி மற்றும் செம்மணிச் சுடலை, அரியாலை போன்ற பகுதிகளை இலங்கை
இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திவருவதாக பிரதேசவாசிகள் சிலர் வன்னி மீடியா இணையத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
இக் குண்டுவெடிப்பு காரணமாக அவ்விடத்தில் உள்ள சில தமிழர்களை சிங்களவர்கள் இராணுவத்துடன் இணைந்து
தாக்கியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிகள்
செய்திகள் நாளை காலை வெளியாகும். இது தொடர்பான சில வீடியோ மற்றும்
புகைப்படங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது. எனவே அதுவரை வன்னி மீடியா இணையத்தோடு
இணைந்திருங்கள்.
- See more at:
http://vannimedia.com/site/news_detail/20657#sthash.Pa3oixfT.dpuf
யாழ் நாவற்குழியில் கட்டப்பட்டு வந்த புத்த விகாரை மீது கைகுண்டு வீச்சு !
12-Aug-2013 அன்று பிரசுரிக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில்
உள்ள நாவற்குழியில் , பல சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள்.
அங்கே இருக்கும் புறம்போக்கு காணிகள் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான
காணிகளை அவர்கள் வளைத்துப்போட்டுள்ளார்கள். தற்போது இவர்களுக்கு
வீடமைத்துக்கொடுக்கவும் அரசு முன்வந்துள்ளது. அங்கே அவர்கள் ஒரு புத்த
விகாரையையும் நிர்மாணித்து வருகிறார்கள். இந்த் விகாரை முழுமையாகப்
பூர்த்தியாகவில்லை. இந் நிலையில் இன்று இரவு(சனிக்கிழமை) மோட்டர்சைக்கிளில்
வந்த இருவர், குறிப்பிட்ட இந்த விகாரை மீது கைக்குண்டு தாக்குதல் ஒன்றை
நிகழ்த்திவிட்டு மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றுவிட்டார்கள். இரவு
8.00 மணியளவில் சில சிங்களவர்கள் கூடி புத்த விகாரையில் பிரார்த்தனையில்
ஈடுபட்டவேளையே இக் குண்டு எறியப்பட்டுள்ளது.
இதனால் "கொட்டியா" "கொட்டியா" அதாவது புலிகள் புலிகள் என்று
கத்திக்கொண்டு பயந்தடித்துச் சிங்களவர்கள் வெளியே ஓடிவந்துள்ளார்கள்.
அவர்கள் கூடியிருந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள சுவரில் கைக்குண்டின்
சன்னங்கள் தெறித்த காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக பெருமளவான
இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கே வரவளைக்கப்பட்டு, அவ்விடத்தை இராணுவம்
சுற்றிவளைத்துள்ளது என்றும் அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. நவற்குழி
மற்றும் செம்மணிச் சுடலை, அரியாலை போன்ற பகுதிகளை இலங்கை இராணுவம்
சுற்றிவளைத்து தேடுதல் நடத்திவருவதாக பிரதேசவாசிகள் சிலர் வன்னி
மீடியா இணையத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
இக் குண்டுவெடிப்பு காரணமாக அவ்விடத்தில் உள்ள சில தமிழர்களை
சிங்களவர்கள் இராணுவத்துடன் இணைந்து தாக்கியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற
செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிகள் செய்திகள் நாளை காலை வெளியாகும். இது
தொடர்பான சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது.
எனவே அதுவரை வன்னி மீடியா இணையத்தோடு இணைந்திருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக