புதன், 14 ஆகஸ்ட், 2013

எருமை விலை உரூ.25 இலட்சம்

உரூ.25 இலட்சத்திற்கு விலை போன  "மிகுவிலை' எருமை : 1 நாளைக்கு 32 புதுப்படி  பால் கறக்குமாம்

 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_78054220130814014033.jpg
சண்டிகர்:அரியானாவில், தினமும், 32 லிட்டர் பால் கறக்கும் எருமையை, ஆந்திராவை சேர்ந்த விவசாயி, 25 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார். வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிகம் விலை போனதில், எருமையை விற்றவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள, சிங்வா காஸ் கிராம விவசாயி, கபூர் சிங். இவர், விவசாயம் செய்வதோடு, சில எருமை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாளைக்கு, 32 லிட்டர் பால் கறக்கக்கூடிய, லட்சுமி என்ற எருமையை, 2.5 லட்சம் ரூபாய் கொடுத்து, விலைக்கு வாங்கினார்.மழை காலத்தில் மட்டுமின்றி, வெயில் காலங்களிலும் கூட, எருமை ஒரே அளவில் பால் கொடுத்ததால், கபூர் மகிழ்ச்சி அடைந்தார். அதை பாசமாக வளர்த்து வந்தார். இவரின் எருமை அதிக லிட்டர் பால் கறப்பதை அறித்த பலரும், அதை விலைக்கு வாங்க முன் வந்தனர். எனினும், கபூர் விற்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே, ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச், 32 லிட்டர் பால் கொடுக்கும் லட்சுமியை வாங்கியே தீர வேண்டும் என, முடிவு செய்தார். கடந்த ஓராண்டு காலமாக, கபூரை தொடர்பு கொண்டு, லட்சுமியை வாங்கிக் கொள்வதாக கூறி வந்தார். எனினும், கபூர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், "கபூரின் எருமைக்கு, எந்த விலையும் தரத் தயார்' என, சர்பஞ்ச் கூறினார். இதையடுத்து, கபூர் தன் எருமைக்கு, 25 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்தார். சர்பஞ்சும் எந்த பேரமும் செய்யாமல், 25 லட்சம் ரூபாயை கொடுத்து, எருமையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.வாங்கிய விலையை விட, 10 மடங்கு அதிக விலைக்கு, எருமையை விற்றதில், கபூர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கிடைத்த பணத்தில், தன் மகளின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.ஆந்திராவில், இந்த ஆண்டு இறுதியில், நடைபெறவுள்ள, மாட்டு கண்காட்சியில், அதிக பால் கறக்கும் பசு, எருமைகளின் உரிமையாளர்களுக்கு, 1 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தான் வாங்கிய லட்சுமியை, இந்த போட்டியில் கலந்து கொள்ள செய்து, 1 கிலோ தங்கத்தை வெல்ல திட்டமிட்டுள்ளார் சர்பஞ்ச்

1 கருத்து:

  1. மனித மனம் குரங்கு, நேர் வழியில் சிந்திக்காமல் அதிருஷ்டத்தை நம்புவதை என்னென்று சொல்வது அல்லது கொ(ள்)ல்வது.

    பதிலளிநீக்கு