செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

குழாய்த் தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கலாம்!

குழாய் த்  தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கலாம்!

குழாயிலிருந்து வரும் தண்ணீரின் விசையைப் பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் இன்ஜினியரிங் மாணவி,  செய்சக்தி: நான், ஈரோடு மாவட்டத்தின், பெருந்துறை மகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், இறுதி ஆண்டு படிக்கிறேன். நாளுக்கு நாள், மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதால், மின் தேவையை விட, உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால், எளிய வகையில் மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில், நண்பர்களோடு ஈடுபட்டேன். நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போது, நாம் ஏன் குழாய்களில் வரும் தண்ணீரின் விசையை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்க முடியாது என்ற சிந்தனையில் உருவானது தான், இந்த கண்டுபிடிப்பு. வீடு மற்றும் தெரு குழாய்கள், விவசாய பம்பு செட்கள் இவற்றை பயன்படுத்தும் போது, அழுத்தம் நிறைந்த தண்ணீர் வெளியேறும். அந்த அழுத்தத்தில் இருந்து சிறிய அளவிலான, "டர்பைன் மற்றும் டைனமோவை' இயக்கி, மின்சாரத்தை உற்பத்தி செய்தோம். உற்பத்தியான மின்சாரத்தை, "பேட்டரி'யில் சேமித்து, இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிய பயன்படுத்தினோம்.
இதில், "சென்சார்' பொருத்தப்பட்டுள்ளதால், தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் ஒளிர்வதை தடுத்து, மின்சாரத்தை சேமிக்கலாம். குழாயை பயன்படுத்தும் போதெல்லாம், தண்ணீரின் அழுத்தம் காரணமாக, நாங்கள் கண்டுபிடித்த சாதனம், மின்சாரத்தை உற்பத்தி செய்யும். கல்லூரி புராஜெக்ட்டுக்காக சிறிய வடிவில் தயாரித்தாலும், இதன் மூலம் தினமும், 3 முதல், 4 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். 900 ரூபாயில் தயாரிக்கப்பட்ட இச்சாதனத்திற்கு, "அக்குவா பிரைட்' என, பெயரிட்டுள்ளோம். இதன் காப்புரிமைக்காக, சென்னையில் உள்ள இந்திய காப்புரிமை கழகத்தில், விண்ணப்பித்து உள்ளோம். டில்லியில் உள்ள, "இந்திய அறிவியல் கழகம்' நடத்திய புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டியின் முதல் சுற்றில், அக்குவா பிரைட் சாதனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, எங்கள் புராஜெக்ட்டுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

2 கருத்துகள்:

  1. It's fantastic and by the way they can get electricity continuously by saving the water in the overhead tanks.

    பதிலளிநீக்கு
  2. If the gadjet is made available at an "affordable price" it will be a boon to many house-holders to obtain their much needed electricity and will also help the government in its efforts to produce more electricity.

    Better to apply for an "International copyright registration" if possible. The State Government can intervene and help the students and the college.

    பதிலளிநீக்கு