சனி, 1 டிசம்பர், 2012

வினையாக முடியும் "விளையாட்டு' : -உலக ஏப்பு நோய் ஒழிப்பு நாள்- Worlds Aids day

ஒழுக்கத்தை வலியுறுத்தாமல் பாதுகாப்பாகத் தவறு  செய்ய வழிகாட்டும்  நாள்



வினையாக முடியும் "விளையாட்டு' : -உலக  ஏப்பு நோய் ஒழிப்பு நாள்-

எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், டிச.,1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2011 - 2015 வரை "கெட்டிங் டூ ஜூரோ' (எய்ட்ஸ் இல்லாத) என்பது மையக்கருத்து. எச்.ஐ.வி., வைரசால் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனித செல்களில் பரவி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, உடலை போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
எப்படி பரவுகிறது:


பாதுகாப்பற்ற உறவு, எச்.ஐ.வி., உள்ள தாய் மூலம் குழந்தைக்கு, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி ஆகிய காரணங்களால் மட்டுமே எச்.ஐ.வி., தாக்குகிறது. இதைத்தவிர அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது, அவர்களை தொடுவது, அவர்களுடன் உணவுகளை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றால் எச்.ஐ.வி., பரவாது.

என்ன சிகிச்சை:
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தீவிரமாக உள்ளனர். தற்போது, வைரசின் வீரியத்தை குறைக்கும் மருந்து மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்சை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நீண்ட நாட்கள் வாழ சிகிச்சை முறைகள் உள்ளன.உலகில், 2011ம் ஆண்டு கணக்கின் படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்கின்றனர். 25 லட்சம் பேருக்கு புதிதாக நோய் ஏற்பட்டுள்ளது. 17 லட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. "இந்தியாவில் 1986ம் ஆண்டு, தமிழகத்தில் தான் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 57 லட்சம் பேர் எய்ட்சுடன் வாழ்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீதம் பேர் பெண்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்தியாவில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு பிறக்கின்றன என யூனிசெப் தெரிவிக்கிறது. எய்ட்ஸ் வராமல் தடுப்பது, அவரவர் கையில் உள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த பாடங்கள் மூலம் மாணவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.




எத்தனை பேர் :

உலகில், 2011ம் ஆண்டு கணக்கின் படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்கின்றனர். 25 லட்சம் பேருக்கு புதிதாக நோய் ஏற்பட்டுள்ளது. 17 லட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. "இந்தியாவில் 1986ம் ஆண்டு, தமிழகத்தில் தான் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 57 லட்சம் பேர் எய்ட்சுடன் வாழ்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீதம் பேர் பெண்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்தியாவில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு பிறக்கின்றன என யூனிசெப் தெரிவிக்கிறது.


எப்படி தடுப்பது:
எய்ட்ஸ் வராமல் தடுப்பது, அவரவர் கையில் உள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த பாடங்கள் மூலம் மாணவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

-தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக