புதன், 28 நவம்பர், 2012

"ஏழை மக்கள் பயன் பெறவேண்டும்!'

"ஏழை மக்கள் பயன் பெறவேண்டும்!':

புதிய தொழில் நுட்பத்தின் மூலம், 25 நாட்களில் வீடு கட்டித் தரும் ரவிச்சந்திரன்: என் சொந்த ஊர், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி. டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் வரை படித்திருக்கிறேன்.எங்க ஊரில் மழைக் காலம் ஆரம்பித்தால், அதிக வெள்ள சேதம் உண்டாகும். குடிசைவாசிகளின் நிலை,பரிதாபமாக இருக்கும்.அவர்களுக்கு, கான்கிரீட் வீடு என்பது, எட்டாக்கனிதான். அப்படியே, சிலர் முயற்சி செய்தாலும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், பல லட்சக்

கடனில் மூழ்கி கஷ்டப் படுகின்றனர்.இந்நிலையைப் போக்கி, நடுத்தரமக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக, மிக குறைந்த செலவில், குறைந்த நாட்களில், அஸ்திவாரத்தில் கம்பி இல்லாமல், புதிய தொழில் நுட்பத்தில், தரமான வீடுகளை கட்டித் தரவேண்டும் என்று, 10 ஆண்டுகளாக செயல் திட்டம் தீட்டினேன்.

"லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜி'க்காக, தமிழ்நாடு அறிவு சார்ந்த பொருட்கள் கழகத்திடம் காப்புரிமையும் பெற்றுள்ளேன்.தற்போது, 220 சதுர அடியில், 11 அடி உயரத்தில், 1.20 லட்சம் ரூபாயில், 25 நாட்களில், தரமான வீடுகளைக் கட்டி வருகிறேன். வீட்டின் அடிப் பகுதிக்கு, பிளிந்த் பீம், காலம் என, ஒரு, "மோல்டு'ம், வீட்டின் மேற்கூரைக்கு, ரூப் ஸ்லாப், காலம், லின்டெலுக்கு ஒரு, "மோல்டு'ம் பயன்படுத்துகிறேன். இப்படி கட்டும் வீடு, 75 ஆண்டு களுக்கும் மேலாக

தரமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும்.வீடுகட்ட ஆரம்பித்த நாளிலிருந்துசரியாக, 25ம் நாள் முழு வீட்டையும் கட்டி முடித்து, சாவியைஉரிமையாளரிடம்ஒப்படைத்து விடுவேன். நான் கட்டும் வீடுகளில் ஒரு ஹால், கிச்சன், டாய்லெட், செப்டிக் டேங்க், மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும்.ஏழை, எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதே என் நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக