புதன், 28 நவம்பர், 2012

பெண் தொழிலாளர்கள் மருத்துவத்திற்கு நிதி திரட்டும் மக்கள்

தி  ல் மர்தம் பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப ச் சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும்  ஊர் மக்கள்

கும்மிடிப்பூண்டி: தொழிற்சாலையில் இருந்து, வீடு திரும்பிய பெண் தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்துக்கு உள்ளாகி, இரு பெண்கள் இறந்தனர். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் மூன்று இளம்பெண்களின் குடும்ப ஏழ்மையின் காரணமாக, கிராம மக்கள் ஒன்று திரண்டு சிகிச்சைக்கு நிதி திரட்டி வருகின்றனர்.
நஷ்டத்தால் மூடல்
கும்மிடிப்பூண்டி அடுத்த, கவரைப்பேட் டை அருகே, கீழ்மேனி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் உஷா, 21, உமா, 21, லலிதா, 21, பரமேஸ்வரி, 20, லாவண்யா, 21, வள்ளி, 30, ஆகியோர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தனர்.
இத்தொழிற்சாலை, நஷ்டம் காரணமாக ஒரு மாதத்திற்கு முன் மூடப்பட்டது. சோழவரம் அருகே, சோழிப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அந்த நிர்வாகத்தின், மற்றொரு தொழிற்சாலைக்கு அவர்கள் வேலை செய்ய அழைக்கப்பட்டனர்.தங்கள் கிராமத்தில் இருந்து வெகு தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலையில், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு சென்றனர். கீழ்மேனி கிராமம் மட்டுமின்றி சின்னம்பேடு, கவரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, இப் பெண்கள், தொழிற்சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர்.கடந்த, 23ம் தேதி வேலை முடிந்து மேற்கண்ட பெண்கள் வேனில் வீடு திரும்பியபோது, பஞ்செட்டி அருகே முன்னால் நின்றிருந்த டிராக்டர் மீது வேன் மோதி கவிழ்ந்தது.
உண்டியல் ஏந்தி நிதி...
சம்பவ இடத்தில் உஷா, உமா, உயிரிழந்தனர். உடன் பயணித்த லலிதா, பரமேஸ்வரி, வள்ளி, ஆகியோர் படுகாயத்துடன் சென்னை ஸ்டான்லி மற்றும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முதுகு எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வரும் லலிதாவின் வருமானத்தை நம்பி அவரது குடும்பம் உள்ளது. இதேபோன்று மற்ற இரு பெண்களும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களது குடும்பத்தார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களுக்கு உதவ எண்ணிய கிராம மக்கள் ஒன்று திரண்டு "சிகிச்சை நிதி' என, பெயர் இடப்பட்ட உண்டியல் ஒன்றை ஏந்தி வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி வருகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,"விபத்தில் இரு பெண்களை பலி கொடுத்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று பெண்களை அரசும், தொழிற்சாலை நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசின் கதவை தட்டுவதற்கு எங்களுக்கு போதிய நேரமில்லை. முதலில் சிகிச்சைக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறோம்' என, தெரிவித்தனர்.
உடனடி சிகிச்சை



இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மனித வள துறை மேலாளர் ஆண்டர்சன் கூறுகையில், ""சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண் தொழிலாளர்கள் உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் படுவார்கள்'' என, தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக