தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைப்பு: இராமேசுவரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்
ராமேசுவரம், நவ. 28-
ராமேசுவரத்தை
சேர்ந்த கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் மீனவர்கள்
பிரசாத், எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லெட் ஆகிய 5 பேர் மீன்பிடிக்க
சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது
இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து சென்றனர்.
பின்னர்
அவர்கள் மீது போதை பொருட்கள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு
இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர். மீனவர்கள் 5 பேரும் கடந்த 28.11.2011
அன்று கைது செய்யப்பட்டனர். மீனவர்களின் வழக்கு விசாரணை 29 முறை ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டாக
இலங்கை சிறையில் உள்ளனர்.
அவர்கள் மீது இலங்கை அரசு
பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 5
பேரையும் உடன் விடுதலை செய்யகோரி ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். இன்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள்
3,500 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இன்று கடலுக்கு
மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 800 விசை படகுகள் கடற்கரை ஒரம்
நிறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக