வாரத்தில் 6 நாட்கள் ஓடும் கொல்லம்-நாகர்கோவில் இடையே மின்சார ரெயில் நாளை முதல் இயக்கம்
நாகர்கோவில், நவ.30-
நாகர்கோவிலில்
இருந்து திருவனந்தபுரம், கொல்லம், குருவாயூருக்கு பயணிகள் ரெயில் மற்றும்
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த
ரெயில்வே பட்ஜெட்டில் கொல்லம்-நாகர்கோவில் இடையேயான மின்சார ரெயில் சேவை
(மெமூ) அறிவிக்கப்பட்டது.
இந்த மெமூ ரெயில்
நாளை(சனிக்கிழமை) முதல் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே நிர்வாகம்
அறிவித்துள்ளது. இந்த புதிய பயணிகள் ரெயில் (66304/66305) நாளை காலை 11
மணிக்கு கொல்லத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
புதிய
சேவையை கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர் பீதாம்பர குரூப் தொடங்கி
வைக்கிறார். இந்த ரெயில் தினமும் காலை 11 மணிக்கு கொல்லத்திலிருந்து
புறப்படுகிறது. திருவனந்தபுரத்திற்கு பகல் 1.15 வரும் இந்த ரெயில் நாகர்
கோவில் ரெயில் நிலையத்தை மாலை 3.15 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில்
நாகர்கோவிலில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு
திருவனந்தபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். பின்னர்
திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40
மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
கொல்லம்-நாகர்கோவில்
இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை
தவிர அனைத்து நாட்களும் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.இந்த மின்சார ரெயில்
முன்னும் பின்னும் ஒரே நேரத்தில் இயக்கும் வசதி கொண்டது ஆகும். மேலும்,
நின்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் வேகமாக செல்லவும்,
குறிப்பிட்ட இடத்தில் நின்று செல்லவும் திறன் கொண்டது ஆகும்.
ஒரு
கிலோ மீட்டர் ஓடுவதற்கு ஒரு நிமிடமும், ரெயில் நிலையங்களில் நிறுத்திட 2
நிமிடமும் கால அட்டவணையாக வகுக்கப்பட்டுள்ளது.
8 பெட்டிகள் கொண்ட இந்த
ரெயிலில் 640 பேர் அமர்ந்தும், 1,500 பேர் நின்று கொண்டும் பயணம் செய்யும்
வசதி உள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்தில்
இயக்கப்படும் முதல் மெமூ ரெயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது
குறித்து திருவனந்தபுரம் ரெயில்வே மண்டல மேலாளர் ராஜேஷ் அகர்வால்
கூறும்போது, இந்த ரெயிலில் கொல்லம்- நாகர்கோவில் இடையே கட்டணமாக ரூ.21
வசூலிக்கப்படும்.
சாதாரண பயணிகள் ரெயிலில் உள்ள
கட்டணம் தான் இந்த ரெயிலிலும் வசூலிக்கப்பட உள்ளது. பஸ்கட்டணத்தை விடவும் 5
மடங்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் இந்த ரெயிலுக்கு பொதுமக்கள்
மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக