தற்போதைய செய்திகள்
தமிழக எம்.பி.,கள் ராஜினாமா செய்ய வேண்டும்: விஜயகாந்த்
First Published : 14 Dec 2011 05:45:05 PM IST
Last Updated : 14 Dec 2011 05:48:36 PM IST
தேனி, டிச. 14: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேனியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.தேனியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் விஜயகாந்த் பேசியது: முல்லைப் பெரியாற்று தண்ணீரை குடித்து வளர்ந்தவன் என்ற முறையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன். கேரள மக்களின் பாதுகாப்பில் தமிழர்களுக்கு அக்கறை உண்டு. அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை கேரள மக்கள் நம்பக் கூடாது. அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக எம்.பி.,கள் கேட்டதற்கு, கேரள அரசிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். மத்திய அரசு மெத்தனப் போக்குடன் நடந்து வருவதாக இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார்.தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்தும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தேனி மாவட்ட மக்கள் தற்போது தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு போராடி வரும் மக்களுக்கு போலீஸ் தடியடிதான் பரிசாக கிடைத்துள்ளது. கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்.பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினமா செய்ய வேண்டும். தேசிய சாலைகளைப் போல, நதிநீரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும். அணையில் நீர்தேக்கும் அளவு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு மற்றும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பெரியாறு அணை பிரச்னையில் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
கருத்துகள்
முதலில் நீ ராஜினாமா சேய் டா ....
By gopal
12/14/2011 9:41:00 PM
12/14/2011 9:41:00 PM
அருமையான யோசணைகள். பக்தி செலுத்துவதில் தமிழர்கள் அறீவாளிகளாக இருக்க வேண்டும்.மலையாளிகள் தெலுங்கர்கள் எவரனும் நம் ஊர் கோயில்கல்லுகு கூட்டம் கூடி வராத பொது நாம் ஏன் அங்கு போயி உண்ட்யலை நிரப்ப வேண்டும்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும். விஸ்வகர்மன்.
By விஸ்வகர்மன்
12/14/2011 9:36:00 PM
12/14/2011 9:36:00 PM
ஆண்டு தோறும் இலட்ச கணக்கில் அயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கோடிக்கணக்கான ரூபாய்களை அங்குள்ள மேல்சாந்தி கீழ் சாந்திக்கு என தானம் கொடுத்து வருகிறார்கள். விஜயகாந்த் சொல்வதை நான் வரவேற்கின்றேன். தான் குடி இருக்கும் வீட்டில் காணாத தெய்வத்தை வெளியில் போய் காணமுடியும் என்பது அரியது.
By annakan
12/14/2011 9:31:00 PM
12/14/2011 9:31:00 PM
"தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்."- நன்றி, திரு.விஜயகாந்த் .தமிழனின் அழிவுக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு அடையாளம் தான் இந்த முட்டாள்தனமான ஐயப்ப பக்தி. எனது வாழ்நாளின் முற்பகுத்தில் முருகனை தவிர வேங்கடவனை தவிர அம்மனை தவிர, சிவனை தவிர வரலாற்றில் வேறு தெய்வங்களை கும்பிடாத தமிழனி மட்டுமே பார்த்தேன். ஆனால் நம்பியார் போன்ற மலையாளி நடிகர்களின் இன பற்றான ஐயப்ப வழிபாட்டை ஏமாளி தமிழனும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று இன்று ஒரு இயக்கமாகவே வளர்ந்து விட்ட முட்டாள் தனமாந ஐயப்ப பக்தி தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் முல்லை பெரியார் அணையை உடைப்போம் என்று மலையாளிகள் முரச்சிக்கும் போதுக்கோத் அனெக் உள்ள ஐயப்ப சபரிமளிக்கு செல்வோம் என தமிழன் நடக்கும் பொது இவர்கள் எல்லாம் எப்பாடு ஒரு இழி பிறவிகள் என எண்ண தோன்றுகிறது. தயவு செய்து தமிழர்களே இன பற்றோடு செயல்படுங்கள்.
By P .Padmanaabhan
12/14/2011 9:27:00 PM
12/14/2011 9:27:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA களை ராஜினாமா செய்ய சொல், உன் கட்சிக்கு MP இல்லேன்ற தைரியத்துல பேசுறியா?
By radhakrishnan
12/14/2011 9:13:00 PM
12/14/2011 9:13:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA க்கலை ராஜினாமா செய்ய சொல், உனக்கு MP இல்லேன்னு தைரியமா பேசுறியா?
By ram
12/14/2011 9:08:00 PM
12/14/2011 9:08:00 PM
ஐயப்பன் கோவிலுக்கு அதிகமாக வருமானத்தை கொடுப்பது தமிழர்களின் கூட்டம்தான், ஐயப்பனே இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்தவேண்டும், தமிழர்கள் சில காலத்திற்கு சபரிமலை செல்வதை நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டிலுருந்து செல்லும் பொருட்களை தடை செய்ய வேண்டும். கேரளா தன்னால் வழிக்கு வரும்.
By Kamalar
12/14/2011 8:49:00 PM
12/14/2011 8:49:00 PM
உண்மைதான். அத்தனை M P இக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் பிரதமருக்கு நம்முடைய உணர்ச்சிகள் புரியும். இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் பிரதமர் மெளனமாக இருப்பது வேதனைக்கு உரியதாக உள்ளது.
By இரா.இராவணன்
12/14/2011 8:43:00 PM
12/14/2011 8:43:00 PM
அட்ரா சக்கை ! நமக்கு தான் எம்பி இல்லையே ? நமக்கு என்னா போச்சு ?
By ர.ராஜன்,cheyyar
12/14/2011 8:26:00 PM
12/14/2011 8:26:00 PM
தலைக்குக் தலை பெருதனம்... ஐய்யப்பன் பத்தி நீ பேசாதே..
By மணிகண்டன்
12/14/2011 8:25:00 PM
12/14/2011 8:25:00 PM
தமிழ் மக்கள் இலங்கையில் செத்து மடிந்த போதே செய்யாதவர்கள் இப்போது செய்ய போக சொன்னால் எப்படி?ஓட்டு போட்ட மக்களை மாக்ககள் அக்க துடிக்கும் அரசியல் கட்சிகள் உள்ளவரை ஒன்றும் செய்யமுடியாது.காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டு மக்கள் புறகணிக்க வேண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கட்சி.தமிழ் மக்கள் ஒருவர் கூட இனி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட கூடாது.அவர்களோடு கூட்டணி வைப்பவர்களையும் புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் என்ன தமிழ் மக்களையும் தமிழ் நாட்டையும் புறகணிப்பது நாம் ஒன்று சேர்ந்து புறகணிப்போம் .தமிழா புறப்படு இனி இவர்கள் நம் தலை எழுத்தை மாற்ற தேவை இல்லை .நாம் அவர்கள் தலை விதியை மாற்றுவோம்.
By BKV
12/14/2011 8:14:00 PM
12/14/2011 8:14:00 PM
இதைப்புரிந்து கொண்டு தமிழ் மக்கள் கேரளாவுக்கு டூர் போவதையும், ஐயப்பன் கோவிலுக்கு போவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் .நம் பணத்தை வீணா நன்றி கேட்ட கேரளாவுக்கு எதற்கு செலவு செய்ய வேண்டும்.வன்முறைக்கு வன்முறை, காலம் இது.வன்முறையால் தான் கேரளாவுக்கு புத்தி புகட்ட வேண்டுமென்றால் அதற்கு தமிழ் மக்களுக்கு வீரம் உள்ளதா?வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றில்லாமல் செயல்படவேண்டும்.
By ramachandhirasekaran.
12/14/2011 7:36:00 PM
12/14/2011 7:36:00 PM
இவர் எதற்கு எம்பீக்கள் மட்டும் என்கிறார்? எம் எல் ஏக்களும் என்று சொல்லி ,முன்மாதிரியாக தன் பதவியை முதலில் விடுவதுதானே?
By Tamilian
12/14/2011 7:12:00 PM
12/14/2011 7:12:00 PM
இது போன்ற யோசனைகள் சினிமாத்தனமானது மட்டுமல்ல சின்னத்தனமானது. மக்களின் உணர்சிகளை தட்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கழகங்கள் சினமாவில் அரசியலும் அரசியலில் சினிமாவும் செய்து தமிழ்நாட்டை குட்டிசுவராக்கிவிட்டனர். எந்த மாநிலத்துடனாவது இதுவரை நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்ப்பட்டதுண்டா? நதிநீர் பிரச்னை அடிப்படை வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்று. அதை கூத்தாடிகள் கையில் கொடுப்பது குரங்கு கையில் கொடுத்த பூமாலைதான்.
By திண்டல் சங்கர நாராயணன்
12/14/2011 7:00:00 PM
12/14/2011 7:00:00 PM
திரு .விஜயகாந்த் அவர்களின் கோரிக்கை நியாயமானதே.அதுபோல இந்த கோரிக்கைக்கு வலுவூட்ட ,முல்லை பெரியார் அணைக்கு ஆதரவாக தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைத்து ,மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.இதனால் தமிழக மக்கள் மத்தியில் அவரது மதிப்பு பன்மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது.
By தனபால்
12/14/2011 6:57:00 PM
12/14/2011 6:57:00 PM
இவர் வாயை மூடினால் போதும். அம்மா பிரச்சனையை சரி பண்ணி விடுவார். கருணாநிதி திமுக முடிந்துவிட்டது . திமுக செத்த பிணம் .
By ssrinivasan
12/14/2011 6:57:00 PM
12/14/2011 6:57:00 PM
ஹையா .. எம்.பிக்கள் எல்லாம் ராஜினாமா பண்ணிட்டா அடுத்த தேர்தல்ல இவருக்கு எதாச்சும் எம்.பி. சீட் கிடைக்கும்னு நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிறார் கேப்டன். மக்கள் கொடுத்த உரிமையை தட்டிக்கழிப்பதால் ஒரு புண்ணாக்கும் ஆக போவதில்லை. எல்லா எம்.பிக்களும் மொத்தமா சேர்ந்து பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினையை சத்தமாக பேசுங்கள். அதை விட்டுட்டு ஐடியா சொல்லவந்துட்டார். எல்லாம் நேரம்டா சாமி.!
By ரசிகா
12/14/2011 6:40:00 PM
12/14/2011 6:40:00 PM
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழருக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியோடு எந்த வித கூட்டணியோ/ அரசியல் உடன்பாடோ காணமாட்டேன் என்று உரைக்க சொல்ல முடியுமா காப்டைன்லு (captainlu ). 39 MP சீட்ல 19 தந்தா கூட உடனே காங்கிரஸ் கூட கூட்டணி வைத்து தமிழருக்கு துரோகம் செய்ய ஆரம்பிச்சுடுவீங்களே. உங்களுக்கு சுய மானம் உண்டா? ஒரு முறை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
By Baalaa
12/14/2011 6:36:00 PM
12/14/2011 6:36:00 PM
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனினும் சிலர் இறைவனின் மீதான பித்தினால் தானே வேற்று மாநிலம் சென்று வணங்குகின்றனர். எங்கெங்கும் காணினும் சக்தியடா! என்றானே பாரதி.உள்ளம் பெருங்கோயில் என்றும் தெரியும். இருப்பினும் சிலரின் மேலோங்கிய அன்பு என்பதா? இல்லை வேறேதுவும் சொல்லவா? எனத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து திரிந்து இறைவனை வழிபடச் செல்லும் நிலையை என்னவென்று சொல்ல? படியாதவனின் மனம் தான் பதவிக்கு அலையும். அதனால் தான் கேரள உம்மன்சாண்டியும் சார்ந்தவர்களும் உண்மையை உணராது ஏதோ எல்லாமும் அறிந்ததைப் போல் தில்லி வரை சென்றுள்ளனர். உச்ச நீதி மன்றத்தை அவமதிப்பதை போல் அல்லவா கேரள அரசு செயல் படுகிறது. தில்லிவாலாக்களுக்குமா தெரியவில்லை?
By கி.பிரபா
12/14/2011 6:27:00 PM
12/14/2011 6:27:00 PM
ராஜினமா செய்வதற்கென்றால் எதற்கு தேர்தலிலே நிற்கணும்?. ராஜினமா செய்த பிறகு பாராழுமன்றத்தில் யார் பேசுவார்கள்? பிரதமர் தான் எம்பி இல்லாத கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? தேர்தலில் நிற்பதே வென்று, அதன் பின் பணியை தொடரத்தான், புறமுதுகிட்டு ஒடுவதர்கல்ல.
By K. ராஜன், திருநெல்வேலி
12/14/2011 6:15:00 PM
12/14/2011 6:15:00 PM
நீயும் உன்னுடைய MLA களும் ராகினமா செய் ...
By SARAVANAN
12/14/2011 6:04:00 PM
12/14/2011 6:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *
திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
பதிலளிநீக்குமேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று