திங்கள், 3 அக்டோபர், 2011

thamizh sahithya academy: உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி

First Published : 03 Oct 2011 03:07:43 AM IST

Last Updated : 03 Oct 2011 05:20:32 AM IST

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2011-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில், பனிநிலவு என்ற நூ
நாமக்கல், அக். 2: தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், கெüரவிக்கவும் தமிழக அரசு உடனடியாக தமிழ் சாகித்ய அகாதெமியை ஏற்படுத்த வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் 3-ம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில், எழுத்தாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது: தனது பிறந்த நாளை சக எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிக் கொண்டாடும் அற்புதமான பண்பாட்டை தமிழகத்துக்கே முன்மாதிரியாக்கிக் காட்டியிருக்கிறார் கு.சி.பா.தமிழகத்தில் உள்ள நாவலாசிரியர்கள் பலர் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களைப் போன்று எழுதிக் குவித்து வருகின்றனர்.ஆனால் எதைச் சொல்ல வருகிறோம், நமது கதையின் களம் எது, சமுதாயத்துக்கு இதனால் என்ன நன்மை விளையப் போகிறது என்றெல்லாம் யோசித்து எழுதுவதுதான் கு.சி.பா.வின் பாணி.அவரது கதைகளில் யதார்த்தம் இருக்கும். நிஜ மனிதர்கள், நிஜ உணர்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்வது கு.சி.பா.வுக்கு கைவந்த கலை. தனது ஒவ்வொரு நாவலுக்கும் கதைக் கருத்தைத் தீர்மானித்ததும் அதன் கதைக் களனைத் தேடிச் சென்று, அங்கேயே தங்கியிருந்து நிஜமனிதர்களின் உணர்வுகளை, பிரச்னைகளை, நிகழ்வுகளை முழுமையாக உள்வாங்கி நாவல் எழுதுவதுதான் கு.சி.பாவின் பாணி. ஒரு நாவலை எழுத இவர் மூன்று, நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். சமுதாயக் கண்ணோட்டம்தான் இவரது நாவல்களின் அடிப்படை.எனக்கு உள்ள ஆதங்கம் கு.சி.பா. போன்றவர்களுக்கு சமுதாயத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதுதான். இவருக்கு என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாகித்ய அகாதெமி, ஞானபீட விருதுகள் ஏன் தள்ளிப் போகின்றன என்று தெரியவில்லை.கேரளத்தைப் போன்று தமிழகத்துக்கும் ஒரு சாகித்ய அகாதெமி அமைப்பை ஏற்படுத்தி, விருதுகள் வழங்க வேண்டும். இன்றைய அவசியத் தேவையும், உடனடித் தேவையும் அதுதான். ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசுகள் வழங்காமல், நல்ல படைப்பாளியைத் தேடிப் பிடித்து பரிசு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இலக்கியம் என்பதே இல்லாமல் போய்விடும். வருங்காலத்தில் இன்றைய காலம் இலக்கியத்தின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், திறமையான எழுத்துக்கள் இனம் காணப்பட்டு பாராட்டப்பட வேண்டும்.கு.சி.பா. அறக்கட்டளையின் இலக்கிய விருது, ஞானபீட விருதுக்கு நிகரானதாக உயர வேண்டும். அந்த விருது நமக்குக் கிடைக்காதா என்ற ஏக்கத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.விழாவில் விருது வழங்கும் நோக்கம் குறித்து எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி பேசினார். விழாவுக்கு தலைமை வகித்துப் பேசிய கு.சி.பா. அறக்கட்டளைத் தலைவர் பொ.செல்வராஜ், அடுத்த ஆண்டு முதல் அறக்கட்டளை சார்பில் இலக்கிய விருதுகளுக்கான முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக