புதன், 5 அக்டோபர், 2011

cheapest palm top computer உலகின் மிக மலிவான கையடக்கக் கணினி ஆகாசு இன்று வெளியீடு


உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

First Published : 05 Oct 2011 10:17:04 AM IST


புதுதில்லி, அக்.5: உலகின் மிகவும் மலிவான கையடக்கக் கணினி ஆகாஷ் இன்று சந்தைக்கு வருகிறது. சீனாவில் முதல்முதலில் இதன் விற்பனை துவங்கியது. தற்போது, இந்திய மாணவர்களுக்காக மிகக் குறைந்த விலையில் கையடக்க கணினி டேப்ளட் புதன்கிழமை இன்று முதல் சந்தைக்கு வருகிறது.இங்கிலாந்து நிறுவனமான டேடாவைண்ட் நிறுவனம், சீனாவில் தனது நோட்புக்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்திய சந்தையைக் குறிவைத்து இந்த நிறுவனம் அதிக அளவில் நோட்புக்குகளைத் தயாரிக்கவுள்ளது. செகந்தராபாத்தில் தனது தொழிற்சாலையினைத் துவக்கி, இங்கேயே தயாரிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.ஒவ்வொரு நாளும் 700 கையடக்க கணினிகள் தயாரிக்கப்படும் என்றும், போகப்போக இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அரசின் ஒத்துழைப்பிருந்தால், 12 மில்லியன் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விக்கு பயனுள்ள வகையில் இது தயாரித்து அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது அந்த நிறுவனம்தற்போது முதல் 500 மாணவர்களுக்கு ரூ.2,276 என்ற விலையில் (49 டாலர்) தரப்படும். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ரூ.1,750 க்கும், அரசின் ஆதரவு கிடைத்தால், பின்னாளில் மானிய விலையில், ரூ.500க்கும் இதனை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாம்.
கருத்துகள்

இத வாங்கி எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கலாமே !!!
By ராஜசேகரன்
10/5/2011 2:28:00 PM
இப்படிக் கிடைக்க வாய்ப்புள்ளபோது 'அம்மா' அவரசம் அவசரமாக லேப்டாப் வாங்கியதன் மர்மம் என்ன????
By அப்துல் ரவுப்
10/5/2011 12:31:00 PM
கையடக்க ஆகாஷ் கணினியை அன்புடனும் ஆவலுடனும் வரவேற்கிறோம்.
By madhavaraman
10/5/2011 12:08:00 PM
அட இலவசமா குத்தா பத்திக்கும்ல
By Thamilmannan
10/5/2011 11:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக