அரசு அறியாமலோ அரசை மீறியோ படைத்துறையினர் போர்க்குற்றங்கள் புரிந்திருந்தால் அரசு உசாவுவதில் பயன் உண்டு. ஆனால், போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும்
சிங்கள அரசே புரிந்துள்ளதால் குற்றவாளியே எப்படி உசாவவும் நீதி வழங்கவும் முடியும்? சீனா தொடர்ந்து சிங்களத்திற்குச் சார்பாக இருப்பதற்காகவாவது இந்தியா ஈழத்தை ஆதரிக்க வேண்டாவா? இனப்படுகொலைகளில் சீனாவிற்கு உள்ள பங்கும் உசாவப்பட்டு அனைத்துக் குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஐ.நா. அறிக்கை: இலங்கைக்கு சீனா ஆதரவு
First Published : 01 May 2011 03:32:23 AM IST
பெய்ஜிங், ஏப். 30: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றமே என்ற ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் மே மத்தியில் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், திடீரென சீனா அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபட்சயை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இப் பிரச்னையை இலங்கையிடமே விட்டுவிடுங்கள், பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு அரசே குழு ஒன்றை அமைத்துள்ளதால், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளே சரியானதாக இருக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ சனிக்கிழமை தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதை, உலக நாடுகள் வெளியில் இருந்து செய்தால் போதும் என்றும் ஹாங் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக