குறள்நெறி பரப்பும் மன்றத்தார்க்குப் பாராட்டுகள். தொண்டு பரவட்டும்! பணி தொடரட்டும்! நன்னெறி மலரட்டும்! நல்லோர் உருவாகட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கோடை விடுமுறை குதூகலம்:
தூதுவர்களை உருவாக்கும்
திருக்குறள் பேரவை
First Published : 03 May 2011 01:54:58 AM IST
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள இரண்டரை வயது குழந்தை ஹரினி. காஞ்சிபுரத்தில் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி வகுப்பு.
காஞ்சிபுரம், மே 2: காஞ்சிபுரத்தில் 1330 திருக்குறள் தூதுவர்களை உருவாக்குவதற்காக கோடைக்கால இலவச பயிற்சி முகாம் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்று வருகிறது. ÷திருக்குறள் பேரவை சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் காஞ்சிபுரம் நகரத்தில் ஸ்ரீ நாராயணகுரு மெட்ரிக் பள்ளி, தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் மடம் உள்பட ஏழு இடங்களில் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் ஒவ்வொரு இடங்களிலும் முதல் கட்டமாக 30 மாணவர்களை சேர்த்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ÷தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி இப்பயிற்சி முகாம் தொடங்கியது. தற்போது ஒவ்வொரு மையத்திலும் 20 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். ÷இம்மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சியுடன் நினைவாற்றல், நன்னெறி ஆகியவற்றிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. திருக்குறளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் 11 நாள்கள் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் 1330 திருக்குறளையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு திருக்குறள் தூதுவர்கள் என்ற பட்டம் வழங்கப்படுகிறது. ÷இதுபோல் ஏற்கெனவே திருக்குறளை நன்கு கற்றுத் தேர்ந்த 18 பேருக்கு திருக்குறள் தூதுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் திருக்குறள் தூதுவர்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் திருக்குறள் பயிற்சியை நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர். ÷தற்போது காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை குறள் அமிழ்தன், புலவர் பரமானந்தம், பயிற்சியாளர் எல்லப்பன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காஞ்சிபுரம் பயிற்சி மையங்களில் கா.கலைவாணி, ப.கெüசல்யா, ப.காயத்திரி ஆகிய திருக்குறள் தூதுவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். ÷காஞ்சிபுரம் நாராயணகுரு மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் பயிற்சி மையத்தில் ஹரினி என்ற இரண்டரை வயது குழந்தையும் திருக்குறள் பயிற்சி எடுத்து வருகிறது. இங்கு குழந்தைகளுக்கு திருக்குறள் பயிற்சி அளிக்கும் அதேவேளையில் அவர்கள் ஆரோக்கிய வாழ்வு, கோடை வெப்பத்தை தணிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. ÷இப்பயிற்சி குறித்து திருக்குறள் பேரவை நிறுவனர் குறள்அமிழ்தனிடம் கேட்டபோது, ""திருக்குறள் பேரவை சார்பில் இதுவரை 18 திருக்குறள் தூதுவர்களை உருவாக்கியுள்ளோம். மொத்தமாக 1330 திருக்குறள் தூதுவர்களை உருவாக்கி அவர்கள் மூலம் தமிழகமெங்கும் பட்டி, தொட்டி எல்லாம் திருக்குறளை பரப்புவதே எங்கள் நோக்கம். அதற்காகவே இலவசமாக இப்பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக