பணம் கொட்டுகின்ற இடத்தில்தான் கொட்டுகின்றது. ஒரே ஆட்டத்திற்கு முதன்மை கொடுத்தாலும் அதனை வேறு மாதிரி நடைமுறைப்படுத்தலாம். இப்பரிசுத் தொகையை வீரர்களுக்கு வழங்கியதற்கு மாற்றாக வளரந்து வரும் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அணியின் பெயரில் அறக்கட்டளை நிறுவி இளம் வீரர்களை ஊக்கப்படுத்தலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இந்திய வீரர்களுக்கு ரூ 3 கோடி: கருணாநிதி வழங்கினார்
First Published : 05 May 2011 12:53:23 PM IST
சென்னை, மே.5: உலகக் கோப்பையை வென்ற எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரூ 3 கோடி மற்றும் தமிழக வீரர் அஸ்வினுக்கான ரூ 1 கோடி சிறப்புப் பரிசை தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்மையில் மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாக விளையாடி, இலங்கை அணியை வென்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது.இச்சாதனையைப் போற்றிப் பாராட்டும்வகையில், இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தமிழக அரசின் சார்பில் ரூ 3 கோடி சிறப்புப் பரிசும், இந்திய கிரிக்கெட் அணியில் பங்கு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ரூ 1 கோடி சிறப்புப் பரிசும் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 3 கோடியைச் சமமாகப் பிரித்து வழங்கிட முடிவு செய்து - அணியின் தலைவர் திரு. எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு தலா 21 லட்சத்து 42 ஆயிரத்து 857 ரூபாய்க்கான காசோலைகளையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவச் செயலாளர் என். சீனிவாசனிடம் அணியின் ஏனைய வீரர்களுக்கான காசோலைகளையும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஆர். அஸ்வினிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையையும் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் வழங்கினார்.இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தூட்டத்தைத் தினமணி ஏற்கவில்லை. வாழ்க அதன் நடுவுநிலைமை.
பதிலளிநீக்கு