எல்லா நோய்க்கும் ஒரே மருந்தை அளிக்க இயலாது. ஒரே நோயாக இருப்பினும் எல்லார்க்கும் ஒரே மருந்தை அளிக்க இயலாது. நோயின் தன்மையுடன் நோயாளியின் தன்மை குறித்தும் ஆராய்ந்து அவரது உடலுக்கேற்ற மருந்துதான் தரப்படும். எனவே, மருந்து மாறுபடும். எனவே, தேர்தல் ஆணையத்தின் பற்களைப் பிடுங்க வேண்டும் என்பதற்காக ஊதுகுழலாக ஒரே மாதிரியான தேர்தல் நடவடிக்கை எனக் கோருவது சற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தலைப்பில் திருநாவுக்கு அமைச்சர் பதவி அளித்து விட்டீர்களே! அவ்வளவு நம்பிக்கையா? உண்மையிலேயே கவனக்குறைவுதானா? அவர் அமைச்சராக ஆனால் நல்ல தொண்டு செய்வார். ஆனால், காங்.கின் சார்பில் வெற்றி பெற்று அமைச்சராவது என்பது தமிழ்நாட்டிற்குப் பெருங்கேடு. அவர் தோற்றால்தான் கட்சித்தாவல்கள் குறையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
எல்லா மாநிலங்களிலும் ஒரே தேர்தல் நடவடிக்கை தேவை:
அமைச்சர் திருநாவுக்கரசர்
First Published : 05 May 2011 01:30:45 AM IST
சென்னை,மே 4: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை வரையறை செய்வதுடன், எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டம் இயற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை திருநாவுக்கரசர் சந்தித்தார்.இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:தேர்தல் நடந்து முடிந்ததற்குப் பிறகு மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்தித்தேன். 6-வது முறையாக அவர் முதல்வராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலைப் பார்க்கிறபோது தமிழகத்தில் கொஞ்சம் அதிகமான கெடுபிடிகள் இருப்பதாக பொதுமக்களும் கருதுகிறார்கள். நாங்களும் கருதுகிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதுடன் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களையும் வரையறை செய்ய வேண்டும்.இதைப்போல எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான தேர்தல் நடவடிக்கை மேற்கொ ள்ளவும் சட்டம் வகுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக