வியாழன், 10 மார்ச், 2011

Seat sacrifice for the welfare of alliance- ramdoss: கூட்டணியின் நலன் கருதியே விட்டுக் கொடுத்தோம்: இராமதாசு

ஈழத்தமிழின அழிப்பில் ஈடுபட்ட- தமிழக மீனவர்கள் மரணத்திற்குக் காரணமான- ஊழல்உறைவிடமான காங்.கிற்கு விட்டுக் கொடுப்பதை நல்ல நோக்கம் என்று சொல்கிறார் என்றால்  இவரின் எப்பேச்சை நம்புவது? இனி,  இவர் தமிழர் நலன் குறித்துப் பேசாமல் இருப்பது நல்லது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
/தமிழே விழி! தமிழா விழி! /


கூட்டணியின் நலன் கருதியே விட்டுக் கொடுத்தோம்:  இராமதாசு

ராமதாஸ்
சென்னை, மார்ச் 9: கூட்டணியின் நலன் கருதி நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்துவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவு குறித்து விவாதிப்பதற்காக பா.ம.க.வின் மாணவர் அணிக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.பொது நுழைவுத் தேர்வு முடிவை கண்டிக்கும் வகையில் பா.ம.க. மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிடைத்த தொகுதியை எந்தக் கட்சியும் விட்டுக் கொடுத்தது என்பது இதுவரை நடந்ததில்லை.எனினும், எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற யேவண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக பா.ம.க.வுக்கு தரப்பட்ட தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளோம்.பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார் ராமதாஸ். மார்ச் 14-ல் ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே பொது நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவைக் கண்டித்து சென்னையில் மார்ச் 14-ம் தேதி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக