புதன், 9 மார்ச், 2011

D.M.K. - Cong. singned in the election agreement: தேர்தல் உடன்படிக்கையில் திமுக-காங்கிரசு கையெழுத்து

தி.மு.க. தலைமையுடன் காங். கின் தலைமைதானே ஒப்பந்தம்  போட்டிருக்க வேண்டும். அதன் பிரிவு போடுவது பொருந்தாதே.  ௨) சோனியாவிற்கு அஞ்சி ௬௩ இற்கு ஒத்துக் கொண்டதாகக் கூறுவது தவறு. கோரிக்கை ஏற்கப்பட்டதும் கலைஞர் 63 இற்கு ஒத்துக் கொண்டார். எனவே, அவரைப்  பொறுத்தவரை அது வெற்றிதான். குடும்பச்  சிக்கலைத் தீர்க்க குடும்பத்தவர் மூலம் தகவல்களைப் பரிமாறி வெற்றி கண்டுள்ளார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!/

தேர்தல் உடன்படிக்கையில் திமுக-காங்கிரஸ் கையெழுத்து


சென்னை, மார்ச்.9: திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வ தொகுதி உடன்படிக்கையில் இன்று கையெழுத்திட்டன.தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த 2 வார காலமாக சிக்கல் நீடித்து வந்தது. நேற்று அந்த சிக்கல் தீர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் என முடிவானது.இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலுவும் அதிகாரப்பூர்வ தொகுதி உடன்படிக்கையில் இன்று கையெழுத்திட்டனர்.விவாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் என முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என தங்கபாலு பின்னர் தெரிவித்தார்.
கருத்துகள்

எஸ் -பாண்ட் அலைக் கற்றை ஒதுக்கீடு ரத்து ! 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியானது ! லத்திகா சரண் பதவி நியமனம் நேர்மையற்றது ! தாமஸ் பதவி நியமனம் சட்ட விரோதமானது அருவருக்கத் தக்கது அசிங்கமானது ! இதையும் விட காமன்வெல்த்...வீட்டு வசதி...என தொடரும் அவலங்கள் ! தி மு க காங்கிரஸ் கூட்டணி அரசுகள் தேசத்தை சீரழித்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது ! ஏன் அவர்கள் கொள்ளையடித்த பணத்தினை மனதாலும் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாது ! இப்படிப் பட்ட சமூக விரோதிகளாம் தி மு க காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கிரிமினல் குற்றங்களை மறைப்பதற்காக திராவிட இயக்கத்தின் உயிரினை பறித்து விட்டார்கள் ! தந்தை பெரியாரின் வாரிசுகளை பேரறிஞர் அண்ணாவின் சந்ததிகளை விற்று விட்டார்கள் ! சுய மரியாதையினை இழந்து கொள்கை கோட்பாடுகளை குழி தோண்டி புதைத்து விட்டார்கள் ! இப்படிப் பட்ட இனமான விரோதி தமிழ் இன துரோகி..மாபாவி கருணாநிதி செய்து கொண்ட கூட்டணி ஒப்பந்தத்தை செல்லத் தகாததாக அறிவின் துணை கொண்டு உடன் பிறப்புக்கள் உணர்ந்து தெளிந்து நிராகரிப்பது மிகவும் அவசியமானது ! இப்படி நிராகரிப்பது தனக்கும் தனது சமூகத்திற்கும் இந்த தேசத்திற்கும் மிக
By rajasji
3/9/2011 5:33:00 PM
வீரமணியை கூப்பிட்டிருந்தா சாட்சி கையெழுத்துப் போடுவாரே......
By jayakumar
3/9/2011 4:25:00 PM
மானம் தான் பெரியது! பதவி இல்லை என்றார். வீரமணியோ தமிழர்கள் காங்கிரஸ் இல்லாதது நல்லது என்கின்றார்கள் என்றார். மானம் கெட்ட கருணாநிதி என்ன சொல்வார்? ஊழல் சமரசம் செய்துவிட்டார? கனிமொழி, தயாளு, ராசாத்தி அம்மாக்கள் காப்பற்றப்பட தமிழனை விற்ற பழியுடன் தேர்தலில் தோல்வியடைய வேணும். அவரது அரசியல் வாழ்வு அவமானத்தில் முடிய வேண்டும். இனிமேல் செங்கோல் கருணாநிதியின் கையில் இருப்பது மக்களுக்கு பயனில்லை.
By கருப்புசாமி
3/9/2011 3:58:00 PM
oru vazhiyaga naadgam mudivukku vanthu vittadhu.............
By Arul
3/9/2011 3:57:00 PM
தர்மம் வெல்லும் (1 . 760000000 கோடி )
By கல்கி பிரியன்
3/9/2011 3:26:00 PM
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கேற்ப திமுகவுக்கு சறுக்குத்தான்..எனினும் மக்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதைத் தேர்தலில் வெளிப்படும்
By K K Meera
3/9/2011 3:19:00 PM
எந்தெந்த நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தம் தயாரானது என்றும் கைஎழுதிட்டிருக்கிரார்களா ?
By முட்டாள்
3/9/2011 3:15:00 PM
முட்டாள் பயல்கள்
By நாதன்
3/9/2011 3:06:00 PM
மன்னராட்சி காலூன்றி இருக்கிற அரபுச் சீமையில் மக்கள் புரட்சி வெல்லுமானால் மக்களாட்சித் தத்துவம் மலர்குலுங்கும் மண்ணில் புரட்சி வெடிக்க அதிக நேரமாகாது. அதற்கான தருணம்தான் வருகிற பொதுத் தேர்தல் இந்தத் தேர்தலின் முடிவில் மாறுதலும் சாத்தியாகும். மக்களுக்கு ஆறுதலும் சாத்தியமாகும். தொலை நோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு வளமான எதிர்காலத்திற்கு வழி காணாமல் நிகழ்காலத்தின் கதவடைக்கிற கருணாநிதியின் காலம் தமிழக வரலாற்றில் கசப்பான காலம் களப்பிரர் காலத்தைத் தான் நினைவு படுத்துகிறது. நெஞ்சு சுடுகிறது. மக்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல் மீனைக் கொடுத்து மக்களை ஏய்க்கிற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை ஏய்க்கவும் ஏமாற்றவும் திட்டமிடுகிறார்கள். மலைவாசியும் தொட முடியாத தூரத்தில் விலைவாசி. இதை நீ யோசி என்று சொன்னால் மக்களுக்கு வாங்கும் சக்தி வந்து விட்டது என்று முதலமைச்சர் பிலாக்கணம் பாடுகிறார். தன்மக்களைச் சொல்கிறாரா? தமிழ்நாட்டு மக்களைச் சொல்லுகிறாரா? என்பது தான் தெரியவில்லை. ஜனநாயக பண்புக்குப் பந்தி வைக்க குடவோலை முறைகண்ட பழந்தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சிய
By விஸ்வநாதன்,,கோயம்புத்தூர் .
3/9/2011 3:04:00 PM
நெத்தி அடி என்று சொல்வார்கள் அல்லவா, அதை சோனியா நன்றாகவே கொடுத்தார். தி மு க இந்த நாடகம் ஆடியது வேறொரு காரணத்திற்காக என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. விலகுவோம் என்று தி மு க உயர் மட்ட குழு எடுத்த முடிவை சோனியா கொடுத்த விளாசலில் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஒத்து கொண்டு ஓடி வந்தனர் தி மு க. எங்கே போனது உயர்மட்ட குழு. பெருத்த அவமானம். எப்படி இருந்த கலைஞரின் நிலை இப்படி மாறிவிட்டதே. எல்லாவற்றிக்கும் காரணம் ஸ்பெக்ட்ரம் முதலாய் கரம் கறை பட்டதால்.
By மனோகரன்
3/9/2011 2:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக