வெள்ளி, 11 மார்ச், 2011

தொண்டர்களை மதிக்காத தலைமை

காங்கிரசுக்காரனைப் போல் கட்டுரை எழுதியுள்ளார். காங்.தலைவர்கள் பலர் கல்வி நிலையம் நடத்திக் கொள்ளை அடிக்கவிலலையா?  ஒப்பந்தம் எடுத்து ஊழல் செய்யவில்லையா? அமைச்சர்பதவிகள் வழங்கப்படவில்லையே தவிர ஊ ழலுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவை செம்மையாக முடிக்கப்பட்டுப் பணப் பெட்டிகள் நிரம்பி வருகின்றன. அடித்தளமே  இல்லாத காங்.ஐப் பிறர் சுமந்து வருகையில் காங். பிற கட்சியைச் சுமந்து வருவதாகவும் கூறுகிறார்.
காங். தலைவர்கள் மத்திய அரசால் அடைந்த நன்மைகளைவிடத் தமிழக அரசால் அடைந்த நன்மைகள்தான் மிகுதி.  இத்தகைய  காங். ஐச் சுமக்கும்படிக் கலைஞர் கட்டளை  இட்டுவிட்டாரே எனத் தி.மு.க. வினருக்கு  இருக்கும் வருத்தம்தான் சரியானது. நடுநிலையான கட்டுரை  இல்லாவிட்டாலும் அது போல் பாவனை செய்யக்கூடிய கட்டுரைகளையாவது போடுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /


தொண்டர்களை மதிக்காத தலைமை


ஓருவழியாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுகவும், காங்கிரஸýம் கூட்டணி அமைத்துவிட்டன. ஆனால், இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உள்ளனரா என்பது கேள்விக்குறியே. சென்றமுறை சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போதே ஆட்சியில் பங்கு கிடைக்கும் என காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் எண்ணினர். ஆனால், காங்கிரஸின் தில்லி தலைமையும், தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் மெüனம் சாதித்தனர். இதனால் திமுகவும் காங்கிரûஸக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.இதுமட்டுமல்லாமல் அரசுப் பணியிடங்கள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவைகளில் இருந்து, ஒப்பந்தப் பணிகள், டாஸ்மாக் மதுக்கூடம் அமைப்பதுவரை அனைத்தும் திமுகவினரே வைத்துக் கொண்டனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸôருக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை எனவும் மாறாக அதிமுகவினர் பலர் திமுக ஆட்சியில் பயனடைந்துள்ளனர் எனவும், அரசு விழாக்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸôர் புலம்பி வந்தனர்.இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. இதற்குக் காரணம் திமுகதான் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்துள்ளனர். இவ்வளவு நெருக்கடியிலும் திமுகவுடன் மீண்டும் கூட்டணி தேவையா? எனக் குரல் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களின் கருத்துகளை காங்கிரஸ் தொண்டர்கள் பெருவாரியாக வரவேற்றனர்.மேலும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதும், ஆட்சியில் பங்கு தரமுடியாது என திமுக கூறியதும் காங்கிரஸ் தொண்டர்களைப் பெரிதும் பாதித்தது.இச்சூழலில் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகும் என திமுக தலைமை அறிவித்ததும் தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களும், திமுக வினரும் கூட பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இவர்களுக்கு இடையே தேர்தல் களத்தில் தலைவர்கள் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்சியை முதுகில் தூக்கிச் சுமப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை. மூன்றாவது அணி அமைப்பது அல்லது தனித்து நிற்பது என்ற முடிவையே அவர்கள் விரும்புகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியை அறவே வெறுக்கின்றனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தில்லி தலைமையும் தங்களது சுயலாபத்துக்காக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.இதன் தாக்கம் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக