செவ்வாய், 8 மார்ச், 2011

D.M.K. - cong. seats agreement : திமுக-காங்கிரசு தொகுதி உடன்பாடு

உடன்பாட்டுப் பேச்சு:  கா. 63; தி 60; கா 62; தி 61; கா 63; தி 60;  . . . . .  பின்னார்  இருவர் உரை: 1) ஏணி-பாம்பு ஆட்டம் மாதிரி என்ன நடக்குது? 2) தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சு. 1) மாறி மாறி எண்களைச்சொன்னால் அதுதான் பேச்சா? 2) இல்லை.  பேரம் முடிந்ததும் தொலை பேசி வரும். மணி அடிக்கும் பொழுது  யார்முறை வருகிறதோ அவர் சொன்னதுதான் எண்ணிக்கை. 1) எங்கிருந்து வரும்? 2)  உண்மையான உடன்பாடு நடக்கும் இடத்தில்  இருந்து வரும். இதோ மணி யடித்து விட்டது. கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை எனப் பெருமை கொள்ளும் வகையில் 63 தொகுதிகளைத் தாரை வார்த்தாகி விட்டது.  நாடகம்  இனிதே முடிந்தது. பங்கேற்ற  அனைவருக்கும் பார்வையாளர்களுக்கும் பாராட்டுகள். நாடகததைக் கண்டவர்களில் ஒருவனான 
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /


திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு


புதுதில்லி, மார்ச் 8- திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்னை இன்று மாலை முடிவுக்கு வந்தது.காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.இத்தகவலை மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத் இன்று தில்லியில் தெரிவித்தார்.முன்னதாக, சோனியாவின் வீட்டில் திமுக சார்பில் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் அகமது பட்டேல், குலாம் நபி ஆஸாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் தொகுதி உடன்பாடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.
கருத்துகள்

eppadi koottani amaiththal enna intha kollaikkara koottaniyai makkal oda oda virattap povathu nijam.
By srirangam murali
3/8/2011 7:43:00 PM
நம் நாட்டை அந்நியனக்கு விற்ற இந்த தேசத் துரோகியை மக்கள் அடையலாம் கொண்டுக்கொள்வார்களா?
By இராஜா
3/8/2011 7:43:00 PM
இந்த நாடகத்தை நம்பி அந்தம்மா சி.பி.ஐ., சி.பி.ஐ.எம் , ம.தி.மு.க. வை இழுத்து அடித்தது மானங்கெட்ட பொழப்பு இல்லையா?
By elango
3/8/2011 7:40:00 PM
டே ஜால்ரா வாய மூடு
By ராஜேந்திரன்
3/8/2011 7:39:00 PM
மேட்டர் சப்புனு போச்யா ... போங்கய போங்க
By Maideen
3/8/2011 7:39:00 PM
நாடகம் ஒரு வழியாக முடிந்தது . இந்த நாடகம் எதனால் முடிவுக்கு வந்ததோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம். இது எப்படி போனாலும் 2g விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் நல்ல ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும் ,தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் இது தான் மக்கள் நினைப்பது .
By kalavenkat
3/8/2011 7:07:00 PM
மறுபடியும் சரணாகதி ஆகிவிட்டார் கருணாநிதி.நேரு குடும்பத்தின் காலடியில் எப்போதும் இருப்பவர் அல்லவா?இனி ராகுல் கூட இவரை புத்தி கோயிலில் சென்று பார்ப்பார்.போங்கய்யா நீங்களும் உங்கள் வீராப்பும்.
By கே.சுகவனம்
3/8/2011 7:04:00 PM
கூட்டு கொள்ளை கூட்டணி உருவாகி விட்டது.இனி ஒவ்வொரு தமிழ் உறவின் கடமையும், இந்த கூட்டணியை தோற்கடிக்க சபதம் கொண்டு.தமிழ் இன துரோக ஆட்சி, மற்றும் இரு குடும்ப ஆட்சியை வர விடாமல் தோற்கடிக்க சபதம் ஏற்க வேண்டும்.
By bparani
3/8/2011 7:03:00 PM
பைத்திய காரர்கள் - நாய்கள் காசுக்காக எதையும் செய்வார்கள்
By divya
3/8/2011 7:02:00 PM
நண்பர்களே! நான்தான் அப்பவே சொன்னேனே.. இந்த பெருசு சும்மா "பிலிம்" காட்டுதுன்னு. பெருசு ரொம்பவும் பிகு பண்ணினா, அப்புறம் அவனுங்க CBI-யை வைத்து இவனுங்க அத்தனை பேரையும் பிராண்டிப் புடுவானுங்க. எல்லாத்தையும் நம்ப ஏமாந்த சோனகிரிங்க நாமதான் இருக்கோமே!!!
By Abdul Rahman - Dubai
3/8/2011 7:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக