சொந்த நிதி ஆதாரம் இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய ஓராண்டிற்குள் பங்குத் தொகை உரூ ௨௧௪ (214 )கோடியை வட்டித் தொகை உரூ ௩௧ (31)உடன் சேர்த்துத் திருப்பித் தரும் அளவிற்கு உயர்த்திய (!)செயல்திறனுக்குப் பாராட்டுகள்.ஆதாயத் தொகையில் (௪௨௦௦ கோடி - ௧௫௩௭ கோடி = ௨௬௬௩ கோடி) ௧௨.௩௦ (12 .30) பங்கு பெற்றதைக் கடனாகக் காட்டியிருந்தால் அறிவுத்திறனுக்குப் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 11 Feb 2011 01:55:53 AM IST
சென்னை, பிப்.10: 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டிற்கும், கலைஞர் டி.வி. கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:2007-08 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கும், 2009-ல் கலைஞர் டி.வி. மற்றும் சினியுக் நிறுவனம் இடையே நடைபெற்ற கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.கலைஞர் டி.வி.க்கு, சினியுக் நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக 2009-ல் முன் பணம் கொடுத்திருந்தது. ஆனால் 2 நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்போது பெறப்பட்ட முன்பணத்தை கடனாகக் கருதி மொத்தப் பணமும் கலைஞர் டி.வி. நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டது.அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உள்பட்டு, உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக