தன் நாட்டுக் குடிமகன் கொலைக் குற்றம் செய்தாலும் அவன் பக்கம் நிற்கிறது அமெரிக்க அரசாங்கம். அப்படியானால் ௧௦௦ ஆயிரக்கணக்கான படுகொலைகள் புரிந்த துடன் தமிழ் மீனவர்கள் படுகொலைகள் புரிகின்ற சிங்களர்களுக்குச் சார்பாக இந்திய அரசும் நிற்கிறது. அப்படியானால் இந்திய அரசு என்பது சிங்களவர்களுக்கானது என்பது நன்கு புரிகின்றது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இஸ்லாமாபாத், பிப்.8- பாகிஸ்தானில் இருவரை சுட்டுக் கொன்ற தூதரக அதிகாரியை விடுதலை செய்யும் வரை அந்நாட்டுடனான அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்த முடிவால், பாக். அதிபர் ஜர்தாரியின் அமெரிக்கப் பயணம், அமெரிக்கா-பாக். இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, பாக்.-ஆப்கன்-அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகியவை பாதிக்கப்படும்.ஜனவரி 27-ம் தேதி லாகூரில் இரு பாகிஸ்தானியர்களை அமெரிக்கத் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து, அவரை பாக். போலீஸார் கைது செய்தனர்.ஆனால், அவர் தூதரக பாஸ்போர்ட் உடையவர் என்பதால் ரேமண்டை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளவில்லை. அவரை எங்கள் நாட்டின் சட்டப்படி தான் விசாரிப்போம் என்று பதில் தெரிவித்தது.அமெரிக்க அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனிடையே, ரேமண்ட் டேவிஸ் மற்றும் 3 அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில், தூதரக அதிகாரி விடுதலை செய்யப்படும் வரை பாகிஸ்தானுடனான நிகழ்வுகளை ரத்து செய்வதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக