இப்படிப்பட்ட பணியிடங்களில் உள்ளோர் பெரும்பாலும் விதிமுறைகளுக்கு இணங்க நியமிக்கப்படாமல், குறுக்கு வழிகளில் நியமிக்கப்படுபவர்களாகவும் பின்னர் இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம் முறையான பணி அமர்த்தம் பெறுபவர்களாகவும் இவற்றால் முறையான வேலை வாய்ப்பு பதிவு பெற்றவர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கவும் இட ஒதுக்கீட்டு வாய்ப்பை இழக்கவும் வழி வகுப்பதாகவே உள்ளது. மேலோட்டமாக வேலை வாய்ப்பு உறுதி என்பது பார்க்கப்படுவதால் தொடர்ச்சியான பணி அமர்த்த ஊழல் தொடருகிறது. ஆராய்ந்து பார்க்காமல் எதையும் ஆதரிக்காதீர்
சென்னை, பிப்.8- அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அதன் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2006 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இன்னமும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி நடத்த முற்பட்டபோது, அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை அவர்களை கைது செய்தது. இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், திமுக அளித்த வாக்குறுதியின்படி, அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், இதுகுறித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக