சென்னை : ''தி.மு.க., தலைமை பதவிக் கான தேர்தல் நடந்தால் அதில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
'கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.,வில் நான் யாரையுமே தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன். கருணாநிதியின் இடத்தை நிரப்பும் தகுதியும், திறமையும் யாருக்கும் இருப்பதாக நினைக்கவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி ஒரு பேட்டியில் குறிப் பிட்டிருந்தார். கடந்த 31ம் தேதி இரவு 10.20 மணிக்கு மத்திய அமைச்சர் அழகிரி, ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். நேற்று பகல் 12.30 மணிக்கு மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
* கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.,வில் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என கூறியுள் ளீர்களே?
ஆம். நான் தான் கூறினேன். எனக்கு தோன்றியதை கூறினேன். அப்படி கூறக் கூடாதா?
* ஜனநாயக முறையில் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது குறித்து உங்கள் கருத்து?
அவர் கூறியது சரிதான்.
* தி.மு.க., தலைமை பதவிக்கான தேர்தல் நடந்தால், நீங்கள் போட்டியிடுவீர்களா?
கண்டிப்பாக போட்டியிடுவேன்.
* ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வீர்களா?
இந்த கேள்விக்கு இப்போது அவசியம் இல்லை. கருணாநிதி தற்போது தலைவராக உள்ள நிலையில் ஏன் இதை பற்றி இப்போது பேச வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அழகிரி பேட்டியளித்தார்.
மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி கூறுகையில், ''அரசு சார்பில் துறை ரீதியான பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தேன். பயணம், பயன்தரும் வகையில் திருப்தியாக அமைந்திருந்தது,'' என்றார். கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
வாசகர் கருத்து | |
பழத்தை பிரிச்சி கொடு தட்சிணாமூர்த்தி |
by tv tvs,chennai,India 02-04-2010 06:56:52 IST |
If he comes to the position, south TN(atleast madurai) will change as Chennai. Am I dreaming???? |
by k Prem,Chennai,India 02-04-2010 06:53:50 IST |
சூப்பர் சூபெரோ சூப்பர்.. ஆரம்பம் மங்களகரமாய் திமுக 'அழிவதை' ஆரம்பிக்க வந்துவிட்டார்..மிக்க மட்டற்ற மகிழ்ச்சி..வினை விதைத்தவன் எதை அறுப்பான்? மஞ்ச துண்டார் செய்த வினை எத்துனை? சமீப காலமாய் இந்த கொள்ளை குடும்பம் போல் ஊர் வாயில் சாபமாய் விழுந்தோர் யாருமே இல்லை.. ஊர் கொள்ளை குல நாசம் என்பதை இனி பார்க்கத்தான் போகிறது இன்றைய தமிழகம் மட்டுமலாது இந்தியாவே..பெருசு இருக்கும்போதே ஸ்டாலின் மாறன் சகோதரர்கள் ஒன்றுபட்டு அஞ்சா நஞ்சுவை எதிர்க்க அம்மாவிடம் 'சரண்' அடையும் காட்சியும்..ஒரு சில வீரபாண்டி ஆறுமுகம் போல் மந்திரிகளின் சப்போர்ட் அஞ்சா நெஞ்சுக்கும்.. கிடைக்க பாவம் கனிமொழிக்கு ராசா அல்லது தொல்ஸ் திருமா சப்போர்டோ கிடைக்க..குடும்ப டிவிக்கள் ஒன்றை ஒன்று அடித்து நாறப்போகுது..பாருங்கள் கூத்தை..தினகரனில் எரிக்கப்பட்ட 'கேஸ்' தூசி தட்டப்படும்.. ராசாவின் ஸ்பெக்ட்ரம் இரண்டு டிவியில் எதோ ஒன்றில் மீண்டும் விலாவாரியாய் அலசப்படும்..ராயல் கேபிள் மீண்டும் 'உதயமாகும்'..சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்கள் ரெலீஸ் ஆகும் முன்னரே வட்ட தட்டுகளில் வெளிவரும்..இவ்ளோ கூத்தக்கள் இருக்கும் பொது..இங்கே ஒரு பிரகஸ்பதி அதிமுக அழியுமாம், அஞ்சா நெஞ்சு பக்கம் போகுமாம்..அலெய் 'நிதானத்துலதான்' இருக்கீகளா? போங்கடா போய் நாத்தம் புடிச்ச கூத்த பெங்களூரு அல்லது டெல்லின்னு போய் 'அக்ரிமென்ட்' போட பார்ப்பீங்களா..வந்துட்டாங்க இங்கே 'கருத்து'சொல்ல..வெட்கமா இல்ல இன்னும் இந்த கொள்ளை கூட்ட குடுமபத்துக்கு 'வக்காலத்து'வாங்க? |
by P சேகர்,SINGAPORE,Singapore 02-04-2010 06:47:06 IST |
அண்ணன் அழகிரி அவர்களே, உங்களுக்கு எல்லா திறமையும் உங்கள் அண்ணன் ஸ்டாலினை விட அதிகமாகவே இருக்கிறது, அதனால் ஏன் இன்னும் இவ்வளவு பொறுமை? புறபடுங்கள் அண்ணா அறிவாலயத்திற்கு, சட்டையை பிடித்து கேளுங்கள், அவர்கள் தகராறு செய்தால் உங்கள் ஆதரவாளர்களை வைத்து கோதாவில் இறங்குங்கள், உங்கள் தம்பியும், அப்பாவும் உங்களை ஏமாற்றுகிறார்கள். விடாதீர்கள் நீங்கள் போட போகும் சண்டையில் திமுக என்கின்ற கட்சியே இருக்ககூடாது, உங்களுக்கு இல்லாத பதவி யாருக்கும் கொடுக்ககூடாது. நீங்களும் தானே கலைஞருக்கு பிறந்தீர்கள், அப்போ எப்படி அவர் ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கலாம். உங்கள் உரிமையை விட்டுகொடுகாதீர்கள். தொடங்குங்கள் யுத்தத்தை, எத்தனை தலைகள் உருண்டாலும் பரவாயில்லை. முடிந்தால் அம்மாவுடன் ரகசிய கூட்டணி அமைத்து திமுக விற்கு எதிராக மிகபெரிய புரட்சியை ஏற்படுத்துங்கள். உங்கள் சண்டையை தமிழகமே எதிர்பார்த்துகொண்டிருக்கிறது. வைகை புயல் அஞ்சா நெஞ்சன் என்றால் சும்மாவா, நீங்கள் எவ்வளவு பெரிய வீரன் என்று உங்கள் தம்பிக்கும், அப்பாவிற்கும் புரிய வையுங்கள். வாழ்த்துக்கள். |
by d திவ்யாலக்ஷ்மி ,madurai,India 02-04-2010 06:44:40 IST |
தலைவர் இருக்கும் பொழுது இந்தப் பேச்சு தேவையற்றது. ஆனால், நம்பியிருக்கும் அணிக்காக இப்படிப் பேச நேரிடலாம். எவ்வாறிருப்பினும் கலைஞரின் குடும்பத்தில் மோதல் போல் வரும்; தொண்டர்கள் பிளவு படுவார்கள்; பின்னர் வெற்றிக்குப் பின் குடும்பத்தினர் இணைவார்கள்;எனவே இது குறித்து இப்போதைக்கு ஒன்றும் சொல்ல வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் |
by I. Thiruvalluvan,chennai,India 02-04-2010 05:15:44 IST |
திரு.மு.க.அழகிரி தலைமை பொறுப்பு்க்கு தகுதி உடையவர். அண்ணன் அவர்கள் தலைமையில் தி.மு.க மற்றும் தமிழகம் சிறப்படையும் என்பதில் ஐயம் இல்லை. |
by k ராஜராஜன்,singapore,Singapore 02-04-2010 04:50:43 IST |
ஜெயலலிதா மாதிரி இவருக்கும் ஆட்சி,அதிகாரம்,பதவி மேல ஆசை வந்துருச்சு! தப்பில்லை ஒரு பெண்ணா இருந்துட்டு அவங்க பண்ணாத கூத்தா? இவரும் தனது ஆசையை தெரிவிக்கிறார்! நல்லது!கண்டிப்பாக ஸ்டாலின்தான் தெர்தேடுகப்படுவார்! சிலர் நினைப்பதுபோல் இதற்காக அடிதடியெல்லாம் நடக்காது! கட்சி ஒன்றும் பிளவு படாது! |
by S செந்தில் ,India,India 02-04-2010 04:41:56 IST |
கருணாநிதியின் இடத்தை நிரப்பும் தகுதியும், திறமையும் யாருக்கும் இருப்பதாக நினைக்கவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி ஒரு பேட்டியில் குறிப் பிட்டிருந்தார். இவருக்கு தான் என்ன தகுதி இருக்கு. என்ன கொடும சார் இது |
by s சோமன்,Newplymouth,NewZealand 02-04-2010 03:37:45 IST |
அஞ்ச நெஞ்சன் அழகிரி ! அப்பிடியே தலைவர் தேர்தலில் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் ஜெய்பீங்கனு சொல்லுங்க தல ! ஒரு ஓட்டுக்கு எவ்ளோ குடுபீங்க கட்சி காரங்களுக்கு? |
by JVK துலாபாரம்,COIMBATORE,India 02-04-2010 03:34:35 IST |
ஐயா புண்ணியவானே தி மு க வை அழிக்க திட்டம் வைத்திருக்கிறீகள் போல் தெரிகிறது. அம்மாவுடன் ரகசிய கூட்டு வைத்து தி மு க வை உடைக்க நினைக்கிறீர்கள். கலைஞரின் தி மு க ஆட்சி எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை நிறைவேற்றி நல்ல பெயர் எடுத்து வருகிறது, அதை கெடுக்க நினைக்க வேண்டாம். தங்கள் சகோதரர் இடம் விட்டு கொடுத்து செல்லுங்கள், தங்களுக்கும், தி மு க விற்கும், இந்த நாட்டுக்கும் நல்லது. உங்கள் வாரிசு சண்டையில் தி மு க வை பலவினமாக்க் வேண்டாம், அது மக்கள் சுவாச காற்று பட்டாலே தீட்டு என்று கொடநாட்டில் இருக்கும் அம்மையாருக்கு சாதகமாகிவிடும். கலைஞரை போல திறமை படைத்தவர்கள் இந்திய அரசியலில் ஒரு சிலரே. பணத்தை கொடுத்து, மிரட்டி எல்லா நேரங்களிலும் மக்களிடம் ஒட்டு வாங்க முடியாது. சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, தளபதி ஆற்றிய பணிதான், தி மு க கூட்டணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை மறக்க வேண்டாம். இப்போதே விழித்து கொள்ளுங்கள். |
by K Tamilan,DOHA,Qatar 02-04-2010 03:34:04 IST |
தி.மு.க வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாடே இருளில் முழிபிதுக்கி நிற்கிறது.விலைவாசியோ வின்னைமுட்டி விட்டது.அதை பற்றி சிந்திக்க இவர்களுக்கு நேரம் இல்லை. யார் முதல்வர்? யார் தலைவர்?என்ற போட்டியில் தமிழகத்தை பகடை காயாக வைத்து விளையாடுகிறார்கள். தமிழக வாக்காளப் பெருமக்களே மஞ்சத்துண்டுகாரர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள். |
by ajith த.செல்வன்,vallioor,Tirunelveli.,India 02-04-2010 03:29:04 IST |
அழகிரி ஜனநாயாக முறையில் போட்டியில் கலந்து வெற்றி பெறுவார்.இன்னொருவர் கொல்லைபுற வாசல் வழியாக வரப் பார்கிறார். |
by R Karuppiah சத்தியசீலன் ,Kinshasa,Congo(Zaire) 02-04-2010 03:01:09 IST |
சிவபெருமான்: தருமி கேள்வி பதில் உரையாடல் சிவபெருமான்: தருமி கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா? தருமி: எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். சிவபெருமான்: அப்படியென்றால் கேளுங்கள். தருமி: வாய் சவடாலுக்கு? சிவபெருமான்: கருணாநிதி. தருமி: மின்வெட்டுக்கு? சிவபெருமான்: ஆற்காடு வீராசாமி. தருமி: அராஜகத்திற்கு? சிவபெருமான்: அஞ்சா நெஞ்சன் அழகிரி. தருமி: பொய் வாக்குறுதிகளுக்கு? சிவபெருமான்: மு க ஸ்டாலின் தருமி: மெகா ஊழலுக்கு? சிவபெருமான்: ஆ ராசா. தருமி: கையாலாகதவன்? சிவபெருமான்: T.R. பாலு தருமி: பொருளாதார வீழ்ச்சிக்கு? சிவபெருமான்: அன்பழகன். தருமி: பெண்களின் துகிலை உரிப்பது?? சிவபெருமான்: துரைமுருகன். தருமி: கல்வி சீரழிவுக்கு? சிவபெருமான்: பொன்முடி. தருமி: நடுநிலை செய்திக்கு? சிவபெருமான்: தினமலர். தருமி: பேராசைக்கு? சிவபெருமான்: மு கருணாநிதி. தருமி: நிர்வாக திறமைக்கு? சிவபெருமான்: ஜெ ஜெயலலிதா. தருமி: எஜமான துரோகத்திற்கு? சிவபெருமான்: எஸ் வீ சேகர், அணித ராதாகிருஷ்ணன். தருமி: கூட்டணி தர்மத்திற்கு? சிவபெருமான்: வைகோ. தருமி: எஜமான விசுவாசத்திற்கு? சிவபெருமான்: ஒ பன்னீர்செல்வம். தருமி: நியாயமான கருத்துக்களுக்கு? சிவபெருமான்: ரிஸ்வான், சவுதி அரேபியா. தருமி: அடவாடி பேச்சுக்கு? சிவபெருமான்: கருப்பன் சேலம், தருமி: அறியாமைக்கு? சிவபெருமான்: செந்தில்.S தருமி: உளறலுக்கு? சிவபெருமான்: ஜோபெட் சிங்கப்பூர். தருமி: நம்பிக்கைக்கு? சிவபெருமான்: சேகர் சிங்கப்பூர். தருமி: அய்யா நீங்கள் மனிதர் அல்ல கடவுள். |
by g சந்தோஷ்,vellore,India 02-04-2010 02:49:32 IST |
அக்கினி நட்சத்திரம் படம் உங்களுக்காகத்தானே எடுத்தது. என்ன அந்த படத்து கிளைமாக்ஸ் லே அண்ணனும் தம்பியும் ஒன்னு சேருவாங்க. ஆனா உங்க உண்மையான கிளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். அதோட படமும் முடிஞ்சு போய்டும்............. |
by Mr Maria Antony,Norwich,UnitedKingdom 02-04-2010 02:37:50 IST |
ஆஹா அண்ணன் ஆரம்பிச்சிட்டார் . |
by vs mohan,Goa,India 02-04-2010 02:36:21 IST |
தந்தையின் குள்ளனரிதனத்தில் அழகிரிக்கு தான் அதிகம் உள்ளது. அதனால் அவர் வருவதுதான், நமது அரசியலுக்கு நல்லது. ஸ்டாலின் பழைய ஸ்டாலினாக மாறினால் ஒழிய அவருக்கு ஆதரவு கட்சிக்குள் இருக்காது. எனவே ஸ்டாலின் நல்லவன் என்ற தமிழ்நாட்டு மக்களக்கு பிடிக்காத, பேரை நீக்கிவிட்டு, ரவுடி என்ற நல்ல பெயர் எடுத்தால், அரசியலில் நிச்சயம் தந்தையை போல் ஜெயிக்கலாம். |
by ravi,toronto,Canada 02-04-2010 02:04:24 IST |
இதன் பின்னால் ஒரு பெரிய ராஜதந்திரம், சதி இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் எதோ தி.மு.க. விற்கு சரிவு, விரிசல் போல தோன்றும். ஆனால் சற்று உன்னிப்பாக ஆராய்ந்தால் இதன் தந்திரம் புரியும். கருணாநிதிக்கு பின்னால் தமிழ்நாட்டு அரசியலை எந்த திசை நோக்கி நகர்த்த வேண்டும் என்று இப்பொழுதே காய்கள் நகர்த்த படுகின்றன. அ.தி.மு.க. அபிமானிகள் மன்னிக்க வேண்டும், ஆனால் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் அந்த கட்சி மறுபடியும் ஆட்சியை பிடிக்கும் மாதிரியாக இல்லை. கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளதா தி.மு.க வினர் அடைக்கலம் புக அல்லது தி.மு.க. பிளவு படுமானால், பிளவு படும் தி.மு.க விற்கு தலைமை ஏற்க அழகிரி தயார் செய்ய படுகிறார். தி.மு.க. பிளவு மட்டும் அல்ல, அ.தி.மு.க பிளவு படுமானால்அல்லது அழகிரி சொல்வதை அ.தி.மு.க போல் இல்லாமல் போகுமானால், தி.மு.க.விற்கு மாற்றாக அழகிரி தலைமையில் ஒரு கட்சி தொடங்கப்படும். அ.தி.மு.க அல்லது தி.மு.க. வின் சரிவு, வேறு எந்த கட்சிக்கும் சாதகமாக போக கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக இருப்பார். கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலின் முதல்வர், அழகிரி எதிர் கட்சி தலைவர் அல்லது அழகிரி முதல்வர், ஸ்டாலின் எதிர் கட்சி தலைவர், என்பது தான் கருணாநிதியின் விருப்பமாக இருக்கும். தி.மு.க. விற்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தோன்றா விட்டால், ஸ்டாலின் மற்றும் அழகிரி தனித்தனியே செயல் பட்டு இரு பெரும் சக்தியாக இருப்பார்கள். |
by R RSV,CA,India 02-04-2010 01:36:02 IST |
அஞ்சா நெஞ்சன், என்றும் கெஞ்சா நெஞ்சன், 'அ' ன தான் தி.மு.க வின் அடுத்த தலைவர். இதை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது. மண்ணின் மைந்தன், மதுரை வீரன், இடை தேர்தலின் இலக்கியம், மத்திய மந்திரி ராஜ தந்திரி. அடுத்த தலைவரும் இவரே, முதல் மந்திரியும் இவரே. தொண்டர் படை உன் பின்னால், புறப்பட்டு தலைவா தலைமை செயலகத்திற்கு. நீர் போட்டியிட தேவையுமில்லை, உன்னை வென்றிட எவருமே இல்லை. |
by R சிவா,hyderabad,India 02-04-2010 01:02:04 IST |
கோபாலபுர குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தினை இரண்டாக பிரித்து தெற்கை பெரியவருக்கும் வடக்கை சின்னவருக்கும் மத்திய அமைச்சரவையின் பங்கினை சிஐடி நகர் துணைவி குடும்பத்தார் மற்றும் பேரனுக்கும் கொடுக்கலாம். இந்த முயற்சிக்கு நிச்சயம் ராமதாஸ், கிருஷ்ணசாமி, திருமாவளவன், சேதுராமன் போன்ற பொதுநலவாதிகள் ஆதரவு கொடுப்பர். சோனியாவும் தலை ஆட்டாமலா போய்விடுவார். இருக்கவே இருக்கு வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம். வழக்கம் போல உ.பி, ம.பி, பீகார் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டதினை மேற்கோள் காட்டலாம். பெரியவர் இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த பாகப்பிரிவினையினை உடனடியாக உருவாக்க வேண்டும். |
by M Amanullah,Dubai,UnitedArabEmirates 02-04-2010 00:23:38 IST |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக