செவ்வாய், 30 மார்ச், 2010

நளினி விடுதலை இல்லை ஏன்?: அரசாணை முழு விவரம்



சென்னை, ​​ மார்ச் 29:​ நளினியை முன் கூட்டியே விடுதலை செய்யாதது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த அரசாணையின் முழு விவரம்:நளினியை விடுதலை செய்வது தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு வேலூர் சிறையில் ஜனவரி 20-ம் தேதி கூடி பரிசீலித்தது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 18 பேர் கொலையுண்ட சம்பவத்தில்,​​ கொலையாளிகளுடன் நளினியும் இணைந்து சதியில் ஈடுபட்டுள்ளார்.ராஜீவ் கொலை தொடர்பாக அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும்,​​ கொலையாளிகளுடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளார்.​ இதன் மூலம் அவர் கொடூரமான குற்றத்தைப் புரிந்துள்ளார்.சிறையில் அவர் பட்ட மேற்படிப்பும்,​​ பட்டயப் படிப்பும் பெற்றுள்ளார்.​ இதன் மூலம் அவரது மனப்போக்கு ​ மாறியுள்ளதாகக் கருதமுடியாது.​ இதுவரை அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.​ தனது செயல்களுக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை.சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால்,​​ அவரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாக நளினியின் தாயார் உத்தரவாதம் அளித்துள்ளார்.​ ஆனால்,​​ இதுதொடர்பான வழக்கில் நளினியின் தாயாரும்,​​ சகோதரரும் கூட சிறையில் அடைக்கப்பட்டு,​​ பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.நளினியின் தாயார் சென்னையிலுள்ள ராயப்பேட்டையில் வசிக்கிறார்.​ நளினி விடுதலை செய்யப்பட்டால் அவரது தாயாருடன் அந்தப் பகுதியிலேயே வசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.​ அந்தப் பகுதி அதி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி.​ அமெரிக்கத் தூதரகமும் அருகிலேயே உள்ளது.விடுதலைக்குப் பிறகு நளினி இந்தப் பகுதியில் தனது தாயாருடன் வசித்தால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளதால்,​​ தன்னை விடுவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.அவர் இந்திய தேசத்துக்கு எதிரான குற்றத்தை செய்துள்ளார்.​ எனவே,​​ 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதால் தன்னை விடுவிக்குமாறு அவர் கோருவதையும் ஏற்க முடியாது.குற்றச் சூழல்,​​ குற்றத்தின் தன்மை ஆகியவற்றைப் பார்க்கும்போது,​​ முன் கூட்டியே விடுதலை செய்யுமாறு பரிந்துரைக்க இது சரியான வழக்கல்ல என்று ஆய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஏன் விடுதலை இல்லை?​ சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை தமிழக அரசு கவனமாக பரிசீலித்தது.நளினியை முன் கூட்டியே விடுதலை செய்வதாலும்,​​ ராயப்பேட்டை பகுதியில் அவர் வசிப்பதாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்று நளினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.​ அதனடிப்படையிலேயே அவரை விடுதலை செய்ய நன்னடத்தை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.ஆனால்,​​ சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.​ மண்டல நன்னடத்தை அதிகாரி இந்த இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து முன்கூட்டியே விடுதலைக்குப் பரிந்துரைக்க இது சரியான வழக்கு இல்லை என்று கூறியுள்ளார்.அதேபோல்,​​ உளவியல் நிபுணரின் அறிக்கையிலும் நளினியை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான முடிவான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு,​​ நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்ற ஆலோசனைக் குழுவின் பரிந்துரை ஏற்கப்படுகிறது.​ நளினியின் மனுவை நிராகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

முறையற்ற அறமற்ற அரசாணை. ஏனெனினில், ஒருவர் செய்யும் குற்றத்தின் தன்மையை வைத்து வழங்கப்டுவது நீதி மன்றம் அளிக்கும் தண்டனை. முன்கூட்டி விடுதலைக்கான அறிவுரைக் கழகம் குற்றத் தன்மையைப் பார்ப்பது என்பது தேவையற்ற ஒன்று.சிறைவாசி என்ற முறையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டுவருகிறாரா என்பதைச் சிறை அதிகாரிகள் பார்க்கிறார்கள். விடுதலைக்குப் பின் அமைதியான வாழ்க்கைக்கு வழி இருக்கிறதா? திருந்திய வாழ்க்கைக்கு ஏற்ற சூழல் இருக்கிறதா? என்று நன்னடத்தை அதிகாரி ஆய்வு செய்கிறார். இரு தரப்பாரும் முன்கூட்டிய விடுதலைக்குப் பரிந்துரைத்த பின் புதுக் கதையாகக் குற்றத் தன்மையைப் பற்றிக்கூறி நீதியை மறுப்பது முறையல்ல. இராயப்பேட்டை பகுதி ஏற்றதல்ல வெனில் வேறு பகுதியில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கலாம். ஆனால், காங்கிரசைக் குளிர்விக்க விடுதலை மறுப்பு முடிவிற்கு வந்து விட்ட அரசால் நீதியைப் பார்க்க முடியவில்லை.திமுகவின் பெயர் காங்கிரசு முன்னேற்றக் கழகம் என மாறிவிட்ட பிறகு வேறு என்னதான் எதிர்பார்க்க இயலும்?

நீதி தேவதையைக் கல்லறையில அடைக்கும் முடிவைக் கண்டிக்கும் இலக்குவனார் திருவளளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/30/2010 2:47:00 AM

nalini has killed Indian people's GOD Rajeeve ; therefore , she should die according to Indian law system. It is hindu darma!

By Jey
3/30/2010 2:11:00 AM

Sriankan Army rape Tamils in Srilanka. Nnow , Indian tamil police rape Srilankan Tamils who seek prtection from Srilankan Army. Are you Animals or people ? It is call Holy Indian after all Sonia took power in the Government. Shame on you Sonia Gandi. You Children and grand children will suffer very soon, All Tamils curse the Sonia family. SL Tamil woman in Tamil Nadu refugee camp commits suicide due to sexual abuse by 3 policemen A Tamil woman from Sri Lanka held in the Refugee camp for Sri Lankans in Karoor district in Tamil Nadu died Sunday night in Karoor government hospital where she had been admitted two weeks ago when she had set herself ablaze unable to bear being sexually molested by three Tamil Nadu policemen. Ms. Kumar Pathmathevi, 28, had said in her statement to a feminist human rights activist that the policemen took her to a private house and molested her instead of taking her to the police station to be interrogated about her husband Kumar who was wanted in a homicid

By Maran
3/30/2010 2:06:00 AM

They are all secared. Because Naline will tell all the truth about everybody. Thats's why each one has a stupid explanation and locked the poor SOUL in the cell. The god is great. One day all will come to the scene.

By Iddithangi
3/30/2010 1:58:00 AM

They are all secared. Because Naline will tell all the truth about everybody. Thats's why each one has a stupid explanation and locked the poor SOUL in the cell. The god is great. One day all will come to the scene.

By Iddithangi
3/30/2010 1:56:00 AM

Poor lady!. Many criminals, gagster, life convicts who have committed brutal murders and looting etc are being released during the occasion such as Gandhi B'day, Anna B'day etc. There were released even well before the completion of full life term of 14 years. They were not expected to be the social treat after their release. This poor lady is considered a security threat even after punishing 19 years. She is so unfortunate that political equation was not conducive for her release.

By Chola
3/30/2010 12:40:00 AM

Poor lady!. Many criminals, gagster, life convicts who have committed brutal murders and looting etc are being released during the occasion such as Gandhi B'day, Anna B'day etc. There were released even well before the completion of full life term of 14 years. They were not expected to be the social treat after their release. This poor lady is considered a security threat even after punishing 19 years. She is so unfortunate that political equation was not conducive for her release.

By Chola
3/30/2010 12:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக