திங்கள், 29 மார்ச், 2010

யாருக்கு இரண்டாவது இடம்?



சென்னை, ​​ மார்ச் 28:​ பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில்,​​ இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.முந்தைய இடைத்தேர்தல்களைப் புறக்கணித்து வந்த பா.ம.க.,​​ பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் சூழ்நிலை உருவான உடனேயே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது.​ அக் கட்சியின் தலைவர் ஜி.கே.​ மணி இதே தொகுதியில் பா.ம.க.​ சார்பில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தங்களுக்கு அங்கு செல்வாக்கு உள்ளது என்ற நம்பிக்கை பா.ம.க.​ தலைமைக்கு இருக்கிறது.மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.​ 7 தொகுதிகளில் போட்டியிட்டு எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்தது.​ அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்தும் பாமக வெளியேறிவிட்டது.2011-ல் சட்டப் பேரவைக்குப் பொதுத் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்ற கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.​ தொகுதிகளில் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்தால்தான்,​​ கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்பதற்கு வசதியாக இருக்கும் என்று அக் கட்சி கருதுகிறது.​ அந்த வகையில் தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பா.ம.க.​ பென்னாகரத்தில் களம் இறங்கியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஜி.கே.​ மணியின் மகன் தமிழ்க்குமரனை வேட்பாளராக அறிவித்தது முதல்,​​ பா.ம.க.வினர் தொகுதி முழுக்க தீவிரமாக தேர்தல் பணியைத் தொடங்கினர்.​ எல்லா வீடுகளுக்கும் பா.ம.க.வினர் சென்று ஆதரவு திரட்டினர்.திருமங்கலத்தில் திமுக வெற்றி பெற்ற போது "திருமங்கலம் பார்முலா' என்று பேசப்பட்டதை சுட்டிக் காட்டிய பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ்,​​ தாங்கள் "பென்னாகரம் பார்முலா" வைத்திருப்பதாகவும் அதன் மூலம் வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார்.திமுக தரப்பில் பி.என்.பி.​ இன்பசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் ​ அமைச்சர் எ.வ.​ வேலு தலைமையில் பெரிய குழுவினர் தேர்தல் பணிகளைக் கவனித்தனர்.​ எந்தக் காரணத்தைக் கொண்டும் வெற்றியை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் திமுகவினர் தீவிரம் காட்டினர்.ஒரு கட்டத்தில்,​​ "நாங்கள் வெற்றி பெற முடியாமல் போனாலும் அதிமுகதான் வெற்றி பெற வேண்டுமே தவிர பா.ம.க.வுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்ற திட்டத்தில் பணியாற்றுகிறோம்' என்றுகூட மூத்த அமைச்சர் ஒருவர் பொதுக் கூட்டத்திலேயே பேசினார்.கணிசமான வாக்குகளை பா.ம.க.​ பெற்றுவிட்டால் அடுத்த தேர்தலுக்கு கூட்டணி பேரத்தில் அக் கட்சியின் கை ஓங்கிவிடும் என்பது திமுக மட்டுமன்றி,​​ அதிமுகவின் கணிப்பாகவும் உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.எனவே இரண்டாவது இடம் பா.ம.க.வுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அத் தொகுதியில் 2 நாள் பிரசாரம் மேற்கொண்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக விழும் வாக்குகள்,​​ ஜெயலலிதா வருகையால் ஏற்படும் மாற்றம் என சேர்ந்தால் அதிமுக வேட்பாளர் டி.ஆர்.​ அன்பழகன் வெற்றி வாய்ப்பை இழந்தாலும்கூட நிச்சயமாக இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுவார் என்று அங்கு தேர்தல் பணியாற்றிய அதிமுக தலைவர்கள் நம்புகிறார்கள்.பல இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்துவிட்டு நகர்ந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் பேனர்கள்,​​ தோரணங்கள் போன்றவை அகற்றப்பட்டு,​​ நிர்வாகிகள் தங்களது ஊர்களுக்குக் கிளம்பிச் சென்ற சம்பவங்கள் ஏராளம்.ஜெயலலிதாவின் பயணம் முடிவானதில் இருந்தே தொகுதியில் பா.ம.க.வின் பிரசாரத்தில் அதிகம் தொய்வு ஏற்பட்டுவிட்டது.​ அதனால் அதிமுகவுக்கும் -​ பாமகவுக்கும் இடையில் ரகசிய கூட்டு என்றுகூட பேச்சு எழுந்தது.​ ஆனால் இதை ராமதாஸ் மறுத்துவிட்டார்.தொகுதியில் வாக்காளர்களைக் கவர்வதற்கு செலவு செய்வதைப் பொருத்தவரையில் எல்லா முன்னணி வேட்பாளர்களுமே ஓரளவுக்கு செலவு செய்துள்ளனர்.​ ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டினாலும் வாக்காளர்களுக்கு மட்டும் வரிசையாக "வரவுகள்' இருந்து கொண்டேதான் இருந்தன.வெற்றியே இலக்கு என்று பா.ம.க.​ கூறினாலும்,​​ 10,000 முதல் 15,000 வாக்குகள் வரை பெற்றால் தங்கள் எண்ணம் ஈடேறிவிட்டதாக அர்த்தம் என்பது பா.ம.க.வின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.​ எல்லா தொகுதியிலும் திமுக,​​ அதிமுக அணிகளுக்கு சம பலம் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிக்கப் போவது இந்த 10,000 முதல் 15,000 வாக்குகள்தான் என்பதால்,​​ தங்களின் வாக்குகள்தான் முடிவை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று பா.ம.க.​ தலைமை கருதுவதாகத் தெரிகிறது.அந்த வகையில் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்கும் முயற்சியில் பா.ம.க.​ ஈடுபட்டுள்ளது.​ அது நடந்துவிடக் கூடாது என்பதில் திமுக,​​ அதிமுக தலைவர்கள் தீவிரம் காட்டினர் என்பது அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் கருத்து.திமுக,​​ அதிமுக,​​ பாமக ஆகிய மூன்று கட்சிகளுக்கு உள்ளது போலவே தேமுதிக-வுக்கும் இந்த இடைத்தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும்.​ கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பெற்ற வாக்கு வங்கியைத் தேமுதிக தக்கவைத்துக் கொள்ளுமா என்பதில்தான் அந்தக் கட்சியின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.​ தேமுதிக.வின் வாக்குகள் குறைந்தால்,​​ அதுவே அந்தக் கட்சியின் செல்வாக்குச் சரிவுக்கான அடையாளமாகக் கருதப்படும்.திமுக தரப்பில் செய்துள்ள தீவிர பிரசாரம்,​​ செலவு ஆகியவற்றைப் பார்த்தால்,​​ வெற்றி யாருக்கு என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கு இடமிருக்காது.​ ஆளும்கட்சிக்குஅதிர்ச்சியை தரும் வகையில் வேறு யாரும் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகமே.​ இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது?​ இதுவே பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவில் எதிர்பார்க்கப்படும் விஷயமாக இருக்கிறது.திமுக,​​ அதிமுகவைவிட பென்னாகரம் இடைத்தேர்தல் பாமக மற்றும் தேமுதிகவின் எதிர்காலத்தைத்தான் அதிகமாக பாதிக்கும் என்று தோன்றுகிறது.
கருத்துக்கள்

பாமக எத்தனாவது இடத்தில் இருந்தாலும் அதற்குக் கிடைக்கும் வாக்குகள் எதன் எதிர்காலப் பேரததிற்கு உதவும்? ஆனால்,இன்னும் இரு நாள் பொறுக்காமல் மிகுதியான ஊழலில் மக்களைக் கவர்ந்த கட்சிதான் முதலிடம் பெறும் என எவ்வாறு அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள்? அதிகவாக்குப் பதிவு ஒரு வேளை அதிர்ச்சி முடிவையும் தரலாம் அல்லவா? அவ்வாறு தந்தால் ஓரளவேனும் ஊழல்முறையில் வாக்குகள் பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக இருக்கும். ஆளும் கட்சியின் இதழ் போன்று இத்தகைய செய்தியைத் தினமணி வெளியிட்டுத் தன் பற்றைக் காட்டத் தேவையில்லையே! வெல்வது யாராயினும் தோற்பது மக்கள்நாயகமே! என்றாலும் மிகுதியான ஊழலிலேயே தேர்தலைச் சந்திக்கும் கட்சி தோற்றால் அதனைச் சாதிப்பற்றின் வெற்றி எனச் சொலலாமல் மாறுபட்ட சிந்தனை அரும்பியள்ளதாகக் கருதி மகிழலாம் அல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 2:33:00 AM

Why to count the votes? I do not see a need. Hopefully the voters are counting the currency!

By Suresh
3/29/2010 2:10:00 AM

Apology to Dinamani. Sorry. Now I see my comment.

By Suresh
3/29/2010 2:05:00 AM

Where did my comment go? did Dinamani remove that? All I said was "DMK is also a PVT LTD company, just like PMK" I had very high opinion about Dinamani. Guess I am wrong!

By Suresh
3/29/2010 2:03:00 AM

When are they counting the votes of Pennagaram ?

By Vignesh
3/29/2010 1:49:00 AM

"சொக்கனுக்கு(தமிழனுக்கு) சோத்து சட்டி"

By அன்பன்
3/29/2010 1:45:00 AM

I agree 100% PMK is a PVT LTD company/party. If we apply the similar parameters to DMK, that is also a PVT LTD company. That party is looking after the welfare of MK's family (not the people)

By Suresh
3/29/2010 1:44:00 AM

THIS IS THE BEGINNING OF END OF DR.RAMADOSS & HIS PRIVATE LTD COMPANY - PMK.

By BOODHI DHARMA
3/29/2010 1:24:00 AM

பொன்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் நீங்கள் சொன்ன படி அந்த வருசையில்தான் கட்சிகள் ஒட்டுக்கள்வாங்கும் அதிமுக வுக்கு ஆதரவு என்ற கம் யூ னிஸ்டுக்களின் ஓட்டுக்கள் விழுந்தால் நிச்சயம் அ தீ முக இரண்டாம் இடம் வந்துவிடும் .ஒரு கட்டத்தில் தி மு க வின் வெற்றி உறுதி செய்யப்படாத நிலையில் தான் முதல்வர் அங்கு வந்தார் என்று கூருகின்றர்கள் .எனினும் டி எம் கே வென்றுவிடும் .ஆனால் அ தி மு க நிச்சயம் இரண்டாம் இடம் வந்து விடும் ராமாதாஸ் கட்சி பி எம் கே மூன்றாம் இடம்வரும் ஒட்டு வித்தியாசத்தில் அ தி மு க வை நெருக்கி பிடித்து விடும் பிரச்சாரம் அப்படி இந்த தொகுதியில் பி எம் கே வுக்கு கவுரவுமான ஓட்டுக்கள் கிடைத்துவிடும் ஆனால் .தேமு தேக வோ எப்படியாவது ராமதாசைவிட ஒரு ஒட்டு முந்தினால் போதும் என்று நினைக்கிறது .ஆனால் நிலைமைமிஸ்டர் விஜயகாந்த் தே மு தே கா இப்போதைக்கு பி எம் கே வை முந்த முடியாது என்பது உண்மை .ஆக சூரியன் உதி த்து ,இரட்டை இலை விறித்து,மாங்கனி காய்த்து முரசொலிக்கசெயும்ஒட்டு எண்ணிக்கை .

By தேசநேசன்
3/29/2010 12:39:00 AM

ஒன்றுபட்டு நிற்கவேண்டிய தமிழினம் ஒருவரை ஒருவர் வசைபாடி சேறுபூசி உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டி தம்மைதாமே இழிவுபடுத்தி வருகிறது. போதாக்குறைக்கு கைதாகி சிறையில் இருப்பவனையும், களத்தில் போராடி மடிந்தவனையும் வசைபாடி காலத்தைக்களிக்கிறது.

By Mahintha
3/29/2010 12:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக