வியாழன், 1 ஏப்ரல், 2010

ஒரு நதியை தேடும் முயற்சியில் பிரெஞ்சு எழுத்தாளர்



சென்னை, மார்ச் 30: வேதங்களில் கூறப்படும் சரஸ்வதி நதியைத் தேடும் முயற்சியில் பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் டானினோ ஈடுபட்டுள்ளார்.
÷சரஸ்வதி நதி குறித்து பல ஆண்டுகள் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் அவர் எழுதிய "மறைந்த நதியின் பாதையில் ஒரு தேடல்' என்ற நூல் சென்னையில் மார்ச் 26}ம் தேதி வெளியிடப்பட்டது.
வேதங்கள் போற்றி துதிக்கும் சரஸ்வதி நதி ஒரு புராதன கற்பனை என்று சிலர் வாதிட்டு வந்தாலும், இந்த நதியைப் பற்றிய அறிய ஆய்வாளர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள்.÷200 ஆண்டுகளாக இதற்கான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
÷இந்நிலையில், இந்திய குடியுரிமை பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் டானினோ பல ஆண்டுகளாக சரஸ்வதி நதி பற்றிய வரலாற்று ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட அந்நிய நாட்டு நிலவரையியலாளர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் ஆவணங்கள், இன்றைய அதிநவீன செயற்கைக் கோள் புகைப்படத் தொழில்நுட்பம், நில}வேதியியல், ஐúஸôடோப் காலக் கணக்கிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்நதியின் மர்மத்தை அறிய முயன்றுள்ளார் மிஷேல் டானினோ.
இம்முயற்சிகளின் வரலாற்று தொகுப்பு தான் "மறைந்த நதியின் பாதையில் ஒரு தேடல்' என்ற ஆங்கில நூல். ஒரு மனிதனின் தேடல் முயற்சிக்கு எடுத்துக்காட்டாக இந்நூல் உள்ளது.
வேதங்கள், புராணங்கள் மற்றும் பழைய இந்திய இலக்கியங்களில் இந்த நதி குறித்து கூறப்பட்டுள்ள தகவல்களை, இந்தியாவின் வடமேற்கில் வறண்ட நதிப்படுகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் முடிவுகளோடு ஒப்பிடுகிறார் டானினோ.
உதாரணமாக, வசிஷ்டர் குறித்த புராண செய்திகளில் சரஸ்வதி நதி பல நூறு கிளைகளாக பாய்ந்தது பற்றி கூறப்பட்டுள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகளை நவீன ஆராய்ச்சி முடிவுகளோடு ஒப்பிட்டு அவர் எழுதியுள்ளார்.
ஹரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின் வீச்சு எத்தனை பெரியது என்பதை இந்நூல் மூலம் டானினோ நிறுவுகிறார். சரஸ்வதி நதிக்கரையில் தான் சிந்து சமவெளி நாகரிகம் நிலை கொண்டிருந்தது என்பதற்காக பல ஆதாரங்களை அவர் எடுத்து வைக்கிறார்.
இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி குறித்த படங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து நம்மிடம் பேசிய மிஷேஸ் டானினோ, ""கடந்த 16 ஆண்டுகளாக பண்டைய இந்திய கலாசாரம், சங்ககால தமிழ் கலாசாரம் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். முற்றிலும் அகழ்வாராய்ச்சி ஆவணங்கள் அடிப்படையில் சரஸ்வதி நதியைக் கண்டறியும் முயற்சியே இந்நூல். மாக்ஸ் முல்லர் உள்ளிட்ட பல அறிஞர்கள் சரஸ்வதி நதி பற்றி எழுதியுள்ளனர். அதன் தொடர்ச்சியே எனது முயற்சி'' என்றார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிஷேல் டானினோ இந்திய குடியுரிமை பெற்று கோவையில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நடக்காத படையெடுப்பு' என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நூல் இந்திய அகழ்வாராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இதழால் பாராட்டப்பெற்றது.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சிலுக்காக (என்.சி.ஆர்.இ.டி.) கல்வி சீர்திருத்தம் குறித்து 11 ஆயிரம் குழந்தைகளிடம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளார். அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அவர் நீலகிரியில் பாரம்பரிய காடுகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கருத்துக்கள்

சரசுவதி ஆறு என்பது கற்பனையா? ஆனால்,இமாச்சலப்பிரதேசப் பகுதியில் உள்ள் வெண்ணீர் ஊற்றுகள் நிறைந்த இடத்திற்குச் சென்ற பொழுது வழியில் அதனருகில் ஓடிய ஆற்றை என்னிடம் சரசுவதி ஆறு என்றனர். பர்வத நதி என்று சொல்லப்படும் ஆறுதான்ஒரு பகுதியில் சரசுவதி ஆறு என்று சொல்லப்படுகிறது எனக் கருதுகிறேன். பருவதம் என்பது மலை.பார்வதி மலைமகள். மலைமகள்தான் ஒரு காலத்தில் சரசுவதிஆறு என்றும் சொல்லப்படடி்ருக்கலாம். அப்பகுதியைச் சேரந்த மூத்தோரிடம் தெளிவு படுத்தலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 2:18:00 AM

Vaazhga nee emman, ungal muyarichi vettri pera vazhithukal

By MN Madhu
3/31/2010 3:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக