Last Updated :
தருமபுரி, மார்ச் 27: பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு சனிக்கிழமை நடந்த இடைத்தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்களிக்க வந்தவர்களை வெப் -கேமராவில் பதிவு செய்ததன் மூலம் போலி வாக்காளர்கள் இல்லாத நிலை இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. மார்ச் 10-ம் தேதி மனு தாக்கல் நிறைவடைந்தது. பி.என்.பி.இன்பசேகரன் (திமுக), டி.ஆர்.அன்பழகன் (அதிமுக), ஜிகேஎம்.தமிழ்க்குமரன் (பாமக), கே.ஜி.காவேரிவர்மன் (தேமுதிக) உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர். அனைத்து அரசியல் கட்சியினரும் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக தரப்பில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், அதிமுக தரப்பில் பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் கட்சியினர், பாமக சார்பில் நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். வியாழக்கிழமை மாலை பிரசாரம் நிறைவடைந்தது. பென்னாகரம் தொகுதியில் 1,02,892 ஆண் வாக்காளர்கள், 98,116 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,01,008 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க, நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 63 வாக்குச் சாவடிகளும், பென்னாகரம் ஒன்றியத்தில் 187 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டன. மொத்தம் 31 வேட்பாளர்கள் என்பதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.வாக்குச் சாவடிகளில் கணினி உதவியுடன் வெப்-கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவுகள் கண்காணிக்கப்பட்டன. இக் கருவிகள் மூலம் தேர்தல் நடவடிக்கைகளை தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கண்காணித்தார். வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 10 மணிக்கு 14 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, பகல் 11 மணிக்கு 24 சதவீதமாக இருந்தது.கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பிற்பகல் 1 மணிக்கு வாக்குப் பதிவு 46 சதவீதத்தை எட்டியது. பிற்பகல் 2 மணி வரை 55.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வரிசையில் காத்திருந்தோருக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, சில வாக்குச் சாவடிகளில் மாலை 5 மணிக்குப் பிறகும் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.திமுக-பாமக மோதல்பென்னாகரம் தொகுதியில் கே.குள்ளாத்திரம்பட்டி, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு திமுகவினர் பணம் கொடுக்க முயன்றதாகக் கூறி, பாமகவினர் தடுக்க முயன்றனராம். இதனால் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. ஏரியூரில் பணம் கொடுக்க முயன்றதாக திமுகவினர் 5 பேரை போலீஸôர் பிடித்தனர்.பலத்த பாதுகாப்புபென்னாகரம் தொகுதிக்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.பென்னாகரம் தொகுதியில் வசிப்பதற்கான அடையாள அட்டை இல்லாத எவரையும் போலீஸôர் உள்ளே அனுமதிக்கவில்லை.குறிப்பாக எந்த ஒரு காரையும் போலீஸôர் அனுமதிக்கவில்லை. அனுமதிச் சீட்டு பெற்ற பத்திரிகையாளர்களின் 4 சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 4:24:00 AM
By Ram chetty
3/28/2010 3:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*
உண்மைதான் ...மக்களில் அடிப்படை வாழ்க்கை, சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மேபடுத்த வேண்டும்
பதிலளிநீக்குஅப்பொழுதே உண்மையான ஜனநாயகம் வெல்லும்
அது சரி, வோட்டு எண்ணிக்கை முடிந்து இருக்குமே, முடிவென்ன ? தி மு க வா ?
மேலும்
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html