புதன், 31 மார்ச், 2010

முதல்வர் பதவியைக்கூடத்தான் தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை எனக்கூறியிருக்கிறார். தாலின்தான் அடுத்த முதல்வர் என அறிவிக்க வில்லையா? அதுபோல்தான் இதுவும். மத்திய அமைச்சரவையில் யாரைச் சேர்க்கலாம் எனத் தீர்மானம் சி.ஐ.டி.நகர் வீட்டில் குடும்பத்தினரிடையே எடுக்கப்பட வில்லையா? அதுபோல் குடும்பத்தினர் அந்த முடிவை எடுப்பர். எனவே அழகிரிதான் அடுத்த தலைவர் எனக் குடும்பத்தினர்தான் முடிவு எடுப்பர்.குடும்பம்தானே கட்சி. எனினும் வருங்கால முதல்வரும் வருங்காலத் தலைவரும் பொதுநிலையில் மோதலை வைப்பது தந்தையான முத்தமிழறிஞருக்கு வேதனையைத் தரும் என்பதை உணர்ந்து பகைவர்கள் கொண்டாடுவதற்கு இடம் தராமல் அமைதி காக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Top world news stories and headlines detail

சென்னை : தி.மு.க., வின் அடுத்த தலைவரை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அதை கட்சிதான் தீர்மானிக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய அமைச்சர் அழகிரி வெளிநாட்டுக்குச் செல்லும் முன்னர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த‌ பேட்டியில், கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என கூறியிருந்தார். இந்த பேட்டி அனைத்து ஊடகங்களில் வெளியிடப்பட்டது. தமிழக அரசியல் பிரமுகர்களிடையேயும், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையேயும் அழகிரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அழகிரி கருத்து குறித்து அவரிடம் தான் கருத்து கேட்க வேண்டும் என மழுப்பலாக பதிலளித்தார்.



இதற்கிடையில் தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து சகோதர யுத்தம் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் முதல்வர் கருணாநிதி வார இதழுக்கு இந்த விவகாரம் குறித்து விரிவாக பேட்டியளித்துள்ளார். அதில், தி.மு.க.,வின் தலைவர் யார் என்பதை எந்த ஒரு தனி நபரும் தீர்மானித்து விட முடியாது. அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்குக் கூட கிடையாது. கட்சிதான் தலைவர் யார் என்பதை தீர்மானிக்க முடியும், என்று கூறியுள்ளார்.



அழகிரி - ஸ்டாலின் இடையே சகோதர யுத்தம் நடைபெறுகிறதா? என்பது குறித்த கேள்விக்கு, அழகிரி - ஸ்டாலின் இடையே பூசல் எதுவும் இல்‌லை. அப்படி ஏதாவது மோதல் ஏற்பட்டால் அது என்னை மட்டு‌மே வெகுவாக பாதிக்கும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அழகிரி சொன்னது அவருடைய சொந்த கருத்து என்றும் ஜனநாயக நாட்டில் அவரவர் சொந்த கருத்துக்களை தெரிவிக்க முழு சுதந்திரம் உண்டு, என்றும் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக