வியாழன், 1 ஏப்ரல், 2010

மணவை முசுதபா நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்: முதல்வர்



சென்னை, மார்ச்.31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார். 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்', 'கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' போன்ற இவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளன. தமிழக அரசின் 'கலைமாமணி விருது', 'திரு.வி.க.விருது' ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.இவர் இரண்டு தொகுதிகள் கொண்ட 'அறிவியல் கலைச்சொல் அகராதி” உட்பட பல நூல்களைப் படைத்துத் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். தற்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள மணவை முஸ்தபா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தமது உடல்நிலை குறித்து எடுத்துரைத்துத் தம் மருத்துவச் செலவிற்குப் பயன்படும் வகையில் தாம் படைத்துள்ள அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி, தமக்கு பரிவுத் தொகை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்று அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

கூரியர் இதழ் தமிழில் சிறப்பாக வெளிவந்ததற்கும் அறிவியல் தமிழ் குறித்த விழி்ப்புணர்வு ஏற்படுவதற்கும் மணவை முசுதபா அருந் தொண்டாற்றியுள்ளார். எனினும் அவர் வெளியிட்டுள்ள அகராதிகளில் புதுச் சொல் புனைவு எதுவும் இருக்காது. ஆனால் ஏற்கெனவே வந்துள்ள அகராதிகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள செயல் பாராட்டிற்குரியது. இவற்றை நாட்டுடைமையாக்கியிராவிட்டாலும் பாடநூல்கழக அகராதிகள் முதலான பிற அகராதிகளில் இருந்து அவற்றை நாம் பயன்படுத்த இயலும். வேறு வகையில் மருத்துவ உதவி அளிததிருக்கலாம். எனினும் முதல்வரின் பரிவான செயலுக்குப் பாராட்டுகள். மணவையாரின் அகராதிகளை வெளியிடுவோரே அருள் கூர்ந்து அவ்வாறே வெளியிடாமல் தக்க சொல்லாக்கங்களுடன் வெளியிடுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 2:41:00 AM

கலைஞர் காப்பீடுத் திட்டம் எனப்து பல்வேறு விதிமுறைகளை உள்ளே அடக்கி வெளியே பகடாகத் தோன்றும் ஒரு ஜோடிப்புத் திட்டாம் என்பது கலைஞருக்குத் தெரிந்திருக்கிறது. எனவே தான் தனது திட்டத்தின் கீழ் முச்தபாவைக் கொண்டு வந்து தர்ப சங்கடப் படுத்த விரும்பவில்லை போலும்!

By கேபா
4/1/2010 1:09:00 AM

கலைஞரின் தமிழ்பணி உதவிக்குப் பாராட்டுகள்.அரசு இன்னும் அவருக்கு வேண்டிய மருத்துவ வுதவி செய்ய முன்வர வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் எழுத்தாளர் மணவை முஸ்தபா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும்,நிறைந்த ஆரோக்கியத்தையும்,நல்ல வுடல் நலத்தை வழங்கி தமிழுக்கு மென்மேலும் பல சேவைகளை புரிந்திட நல்லருள் புரியவேண்டும் என பிரார்திக்கிறேன்.

By Ibnusalih.Abudahbi,uae.
3/31/2010 11:18:00 PM

கலைஞர் வாழ்க!

By மு.இளங்கோவன், புதுச்சேரி
3/31/2010 10:03:00 PM

a good scholar of our time should be well patroned by the government on the ocassion world tamil chemozhi conference.

By r.shankar
3/31/2010 8:31:00 PM

Mr.Ameerdeen, could you provide his contact tel.no or any contacts , if possible?

By hameed, abu dhabi
3/31/2010 7:11:00 PM

manavai musthafa avarkaLukku bana vasathi ullavarkal yaaraavadhu uthavinaal enna ava maarrkkaththukkaaka niraiya buththakangkal ezuthiyirukkiraar

By AMEERUDEEN
3/31/2010 5:52:00 PM

why don't you cover his medical treatment under Kalaigan Insurance scheme. Such famous writer begs to the Government for help, and the government is paying for his books instead of caring him freely.

By ARUL
3/31/2010 5:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக