திங்கள், 29 மார்ச், 2010

வரும் தேர்தலிலும் இதே கூட்டணி': ஜி.கே.வாசன்




தம்மம்பட்டி, ​​ மார்ச் 28: தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ​ சட்டப் பேரவைத் தேர்தலிலும் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்று,​​ மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில்​​ செய்தியாளர்களிடம் தெரிவித்தது:தமிழகத்தில் நடந்துவரும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்,​​ எதிர்காலத்தில் இளைஞர் காங்கிரûஸ முதல் இயக்கமாக மாற்றும்.​ இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகங்களின் வர்த்தகங்களையும் உயர்த்தும் வகையில் துறைமுகங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.​ 200 சிறிய துறைமுகங்களை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன​ என்றார் ஜி.கே.வாசன்.
கருத்துக்கள்

இதே கூட்டணி என்றால் ஊழலும் ஊழலும் கை கோக்கும்;இனப் பகைவரும் இனப் பகைவரும் இணைவர்;மொழிப் பகைவரும் மொழிப் பகைவரும் ஒன்று சேர்வர் என்கிறாரா? இருக்கலாம் ஆனால், கட்சிகள் மாறலாம். எந்த அணியில் இருந்தாலும் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டாலே தமிழர்களு்க்கு விடிவு என்பதைத் தமிழ மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். எனவே, தன்மானமும் இனமானமும் கூட்டணி வைத்தால், ஊழல் கூட்டணி உலகை விட்டே ஓடும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 3:10:00 AM

தொடர்ந்து அதே சாம்பார் சாதம் போட்டீங்கன்னா....மக்கள் வெறுத்துப் போயி ....நாக்குக்கு ருசியா மீன் குழம்பு சாப்பிட வேறு ஹோட்டலுக்கு போயிடுவாங்க !!! ...அப்புறம் நீங்க இழுத்து மூட வேண்டியதாகிப் போகும் !!!

By rajasji
3/29/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக