பெயரை மாற்றிப் பயனில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். நிலைமைகளை மாற்றாத வரை எந்தப் பெயர் சூட்டினாலும் அந்தப் பெயருக்கே வழக்கமான பொருள் சேர்ந்து விடும். ஒடுக்கப்பட்டவர்களைக் கடவுளின் குழந்தைகள் என்று கூடப் பெயர் மாற்றம் செய்தனர். அவர்களின் வாழ்க்கை உயர்ந்ததா? எனவே, ஊடகங்களில் கேலியாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுத்தும் வாழ்க்கை நிலைகளை உயர்த்தியும் தன்னம்பிக்கை அளித்தும் ஊனத்தைப் போக்கி மாற்றுத்திறனைப் பெருக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/28/2010 4:35:00 AM
ஒரு ஊர்ல ஒரு 80 வயது கிழவனுக்கு ஏகப்பட்ட பெண்டாட்டிங்க , எண்ணற்ற பிள்ளைங்க , கணக் கற்ற பேரப பிள்ளைங்க, ஏராளமான எடுபிடிகள் ..இப்படிப் பட்ட சூழலில் அந்த வீட்டுக்கு சமைக்க உப்பு தேவைப்பட்டது ! சின்னப் பயலுக்கிட்ட 10 காச கொடுத்து வாங்கியாடான்னா ஒரு நொடில வாங்கி வந்துடுவான்! அப்படி செய்யாம அந்த கிழவன் கையில 10 காச கொடுத்தாங்க...கிழவன தூக்கி ஒரு பல்லக்குல வச்சாங்க....ஒரு பத்து.. பன்னண்டு பேரு பல்லக்க தூக்குனாங்க..ரோட்டுல கார் சைக்கிள் என்ன ...எவனும் நடக்க அனுமதி இல்லை !!! இப்படியாக ஒரு பத்து பன்னண்டு மைல் பயணம் பண்ணி கிழவன் , உப்பு வாங்கி வந்த கதைய விவரிக்க நேரம் இல்லை ....அனுமதியும் இல்லை !!! அனால் மக்கள் மட்டும் வாயப் பொளந்துகிட்டு பாத்து ஆச்சரியப் பட்டுப் போனாங்க!...பாருடா இந்த வயசுல இந்தக் கெழவன் என்னமா குடும்பத்துக்கு உழைக்கிறான் என்று .... இப்படித் தான் தெரியுது எனக்கு.... இந்தக் கருணாநிதி டெல்லிக்கு பயணம் பண்ணுறது !!!...ஆட்சி அதிகாரத்துல உட்கார்ந்து இருப்பது !!!
3/28/2010 1:50:00 AM
சரியாகச் சொன்னீர்கள்,நண்பரே!ஒரு ஊனமுற்றவனின் அனுபவமாகச் சொல்கிறேன் -இப்போதைய அரசில் (முதல்வரைத்தவிர )எவருக்கும் மனத்தில் ஈரமில்லை.
பதிலளிநீக்குஒட்டடைக்குச்சிக்குப் பட்டுக்குஞ்சம் கட்டிவிடுவதைப்போல 'மாற்றுத்திறனாளிகள்'என்று பெயர் மட்டும் கவர்ச்சியாக வைத்து விட்டு,எங்களைப்பிச்சைக்காரர்கள் அளவிலேயே இந்த அரசு ந்டத்திக் கொண்டிருக்கிறது-இதுதான் தமிழக நடப்பு!