திங்கள், 29 மார்ச், 2010

ஈழத்தில் நிலத்தையும்,​​ தமிழகத்தில் மொழியையும் இழந்து கொண்டிருக்கிறோம்: கவிஞர் காசி ஆனந்தன்



சென்னையில் சனிக்கிழமை எழுகதிர்}தமிழ் நிலம் இணைந்து நடத்திய விழாவில் "தமிழர் இந்தியர் இல்லையா?' என்ற நூலை மாலைமுரசு நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட தொழிலதிபர் சந்திரேசனார் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளியை நடத்தும் தேவதாசு,​​ நூலாசிரியர் அறுகோபாலன்,​​ தில்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன்.
சென்னை,​​ ​ மார்ச் ​ 28:​ ​ ஈழத்தில் நிலத்தையும்,​​ தமிழகத்தில் மொழியையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று கவிஞர் காசி ஆனந்தன் கூறினார்.சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற "தமிழர் இந்தியர் இல்லையா?',​ "தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?',​ "வாழ்வியற் சொல் அகரமுதலி' ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்.இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது.26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது.தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ் ஈழம் நிமிர்ந்து நிற்க்கும்.இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும்,​​ ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.​ தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​ தமிழ் ஈழத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்.தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​ இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.
கருத்துக்கள்

உண்மைதான்.இந்நிலை மாறி இன்னிலை தோன்ற திமுக எதிர்க்கட்சியாக வேண்டும். காங்கிரசுக் கட்சி என்பது இருந்த இடம் தெரியாமல் மறைய வேண்டும். தமிழுணர்வாளர்கள் இந்தியக் கண்டத்தின் பிற பகுதிகளிலும் தஙக்ள் பரப்புரைகளை மேற் கொள்ள வேண்டும். உரிமையை விற்கும் பரத்தமை அரசியல் மாற வேண்டும். தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும். தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும தராத கட்சிகளைத் தூக்கி எறிய வேண்டும். கட்சித் தலைமைக்குக் கொத்தடிமைகளாக விளங்கும் நிலை உடைக்கப்பட வேண்டும். சிறுபான்மைச் சாதிகளிடம் அடிமையாக உள்ள தமிழ்நாடு மீள வேண்டும். இவை இயலும் எனில் எல்லாம் இயலும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 2:45:00 AM

TN CM is busy in spending his SPECTRUM Earning of Rs 50,000 CRORES in PENNAGARAM. He has time only to write scripts and attend film functions. SONIA used SPECTRUM to blackmail KARUNA and ensured EELAM TAMILS are KILLED IN EELAM. NOT ONLY TRANSNATIONAL EELAM Govt, TRANSNATIONAL TAMIL GOVT is the only solution

By BOODHI DHARMA
3/29/2010 1:32:00 AM

இந்தியத் தமிழர்களின் மனதில் தன்னம்பிக்கை வளரவேண்டும்.தன்னால் எந்தத் தடையையயும் உடைக்கமுடியும் என்ற எஃகு மனம் வேண்டும்.எனது வாழ்வு என் கையில் என்ற உறுதி வேண்டும்.அனால் இவர்கள் உஞ்சவிருத்திகளின் வழிகாட்டுதலுக்கு ஆளாகி, மத நம்பிக்கையால் தன்னம்பிக்கை,தன்மானம் (மதம் என்பது சார்புத்தன்மையும்,கையாலாகாத் தன்மையும் ஏற்படுத்தும்)இழந்து, சாதிய உனர்வுகளுக்கு ஆளாகி இருக்கும் இந்த நிலையில் இது சாத்தியக்கூறுதானா.கடவுள் நம்பிக்கை என்பதே ஒரு விதப் பயத்தின் விளைவுதான்.பூஜை புனஸ்காரங்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை எப்படித் தமிழனுக்கு உணர வைப்பது.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று அடி வயிற்றினில் இருந்து உணர்வுப் பூர்வமாக முழங்குவான், அடுத்த நிமிடம் பார்ப்பனர் மூலம் பரிகாரம் தேடுவான் மறத்தமிழன்.கலர் துண்டுகளுக்கு, அதிலும் மஞ்சள் துண்ட்டுக்கு தமிழகத்தில் இராசி அதிகம்.தன் அடிமைகளை (நடிகர்,நடிகயரை)தன் எஜமானர்கள் ஆக்குவதில் இந்தியத் தமிழர்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. பஜனை செய்வோம் கண நாமம், அடிமையாய் இருந்து கொண்டு பஜனை செய்வோம் கண நாமம்.

By அன்பன்
3/29/2010 1:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக