செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை



சென்னை, செப். 14: பேரறிஞர் அண்ணா படித்த பள்ளி, இப்போது அவல நிலையில் காட்சி தருகிறது. செவ்வாய்க்கிழமை (செப்.15) அவரது நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தமிழக அரசு, இந்தப் பள்ளியின் மீது கவனம் செலுத்துமா? என அனைத்துத் தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். பேரறிஞர் அண்ணா, சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் இருக்கும் பச்சையப்பன் கிளை நடுநிலைப் பள்ளியில் தமது தொடக்கக் கல்வியைப் படித்தார். அவர் படித்தபோது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அந்தப் பள்ளியில் இருந்தது. ஆரம்பப் பள்ளியாக இருந்து, பிறகு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு பெற்றது. இப்போது, பச்சையப்பன் கிளை நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கால ஓட்டத்தில் தேங்கியது... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பள்ளியில் 400 முதல் 450 மாணவர்கள் வரை படித்து வந்தனர். ஆங்கில மோகம், மெட்ரிக் பள்ளிகளின் அதிகரிப்பு போன்றவற்றால் அண்ணா படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அப்போது, "அண்ணா படித்த பள்ளி' என்று மாணவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கவோ, பள்ளியின் தரத்தை கூட்டவோ எந்த விதத்திலும் அரசு முயற்சிக்கவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ""நாங்கள் வேலை செய்தபோது, 14 ஆசிரியர்கள், 450 மாணவர்கள் இருந்தனர். இப்போது அது மிகவும் குறைந்து விட்டது. அண்ணா இருந்திருந்தால் இந்தப் பள்ளி மேம்பட்டிருக்கும். சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயில 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. பச்சையப்பன் பள்ளியையே உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் எண்ணிக்கை உயரும்'' என்கிறார் அந்தப் பள்ளியில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஏகாம்பரம். என்ன சிக்கல்? நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு பல விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்புச் செல்ல குறைந்தது 50 மாணவர்களாவது இருந்தால், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தலாம். மேலும், பள்ளிக்கான நிலம், பொது மக்கள் பங்களிப்புடன் குறிப்பிட்ட அளவுத் தொகை இவற்றையும் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். இது அரசு விதி. காலத்தின் சுழற்சியில், அண்ணா படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அண்ணா மீதுள்ள ஈர்ப்பைக் காட்டி எண்ணிக்கையை அதிகரித்து இருக்க வேண்டும். "அரசு நினைத்தால் நிலம் மற்றும் பணத்துக்கான ஏற்பாடுகளை எளிதாகச் செய்யலாம். ஆனால், அதைச் செய்ய அரசு தவறிவிட்டது' என்று குற்றம்சாட்டுகின்றனர் காஞ்சி நகர மக்கள். ""அரசு நிதியுதவிடன் 6 முதல் 8 வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 4 ஆசிரியர்கள், 126 மாணவர்கள் உள்ளனர். 9 மற்றும் 10-ம் வகுப்புகளைத் தொடங்கினால் அரசு நிதியுதவி கிடைக்காது. அரசு நிதியுதவி வழங்கினால், இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தலாம். இதன் மூலம் சின்ன காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன் பெறுவர்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.வடிவேலு. அண்ணாவின் புகழைப் பாட... அண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துவரும் அவரது உடன்பிறப்புகள் அவர் படித்த பள்ளியைப் பற்றி கவலைப்படவே இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் காஞ்சிபுரம் நகர வாசிகள். அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்தத் தருணத்தில், அவர் படித்த ஆரம்பப் பள்ளியை சீரமைக்க அரசோ அல்லது பச்சையப்பன் அறக்கட்டளையோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துக்கள்
பேரறிஞர் அண்ணா படித்த பள்ளியை உடனே சீராக்க வேண்டும். அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சீராக்க வேண்டும். இவற்றைத் தலையாய தொண்டாகக் கருத வேண்டும். விழா என்ற பெயரில் மேற்கொள்ளும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தாலேயே பல நல்ல திட்டங்களை மேற் கொள்ளலாமே! அண்ணா இன்றிருந்தால் தமிழும் விடுதலை அடைநதிருக்கும்! ஈழத் தமிழர்களும் விடுதலை யடைந்திருப்பார்கள்! காங்.கின் காலடியில் தமிழகம் அடகு வைக்கப்பட்டிருக்காது. குடும்பப் பதவிகளுக்காகத் தன்மானத்தை இழந்து தமிழ் மானத்தைச் சிதைக்கும் அவலங்கள் அரங்கேறியிருக்காது. காங்.ஐ வீழ்த்திய அறிஞரின் வழியில் கழகக் கண்மணிகள் சென்று வெற்றி காணட்டும்.! வாழ்க அண்ணாவின் புகழ்! வாழிய தமிழ்நாடு! வாழிய தமிழ் ஈழம்! வாழிய மக்கள்! ஓங்குக உலக ஒற்றுமை!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 2:36:00 AM

Good Job Mr. Karunanithi and Miss J.Jayalalitha

By Sami
9/15/2009 2:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கையில் கருணா-சந்திரகாந்தன் குழுவினரிடையே மோதல்



கொழும்பு, செப்.14- இலங்கையில் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், இத்தாக்குதலை கருணா தலைமையில் செயல்படும் குழுவினரே நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது..

மோட்டார் சைக்கிகளில் வந்த சிலர் உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகி யோகநாதன் என்பவரையும் அவரது ஆதரவாளர்கள் மீதும் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும். இதில், அவரும் அவரது வாகன ஓட்டுநர் மற்றும் சில உதவியாளர்களும் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, யோகநாதனும் வாகன ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இத்தாக்குதலை கருணா தலைமையிலான குழுவினரே நடத்தியுள்ளதாக சந்திரகாந்தன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கருத்துக்கள்

துரோகிகள் அடித்துக் கொண்டு சாகட்டும்! அதைக் கண்டு இருக்கின்றவனாவது விழித்துக் கொள்ளட்டும்! வெல்ல வேண்டியது இந்தியத்தையும் சிங்களத்தையும் எனப் புரிந்து கொண்டால் துரோகத்திற்கு இடம் தர மாட்டார்கள். என்றாலும் துரோகத்தலைவர்கள் முதலில் ஒழிய வேண்டும் என்பது இயற்கையின் கட்டளை. வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 2:21:00 AM

As we r divided in Tamil Nadu, they r divided in Tamil Eelam. Reason behind this is RAW and DELHI goverment. RAW always successfully has divided Tamils so they can carry out their own Ajenda. That their goal is rule Tamils and keep them slave(oppressed) whether they r from Tamil Nadu or Tamil Eelam. These poor fellows Karuna and Shandrakanthan are victims. People who know Tamil's issues and conflict understand this. Other ill informed guys like Siva's reaction is understandable. In a wider array, blame is on India for Tamils problems. India created it. India maintain it. Not only in Tamil Eelam but also in Tamil Nadu too. Remember folks, India is a creation of Brits. Tamils had never been part of wider Hindustan.

By Congress never rule Tamil Nadu
9/14/2009 8:14:00 PM

SIVA, YOU DON'T KNOW HOW YOUR CM KALAINJAR DITCHED TAMILS IN TAMIL EELAM. YOU DON'T KNOW HOW YOUR KAMARAJAR DITCHED TAMIL BY NOT OPPOSIBG HINDI IMPOSITION IN 1965. HE LOST ELECTION BECAUSE OF THIS. DO YOU KNOW LAW & ORDER CONDITION IN TAMILNAD Mr.INTELLIGENT?

By Paris EJILAN
9/14/2009 7:59:00 PM

siva well said .you can see clearly the way they posting the comments.

By kuppu
9/14/2009 6:12:00 PM

I told this is general concept,for one matter,different thinking.Each of the people cannot accept another answer,then how can get tamililam.but i will sure and confident "DEFINITELY GET TAMILILAM".PLEASE "IF you are not interest plz move away,don't confuse other" thank you

By raj
9/14/2009 6:02:00 PM

வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ்நாட்டின் அசல் வித்துக்கள் இப்பொழுது அழுகிக்கிடக்கின்றன. காசுக்கு அலைபவர்களே இன்று தமிழர் வாழ்வை நிர்ணயம் செய்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் உள்ள தமிழன் என்று சொல்லிக்கொண்டு அலைபவர்களை நம்பாமல் கருணா போன்றவர்களை மீறி நீங்கள் இலங்கையை வெற்றி கொள்ள வேண்டும்.

By sbala
9/14/2009 5:46:00 PM

இலங்கையானாலும், தமிழ்நாடானாலும் தமிழர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் நம் மீது இந்தியையோ சிங்களத்தையோ திணிக்க எவனும் துணிந்திருக்க முடியுமா? ஒளரங்கசீப் கூட தமிழ்நாட்டை ஆளவில்லையே. ஆனால் உள்ளிருந்தே கழுத்தறுப்பவர்கள் தன் குடும்ப நலனுக்காக இனத்தை காட்டிக்கொடுப்பதுதானே நம் வரலாறு. கருணாவின் இனதுரோகத்தை யாராவது மறைக்கமுடியுமா? மானில முதலமைச்சராக இருக்க அவர் செய்துள்ள துரோகத்தை சரித்திரம் மன்னிக்குமா? இனியாவது இலங்கைத்தமிழர்கள் துரோகிகளையும் அடுத்துக் கெடுப்பவர்களையும் நம்பாமல் கவனமாக தம் வழியை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்தியத்தமிழர்கள் திரைப்படம் பார்ப்பதிலும், போதைப் பொருட்களிலும், ஆடம்பரங்களிலும், காமக்களியிலும் மூழ்கி தன் மான மரியாதையை இழந்து காசுக்காக எதையும் செய்யும் ஈன இனமாக மாறிவிட்டனர். அவர்களை நம்பியிருப்பதில் பயனில்லை. இப்பொழுது தமிழ் நாட்டின் அசல் வித்துக்கள் அழுகிவிட்டன. தமிழ்நாட்டில் பிறந்தவன், தமிழ் பாரம்பரியத்தில் வளர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள நானே வெட்கப்படுகிறேன். என் இலங்கை சகோதரனே உனக்காக என்னால் ஏதும் செய்ய இயலவில்லையே - நீ மறுபடி தளிர்த்து, துளிர்த்து, இலங்கையை வெற்ற

By sbala
9/14/2009 5:41:00 PM

nice story MK samy. Good timing story.

By senthilkumar
9/14/2009 4:42:00 PM

dai siva. varalaru therinchu pesu !!! illatti summa iru enn a#$#%@#^%@#

By ravi
9/14/2009 4:37:00 PM

Please Dinamani Readers - Don't answer anything about this fellow Siva's Comment; He doesn't know anything abt Ellam Issue (all time). Just Neglect him. We have a wonderful blog provided by Dinamani to discuss in constructive way.

By raja
9/14/2009 4:23:00 PM

DAI Panny siva! veena poona naayee wat u know abt india and s.indian media? nee supramaniya swami alla?

By PULEE
9/14/2009 3:57:00 PM

Nantri shan swiss

By shan
9/14/2009 3:50:00 PM

அண்ணே சிவா அண்ணே, காட்டில் சிங்கம் ஒன்று இறுமாப்புடன் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது காட்டில் வசித்த விலங்குகள் எல்லாவற்றிடமும் சென்று "நான்தான் இந்த காட்டின் ராஜா" என்று கூறியது. எல்லா விலங்குகளும் அதனை ஆமோதித்தன. கடைசியாக ஒரு யானையிடம் சென்று கூறியது. கோபமடைந்த யானை தனது பின்னங் காலால் ஒரு உதை விட்டது. சிங்கம் தொலை தூரத்தில் சென்று விழுந்தது. வலியுடன் மீண்டு வந்து யானையிடம் கூறியது 'தெரியாவிட்டால் தெரியாது என்று கூற வேண்டியதுதானே" என்று. அது போல உங்களுக்கும் இலங்கை பிரச்சனை என்னவென்று தெரியாவிட்டால், சற்று ஒதுங்கியிருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

By MKSamy
9/14/2009 3:46:00 PM

தமிழன் என்று வந்துவிட்டாலே அவன் ஒற்றுமையில்லாதவனாகி விடுகிறான். ஆகையால்தானே உலகில் எங்கு சென்றாலும் தமிழன் அடி வாங்கிக்கொண்டிருக்கிறான். அதற்கு காரணம், பணம் பதவி. காட்டிக் கொடுப்பவர்களால்தான் தமிழினம் அழிகிறது என்பது வரலாறு.

By மங்கைதாசன்
9/14/2009 3:43:00 PM

கிழக்கை அபிவிருத்தி செய்யவே அரசாங்கத்துடன் இணைந்ததாக மார்தட்டிக் கொண்டார்கள். கருணாநிதியின் "வடக்கு வழங்குகிறது தெற்கு வாழ்கிறது" என்பது போல "மேற்கு கொடுக்கும் கிழக்கு வாழும்" என்றார்கள். நாங்கள் வேடிக்கை பார்ப்போம். மக்கள் நிலைமைதான் கவலைக்கிடம்!

By MKSamy
9/14/2009 3:37:00 PM

இலங்கை தமிழன் என்றைக்கு ஒற்றுமையாக இருந்தான்? நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டியில் போட்டு கொடுப்பது கா ட்டிகொடுப்பது,போட்டுத்தள்ளுவது, மிரட்டல்,கடத்தல்,கப்பம் வாங்குதல் என்று எல்லா குற்றங்களையும் செய்வது, பிறகு அதற்க்கு இந்தியாவை குற்றம் சொல்வது, இது தான் அவர்கள் சித்தாந்தம்.

By siva
9/14/2009 3:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 14 செப்டம்பர், 2009

தலையங்கம்: நல்லதொரு தொடக்கம்!



ராகுல் காந்தியின் மூன்று நாள் தமிழகச் சுற்றுப்பயணத்தின் விளைவாகத் தமிழகக் காங்கிரஸின் கோஷ்டிகள் மறைந்து, ஒற்றுமை ஏற்பட்டுவிடும் என்று ராகுல் காந்தியேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார். மூன்று நாள் தமிழகப் பயணத்தின் விளைவாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக வளரும் அளவுக்குப் பலம் பெற்றுவிட்டது என்றும் யாரும் நம்பவில்லை. ஆனால், நிச்சயமாக அவரது சுற்றுப்பயணம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. கோஷ்டிப் பூசல் மட்டுமே காங்கிரஸின் பலவீனத்துக்குக் காரணம் அல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட காங்கிரஸ் கட்சியிலேயே, ராஜாஜி கோஷ்டி என்றும் சத்தியமூர்த்தி கோஷ்டி என்றும் காங்கிரஸ் செயல்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகும் ராஜாஜி, பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம் போன்றோர் ஓர் அணியாகவும், காமராஜ், கக்கன், ஆர். வெங்கட்ராமன் போன்றோர் இன்னோர் அணியாகவும்தான் செயல்பட்டனர். ஆனால், இந்தக் கோஷ்டிப் பூசல் கட்சியைப் பலவீனப்படுத்தாதற்குக் காரணம், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கட்சி, தேசம் என்று வரும்போது அந்தத் தலைவர்கள் கைகோர்த்துக் கொண்டனர் என்பதுதான். தமிழகத்தில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கோஷ்டிகளாகத்தான் இயங்கி வருகிறது. இதை உள்கட்சி ஜனநாயகத்தின் ஆரோக்கியமான வெளிப்பாடு என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வது உண்டு. இந்தக் கோஷ்டிப் பூசல்கள் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பல மாநிலங்களிலும் தடையாக இருப்பதில்லை. அதற்குக் காரணம், காங்கிரஸ் என்பத0ு தனது தொண்டர்களையும், தலைவர்களையும்விட அந்தக் கட்சியின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் வாக்காளர்களை நம்பிச் செயல்படும் இயக்கம் என்பதால்தான். தமிழகத்திலும்கூட, திமுக 1972-ல் பிளவுபடாமல் இருந்திருந்தால், ஒருவேளை 1977-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கக்கூடும். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கக் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய இயக்கமான காங்கிரஸ்தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜின் மறைவுக்குப் பிறகு அடித்தட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற, வட்டார அளவில் செல்வாக்குப் பெற்ற தலைவர் எவரும் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இல்லாமல் போனதுதான், காங்கிரஸ் கட்சி எதிர்கொண்ட மிகப்பெரிய பின்னடைவு. மேலும், 1969-ல் ஏற்பட்ட காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு, மாநில அளவில் எந்தத் தலைவரும் செல்வாக்குப் பெற்றுவிடாமல் அந்தக் கட்சியின் மத்தியத் தலைமை பார்த்துக் கொண்டதும் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்திவிட்டது. திமுக மற்றும் அதிமுக என்று மாறிமாறி கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றி பெறும் மனப்போக்கு அதிகரித்ததும், வெற்றி பெற்ற தொகுதிகளையே மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற்றுத் தக்க வைத்துக் கொள்வதால் பல தொகுதிகளில் அடிமட்ட அமைப்போ, செயல்பாடோ இல்லாமல் போனதும்கூட காங்கிரஸýக்கு ஏற்பட்ட பலவீனத்துக்கு மிகப்பெரிய காரணம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இந்தப் பலவீனம் ஏற்படாததற்குக் காரணம் காங்கிரஸ் தொகுதிகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்ததுதான். தில்லி மேலிடத்தின் நியமனங்களும், தில்லி தலைமையிடம் உள்ள நெருக்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே மீண்டும் மீண்டும் போட்டிபோட்டு வெற்றியடையும் போக்கும் காங்கிரஸ் கட்சிக்குத் தோரணம் கட்டக்கூடத் தொண்டன் இல்லாத நிலைமையை ஏற்படுத்திவிட்டது. ஒரு கட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை என்கிற பெயரில் போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட கேலிக்கூத்து காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடக்கக்கூடிய நகைப்புக்கு இடமான ஒன்றாகத் திகழ்ந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் காந்தியின் மூன்று நாள் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கை என்பது முறையாகத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய அடையாள அட்டையுடன் நடத்தப்படுகிறது. வட்டம், மாவட்டம் என்றெல்லாம் இல்லாமல், சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் மக்களவைத் தொகுதி என்று இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்குப் புது வடிவம் தரப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தனியார் நிறுவனத்திடம் உறுப்பினர்கள் சேர்க்கை சரிபார்க்கும் பணி தரப்பட்டு போலி உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்களின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மொத்தத்தில், உண்மையான உள்கட்சி ஜனநாயகம் இளைஞர் காங்கிரஸில் ஏற்பட ராகுல் காந்தி வழிகோலி இருக்கிறார். இதன் தொடர்விளைவாக, தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்தியக் காங்கிரஸிலும் நூறு சதவிகித உள்கட்சி ஜனநாயகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறார். ராகுல் காந்தியின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் சாத்தியமா? இதனால் எல்லாம் காங்கிரஸ் புத்துயிர் பெற்று திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வலிமை பெற்றுவிட முடியுமா? இப்படி சந்தேகப்படுபவர்கள் உள்கட்சி ஜனநாயகத்தின் எதிரிகள். மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். ராகுல் காந்தி இளைஞர்கள் என்கிற காட்டுக்குள் ஒரு தீப்பொறியைப் பற்ற வைத்திருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!

கருத்துக்கள்

திருவள்ளுவர் குறிப்பிடுவது போன்று எந்த அமைப்பையும் உட்குழுக்கள் பாழ் செய்யும். ஆனால், காங்.கிற்கே உள்ள ஒழுகலாறு இதுதான். இதனை மாற்ற முடியாது. மேலும், நேருவால் திணிக்கப்பட்ட குடும்பப் பரம்பரை உரிமையையும் வழி வழியாகப் பதவிநலத்தைத் துய்க்கும் முறைகேடான போக்கையும் வழி வழியே பெற்றுள்ள இராகுல் எதையும் சொல்வதற்கு உரிமை பெற்றவர் அல்லர். தனது பதவிகளைத் துக்கி எறிந்து விட்டு இது போன்ற கருத்துகளைத் தெரிவித்தால் ஏற்றுக் கொள்ளலாம். எனவே ஆசிரியுவரையில் சில உண்மைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அதிகார வலுவால் பல்கலைக்கழகங்களில் கட்சி அரசியலைப் புகுத்திய இராகுல் வருகையை ஆசிரியருரைக்கு ஏற்றதாகப் பெருமைப் படுத்தியிரு்கக வேண்டா. கழகங்கள் கதிகலங்கியுள்ளதாக இதழ்கள் கற்பனை மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் இராகுல் வருகை கழகங்களை எந்த வகையிலும் பாதிக்காது. இராகுலின் வருகையைப் பெருமைப்படுத்திய தினமணி, பல்கலைக்கழகங்களை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்தும் ஆசிரியவுரை எழுத ‌வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/14/2009 7:16:00 AM

The party democracy in India is in such bad state precisely because of these kind of good words towards a family of a dynasty. What made him to be Gen. Sec. of AICC he just being the son of the dynasty? Now he wants to through some democracy into his party just make it more stronger to win elections. We don't need to give importance to this guy.In fact what should be encouraged is regional parties in all states and follow UPA/NDA model that will do more good to all Indian states.

By sakthivelu
9/14/2009 6:39:00 AM

iT IS ONLY EYEWASH DONOT GET POWER IN ANY TIME IN TAMILNADU DONOT SMELL THE PALASTIC FLOWER

By avudaiappan
9/14/2009 6:38:00 AM

Congrats Rahul..Dinamani I agree with you. I dont agree with congress on Sri Lankan issue however we should support his efforts on cleaning the political system. In fact, Actually all parties should do the same

By Parthipan
9/14/2009 6:05:00 AM

Is this topic fit for THALAYANGAM?

By muni
9/14/2009 5:53:00 AM

Dinamani Editor: All his visit has done is to divide the Congress party. You are not able to see that. If what you say is correct, the Congress must contest elections in Tamilnadu independently. All his visit has done is to ensure dynasty, and the dictatorship of his family continues. This guy wants rule by dynasty only for Feroz Khan family, and not for others.

By Ganesh
9/14/2009 5:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *